Saturday, November 23, 2019

@avargal unmaigal
 மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி ரஜினியின் கருத்து பாஜக செய்வது ஜனநாயகப் படுகொலை அல்ல




காலையில் செய்தி நாளிதழ்களை படிக்கும் போது மஹாராஷ்ராவில் உத்தவ் தக்கரே CM மாக பதவி ஏற்கப் போகிறார் என்று செய்தி வந்திருந்தது. அதை படித்த பின் அவருக்கு வாழ்த்து சொல்ல போனை எடுக்கும் போது மனைவி டிவியை ஆன் செய்தார் அதில் தேவேந்திர பட்னவிசு பதவி ஏற்கிறார் என்று செய்திகள் வருகின்றது அதை பார்த்ததும் எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு



மதுரைத்தமிழன் கருத்து :பாஜக செய்வது ஜனநாயகப் படுகொலை அல்ல

மராட்டியத்தில்  பாஜக  ஒரு ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறார்களாம் இப்படி ஒரு குற்றச்சாட்டை பொதுமக்களும் எதிர்கட்சிகளும் கூறி வருகிறார்கள்..... அடேய் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் என்பதே இல்லை என்கிற போது அதை எப்படி அவர்கள் படுகொலை செய்து இருக்க முடியும்.. உயிரோடு இருப்பதைத்தான் படுகொலை செய்யமுயும் இல்லாத ஒன்றை படுகொலை செய்ய முடியாது.. அதனால் இப்படி உளறிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக டிவி சீரியல் பார்த்து பொழுதை கழிப்பதை தவிர்த்து உங்களுக்கு வேறு வழியில்லை வேண்டுமானால் நீங்க்ள் டிக்டாக்கில் ஏதாவது வீடியோவை பதிவேற்றுங்கள் அவ்வளவுதான் சொல்லுவேன்


சிவசேனா தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணிவைப்பது தாவூத்&கோ உடன் கூட்டணி வைப்பதைபோன்றது- நேற்றிரவு அர்னாப் சொன்னது!

பாஜக+தே.வாத காங்= Masterstroke -அர்னாப், இன்றுகாலை சொல்வது!

இதிலிருந்து நமக்குப் புரிய வர்றது என்னென்ன .அதாவது அர்னாப் என்ன சொல்லவர்ரார்றார்ன்னா பாஜக ஆட்சி அமைக்க பயங்கரவாதிகள் கூட கூட்டணி வைக்கும் என்றுதான்

27,000 கோடி ஊழல் வாதி என பாஜகவால் குற்றம் சாட்டப்பட்ட பவார்தான் தற்போது துணை முதல்வர்.

எங்க சத்தமாக சொல்லுங்க பாஜக அரசு ஊழல் அற்ற அரசு என்று அப்படி சத்தமாக சொல்லாதவங்க தேச துரோகிகள்


அமித்ஷா செய்யாதது இது மட்டும்தான் பாஜக எந்த மாநிலத்திலாவது மெஜரிட்டி இல்லாமல் இருக்கும் போது ராகுல் காந்தியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்வது மட்டுமே அதையும் கூடிய சீக்க்கிரம் செய்துவிடுவார் என்று நம்பலாம்

மக்களால் தலைவர்களாக ஆனவர்கள் வெற்றிக்கனியை எப்படி பெறுவது என்பதில் மிக திறமையாக இருந்தார்கள் ஆனால் அவர்களின் வாரிசு என்ற காரணத்தால் தலைவன் ஆனவர்கள் வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறார்கள் உதாரணமாக . தாக்கரே, கலைஞர் , முலாயம்,  மற்றும் லால்லுவின் வாரிசுகள்


தீவிரவாதிகள் எல்லாம் ஏன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார்கள் தெரியுமா?
இங்கே இந்தியாவில் இருந்தால் பாஜகவிற்கு அதிக அளவில் நன்கொடை கொடுக்க வேண்டும் என்பதால் அவர்களின்  தொந்தரவு தாளாமல் பாகிஸ்தானில் மறைந்து இருக்கிறார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்


கொசுறு : நெட்டில் சுட்டது

மோடியை கண்டால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளெல்லாம்   நடுங்குவாங்கன்னு சொன்னது..

ஆமாம் .. டொனேஷன் கொடு டொனேஷன் கொடு ன்னு நச்சரிச்சா ... பயப்பட மாட்டாங்களா

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.