Saturday, November 30, 2019

@avargal unmaigal


பேச்சிலர் பிராமண பையன்களுக்கும் முக ஸ்டாலினுக்கும் உள்ள ஒற்றுமை onnarai pakka naaledu

ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

தெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

கர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

மகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

இது போலத்தான் பேச்சிலர் பிராமண  பையனுக்கும் அவனது நண்பர்களிடம் இருந்து  அழைப்பு வரும்..




தன் வயதுள்ள நண்பர்களின் குழந்தைககளுக்கு நிச்சயதார்த்தம் கல்யாணம் என்பது போன்ற விழாவிற்கு சென்று வாழ்த்து தொ¢வித்துவிட்டு 45 வயதிலும் பேச்சிலராக இருந்து பொண்ணு தேடும் இந்த கால பிராமணப் பையன்கள் போலத்தான் நம்ம நிலைமையும் இருக்கு.என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு வரமாலா இருக்கும் ஹ¤ம்ம்ம்ம்ம்ம்ம்



நானும் ஒரு நாள் தமிழக  முதலமைச்சரக ஆவேன் அப்ப நான் பதவி ஏற்க்கும் போது நீங்கள் கட்டயமாக தமிழகத்திற்கு வர வேண்டும் சகோ

சகோ அப்ப என்ன வாழ்க்கையில் நான் தமிழகத்திற்கே வரவே முடியாதா என்ன

ஹா ஹா ஹா ஹீஹீஹீ



மோடி எளிய வாழ்க்கை வாழ்பவர் : அமித்ஷா

மதுரைத்தமிழன் : அட அப்படியா எனக்கும் இது போல எளிய வாழ்க்கை வாழ ஆசையாய் இருக்கு ஆனால் அதற்கு பணவசதியும் அதிகார பவரும் வேண்டுமாம்


தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் - நித்யானந்தா

மதுரைத்தமிழன் கருத்து :பாஜக கட்சியில் சேர்ந்து அதற்கு ஆதரவு தரப் போகிறேன் என்று நேரடியாக சொல்லவதற்கு என்ன?


மோடி ஆதரிப்பது இந்து மதத்தைதான் ஒழிய இந்துக்களை அல்ல என்பது எத்தனை பேருக்கு புரிகிறது


தொடர் தேர்தல் தோல்விகளால் கூட காங்கிரஸ் கட்சி இந்தனை அவமானப்பட்டதில்லை!  பாஜகவை ஆட்சியமைப்பதிலிருந்து தடுக்க வேண்டும் எனும் மொண்ணை காரணத்தால் "ஒருபோதும் சிவசேனா போன்ற மதவாதக் கட்சியுடன் கூட்டணி கிடையாது" என அறிவித்து கெத்தாக இருக்கும் வாய்ப்பை, தவறவிட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது.


ஒரு காலத்தில் கல்யாணத்தன்று பெண் வெட்கப்பட்டு கொண்டு இருப்பார்கள் இந்த காலத்தில் வெட்கப்படுவதாக நடிப்பது எல்லாம் டிக்டாக்கில் மட்டுமே


இந்திய மக்கள் நாட்டில் நடக்கும் அரசியல் பித்தலாட்டங்களை ஏதோ பொழ்து போக்கு நிகழ்ச்சிகளாக கருதி  அவர்களுக்கேற்றவாறு ஏதோ கருத்துக்களை பதிந்து கிண்டல் கேலிகளை பேசி வருகிறார்கள்...... அவர்களின் எதிர்காலங்கள் இன்னும் சிரழியப் போகிறது அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் இன்னும் பேராபத்திற்கு உள்ளாகப் போகிறது என்பது பற்றி சிந்திக்கும் திறன் இழந்து கொண்டிருக்கிரார்கள்.. பாவம் அவர்கள்


வாழ்க்கை என்பது

ஒரு சந்தர்ப்பம் நழுவவிடாதீர்கள்


வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்,
ஒரு கடமை -; நிறைவேற்றுங்கள்,
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்,
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்,
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்,
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

 -அப்துல்கலாம்

அரசியல் என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்,
ஒரு கடமை -; நிறைவேற்றுங்கள்,
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்,
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்,
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்,
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

அமித்ஷா


வாழ்க்கைக்கு என்று அப்துல்கலாம் சொன்னதை அரசியலுக்கு அமித்ஷா பயன்படுத்துகிறாரோ என்னவோ


இந்தியர்களின் அகராதியில் அயோக்கியத்தனத்திற்கு சாணக்கியத்தனம் என்று மறு அர்த்தம் உள்ளது போல


இந்திய நாட்டு தலைவர்கள் மட்டுமல்ல மக்களும் அயோக்கியர்களாக இருப்பதால்தான் இந்தியாவில் நடக்கும் அயோக்கியதனங்கள் எல்லாம் சாணக்கியத்தனம் என்று அழைக்கப்படுவது மட்டுல்ல அற்புத அதிசயங்கள் என்று புகழாராம் சூட்டப்படுகின்றன.


பயிர்கள் பாதுகாப்பாக இருக்கனூம் என்று இந்தியாவில் அதற்கு நிறைய மருந்து அடிக்கிறார்கள் அது மனிதனுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை என்று யாரும் உணர்வதாக தெரியவில்லை


நஷ்டத்தில் நடக்கிற பொதுத்துறை நிறுவனங்களை என்ன செய்தால் லாபகரமாக நடத்தலாம் என்று தெரியாத தலைவர் மோடியும் நிர்மலா சீதாராமனும்  நாட்டை வல்லரசாக்க போகிறாரர்களாம் அதையும் இந்த முட்டாள் ஜனங்கள் நம்பிக்கிட்டு இருக்கிறது


 இந்தியாவின் தேசிய தலைவர்கள் தமிழக மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படமாட்டார்கள் இப்போது இலங்கையில் புதிய அதிபர் தேர்ந்தெடுத்தற்கு பின் தமிழக தலைவர்கள் இலங்கை மக்களுக்காக கவலைப்பட்டு டிராமக்களை பலவற்றை அரேங்கேற்று முயற்சிகளில் ஈடுபடுவதால் தமிழகத்தில் வசிக்கும் மக்களை பற்றி கவலைப்படமாட்டார்கள்.. அது போல தமிழகத்தில் உள்ள பெரிசுகளும் டீவி சீரியல்,, எதுக்கும் உதவாத பட்டிமன்ரங்களை பார்த்து கொண்டு எதிர்கால சந்ததிகளை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறார்கள் எதிரகால சந்ததிகளும் டிக்டாக் போன்றவைகளில் ஈடுபட்டு அவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று உண்டு என்பதையும் மறந்து சுயநினைவுகள் இல்லாமல் இருக்கிறார்கள் ஆக மொத்தம் தமிழகத்திற்கு டண்டணக்கா  ஆ டண்டணக்காத்தான்




தமிழகத்தில் இனிமேல் அன்னதானம் செய்பவர்கள் அர்சு உணவுகட்டுப்பாடு துறையிடம் 100 பணம் செலுத்தி அனுமதிவாங்க வேண்டுமாம் :செய்தி

1.அப்படி அனுமதி பெற்று அன்னதானம் கொடுக்கும் உணவினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பாட்டால் அரசு பொறுபேற்குமா

2. அரசுக்கு  மொய் எழுதினால்தான் அன்னதானம் கொடுக்கலாம் போல......

3, தானம் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்பது போலவா இதுவும்

செட்டிநாடு சிக்கன் சுக்கா

குருமூர்த்தி துக்களக்க்கு ஆசிரியராக பதவி ஏற்றதிலிருந்து அந்த இதழின் சர்க்குலேசன் குறைந்து கொண்டே போகுதாம்... அடப்பாவமே பக்தால்ஸ்கூட அதை வாங்குவதை நிறுத்திட்டாங்க



//எம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா?///


ஆமாம் என் குழந்தை பருவத்தில் எம்ஜியாரை பார்த்து இருக்கிறேன்  ஆனால் அவரின் குழந்தை பருவத்தில் நான் பார்க்க நான் ஒன்றும் அவ்வளவு வயதானவன் அல்ல


//@பிரியங்காரெட்டி

நம்ம வீட்டு  பொண்ணு சாகும் போதுதான் அது மிகப் பெரிய பிரச்சனை அதுவே சமுகத்தில் ஒரு பெண் சாகும் போது அது இணையதளங்களில் பரபரப்பாக பேசுப்படும் ஒரு சாதாரன நிகழ்வு இதுவே இன்றைய சமுகம் நமக்கு கற்று தரும் பாடம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.