Thursday, December 5, 2019

தமிழகத்தில் ஆபாசம் படங்கள் பார்ப்பவர்களில் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?


ஆபாச வீடியோ பார்த்தால் கைது; 'கிடுக்கிப்பிடி'க்கு  போலீஸ் தயார்


அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள்,நீதிபதிகள், மற்றும் அதிகாரப் பவரில் இருப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது அதிகாரப் பூர்வமற்ற தகவல் என்றாலும் மறைமுகமாக செயலாக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன்.



இன்றைய தமிழக தலைவர்களில் ஒருவர் தன் கட்சியின் தலைவர் இறந்ததால் முதல்வர் ஆனவர் இன்னொருவரோ தன் கட்சியின் தலைவர் இறந்ததால் கட்சியின் தலைவர் ஆனவர். இவர்களை பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் அரசாங்க வேலை கொடுத்து அரசு வேலைக்கு வந்தவர்கள் மாதிரிதான் இவ்ரகளும் என்று எனக்கு தோன்றுகிறது




இடிந்து விழுந்த சுவர் இஸ்லாமியரின் வீட்டின் சுவராக இருந்தால் இந்நேரம் தமிழகம் கலவரப் பூமியாக இருந்திருக்கும் சங்கிகளுக்கு கொண்டாட்டமாகவும் இருந்திருக்கும்

அந்த பிரிய்ங்கா ரெட்டி ரேப்&கொலை மேட்டர்.........அட இவன் என்னடா இன்னும் அந்த பழைய செய்தியை பற்றி பேசிக்கிட்டு இருக்கான். அடே விளங்காத பயலே இப்ப தீண்டாமை சுவர் மேட்டர் டாப்பாக ஒடி முடிஞ்சு இப்ப வெங்காய விலை ஏற்றத்தைவிட அதை பற்றி பாராளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமனின் பேச்சுதான் இப்ப மிக அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறதுஇருக்கு அது பற்றி பேசுவியா அதை விட்டுவிட்டு இன்னும் ப்ரிய்ங்கா புடலங்காய்ய்ன்னுக்கிட்டு #ச்சே வேலையில் பிஸியா இருந்ததால் செய்தியை அப்டேட்டாக வைத்து கொள்ளாததால் கண்டவங்ககிட்ட ஏச்சு வாங்க  வேண்டியாதா போச்சு


இன்றைய செய்தி(நீதி ) : இந்தியாவில் சட்டம் செய்யாததை என் கவுண்டர் செய்யும்


செயதி :சோனியா குடும்ப பாதுகாப்பு வாபஸ் ஏன்? அமித்ஷா விளக்கம்

சோனியா குடும்பத்தால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை என்பதால் அவருக்கு கொடுத்த பாதுகாப்பை விளக்கி கொண்டார்கள் போல இருக்கு.. அதே நேரத்தில் மோடியால் மட்டும் நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்து ஏற்படும் என்பதால் அதை தடுக்கவே அவரை சுற்றி மிகப் பெரிய பாதுக்காப்பு போடுப்பட்டு இருக்கலாமோ


இந்தியாவில் நாள்தோறும் 100 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. மீதி கணக்க்கில் ஏடுத்து கொள்ளப்படவில்லை ஒருவேளை எடுத்து இருந்தால் கண் திருஷ்டிபட்டுவிடும்  என்று எடுக்கவில்லை போல இருக்கு




///சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

தீர்ப்பை கோர்ட்டு சொல்லுவதற்கு முன்பே நான் சொல்லுறேன்
சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்காத்து இதுதான் தீர்ப்பு இதை படிச்சிட்டுத்தான் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்கள் என்று என் மேல் யாரும் கம்பெளையெண்ட் கொடுக்க வேண்டாம்//


இப்படி ஒரு கருத்தை பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தேன் ஒருவேளை இதை நீதிபதிகள் பார்த்து இருப்பார்களோ என்னவோ அதனால் என் மூஞ்சியில் கரியை பூசுவதாக நினைத்து 'பசி'யை ஜாமினில் விட்டுவிட்டார்களோ என்னவோ


அன்புடன்
மதுரைத்தமிழன்

05 Dec 2019

3 comments:

  1. ஆபாச படம் பார்ப்பவர்கள் கைது.
    அதில் நடிப்பவர்களை என்ன செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. வ்யிற்றுப்பிழைப்புக்காக இந்த ஈனத் தொழிலைச் செய்பவர்களைவிட அதனை ஆதரிப்பவர்கள் இன்னும் மோசமல்லவா கில்லர்ஜி?

      Delete
  2. Enter your comment...ஆபாச படத்தை தடை செய்யவும். பதவியில் இருப்பவர்களும் பூமியில் பிறந்தவர்கள்தான். யார் செய்தாலும் தவறுதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.