Sunday, November 24, 2019

@avargal unmaigal
இது ஒரு கற்பனை என்றாலும் தமிழகத்தில் 2021ல் இப்படி நடக்க வாய்ப்புக்கள் உண்டு


2021 ல் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின பாஜக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் அதிமுக 50 தொகுதிகளிலும் மீதியுள்ள இடங்கள் அனைத்திலும் திமுக வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைக் கேட்ட ஸ்டாலின் மிக மகிழ்ச்சி அடைந்து தர்மம் ஜெயித்தது தனக்கு வெற்றியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து நாளை ஆளுநரைச் சென்று சந்தித்துத் தான் முதல்வராக ஆட்சியில் அமரப் போவதாக செய்திளார்களுக்கு பேட்டி கொடுத்து மகிழ்ச்சியுடன் தனது  நீண்ட நாள் முதல்வர் கனவு நிறை வேரப் போவதை எண்ணி மகிழ்ந்து தூங்கச் சென்றார்


நாளைய முதல்வருக்கு ரஜினிகாந்த் முதல் மோடி வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர் செய்தி நாளிதழ்கள் அனைத்திலும் தலைப்பு செய்திகளாக முதல்வர் ஸ்டாலின் என்று  செய்திகளை ப்ரிண்ட் செய்யத் தொடங்கினர்..


மறுநாள் காலையில் ஸ்டாலின் அவர்கள் சீக்கிரம் எழுந்திருந்து குளித்துவிட்டு தன் மகன் உதயநிதி மற்றும் சபரிசனை கூப்பிட்டுச் சீக்கிரம் ரெடியாக சொன்னார். அதற்கு அவர்கள் இருவரும் உடனே நாம் இத்தனை அவசரமாக எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க அதற்கு ஸ்டாலின் அடேய் நாம் ஆளுநரைச் சந்தித்து நான் முதல்வராக ஆகக் கோரிக்கை வைக்கவேண்டும் அதை நம் வெற்றிக் களிப்பில் நீங்கள் மறந்துவீட்டீர்களா என்று கேட்டார்...


அதற்கு அவர்கள் இருவரும் அப்பா நீங்க டூலேட் நேற்று நீங்கள் தூங்கச் சென்ற பின் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்...நீங்கள் நன்றாகத் தூங்கியதால் நாங்கள் உங்களை எழுப்பி இந்த விஷயத்தைச் சொல்லவில்லை என்றார்கள்

அதைக் கேட்ட ஸ்டாலின் மிகுந்த அதிர்ச்சியுற்று அது எப்படிடா முடியும் நாம்தானே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம் பாஜக 2 இடத்தில்தானே வெற்றி பெற்று இருக்கிறது அது எப்படிச் சாத்தியமாகும் என்றார்...


அப்பா 2019 மகாராஷ்டிரா தேர்தலுக்கு அப்புறம் எதுவும் நடக்கும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியாமல் போச்சு.... அடேய் அதற்கு இதற்கும் என்ன சம்பந்தம்டா அதுமாதிரி இங்கு இன்று எப்படிச் சாத்தியமாகும் நாம்தான் மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம் ஆளுநர் நம்மைத்தானே அழைக்கவேண்டும்...


அப்பா நீங்கத் தூங்கியவுடன் இந்தியாவின் சாணக்கியரான அமித்ஷா அம்மாவிற்கு போன் போட்டுப் பேசினார் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை ஆனால் பேச்சு முடிந்தவுடன் அம்மா எங்கள் இருவரையும் கூப்பிட்டார் தம்பி உதயநிதி சயித்த எல்லா எம்.எல்.ஏக்களிடமும் கையெழுத்து வாங்கி நீங்கள் இருவரும் ஆளுநர் மாளிகைக்குச் செல்லவும் அங்கு ஆளுநர் ஹெச்.ராஜாவைத் தமிழக முதல்வராகவும் உன்னைத் துணை முதல்வராகவும் அறிவித்து பதவி ஏற்பு விழா இரவு 12 மணிக்கு நடை பெறும் அது முடிந்தவுடன் இந்தியாவின் ஜனாதிபதியிடம் இருந்து நமது சப்ரிசனுக்கு ஆந்திராவின் ஆளுநராகப் பதவி ஏற்க அழைப்பு வரும் என்று சொன்னார். இந்த டீல் எங்களுக்கும் மிகப் பிடித்து இருந்ததால் நாங்களும் சம்மதித்து பதவிகளை ஏற்றுக் கொண்டோம் என்றனர்..


அடேய் இது அப்பனுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்டா என்று சொல்லி நான் உடனே பொதுக்குழுவைக் கூப்பிட்டு இதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன் என்றார்.


அதைக் கேட்ட சபரிசனும் உதயநிதியும் சற்று சத்தமாகச் சிரித்தவாறு அப்பா நேற்று இரவே அம்மா பொதுக்குழுவைக் கூட்டி உங்களைச் செயல்படாத தலைவராகவும் தன்னை செயல் தலைவராகவும் அறிவித்துக் கொண்டார் அதுமட்டுமல்ல உங்கள் பொண்னை கட்சியின் செயலாளராகவும் அறிவித்து இருக்கிறார்.. இதெல்லாம் குடும்ப நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும் அம்மா எடுத்த முடிவு..


அதனால் நீங்கப் பேசாமல் தூங்க செல்லுங்களப்பா என்று சொல்லிச் சென்றனர் அதைக் கேட்ட ஸ்டாலின்  நெஞ்சில் கை வைத்தவாறே அம்மாவைக் கூப்பிடு என்று சத்தம் போட்டார் அதைக் கேட்ட அவர்கள் அம்மா மோடியைச் சந்திக்க டெல்லி போயிருக்கிறார் அவருக்கு பத்மபூஷன் மற்றும் பாரத ரத்னா இரண்டு அவார்ர்டையும் ஒரே நேரத்தில் கொடுக்கப் போவதாகப் பிரதமர் அறிவித்து இருக்கிறார் என்று சொல்லிச் சென்றார்கள்



இது ஒரு கற்பனை என்றாலும் மோடியின் ஆட்சியில் இப்படி நடக்கவும் வாய்ப்புக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாதுயல்லவா


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி ரஜினியின் கருத்து பாஜக செய்வது ஜனநாயகப் படுகொலை அல்ல 



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.