Thursday, November 14, 2019

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்


சூரியன் உதிக்கிறானோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் தாமரை மலருவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன.அதன் விளைவுகளில் ஒன்றே சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் ..இந்தியாவிலேயே தன் மகளுக்குப் பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று ஒரு தந்தை நம்பியிருக்கிறார்,அவரின் நம்பிக்கையைத் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் நாம் காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை


@avargalunmaigal
தமிழகத்தில் தாமரை மலராது என்று பலரும் பேசினாலும் அது மலர ஆரம்பித்தற்கான அறிகுறிதான் இது.. மானமுள்ள தமிழர்கள் மட்டுமின்றி மனசாட்சி உள்ள தமிழர்களும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றத் தொடங்கிய பிறகு நமது பெருமைகளை இழக்கத் தொடங்கியிருக்கிறோம் இதனை இப்படியே தொடர விட்டால் மாற்று மதங்களில் உள்ளவர்களின் குடும்பங்களில் மட்டுமல்ல நம் குடும்பங்களில் உள்ளவர்களையும் பலி கொடுக்க வேண்டியிருக்கும்


“இந்த தேசத்தின் வட மாநிலங்களில் மதவெறியும் mob lynchingம் தலைவிரித்தாடுகின்ற போதும், தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதித் தான் என் மகளை அனுப்பிவைத்தோம் என்று மாணவியின் தாயார் பேட்டியளித்திருக்கிறார். இதற்குப் பதில் சொல்லத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோமா இல்லையா?

தமிழ் சினிமாக்காளில் வட சென்னையில்தான் ரவுடிகள் இருப்பார்கள் என்ற போலியான தோற்றத்தைத் தொடர்ந்து விதைத்து வரும் போது ஐஐடியில் கொலைகாரர்கள் இருப்பார்கள் என்று பதிவதற்குப் பதிலாக அதை மறைத்து அறிவாளிகள் நிறைந்த உலகம் என்று பதிந்து வருகிறார்கள் உண்மையான முரடர்கள், பொறுக்கிகள் அனைவரும் ஐஐடி யில் தான் இருக்கிறார்கள் என்ற உண்மை சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டது.


பாத்திமா தற்கொலைக்கு இரங்கல் செய்தி ஏதும் எடப்பாடியார் சொல்லி இருக்கிறாரா என்று அவரின் டிவிட்டர் பக்கம் சென்று பாத்தால, மற்ற கட்சியிலிருந்து  அதிமுகவில் இணைந்தவர்களோடு ஒரு குரூப் போட்டோ மட்டும் தான் இருக்கிறது எந்த விதமான வருத்தச் செய்திகளும் இல்லை தமிழர்களின் மானம் காற்றில் ஆடும் போது எந்த வித உணர்ச்சிகள் இல்லை என்பதோடு மனசாட்சியும் இல்லாமல் இருக்கிறார் என்கிற போது இப்படிப்பட்ட தலைவர்களா நம்மை ஆள்கிறார்கள் என்று நினைத்து தமிழர்களும் தற்கொலை செய்து கொள்ளத்தான் வேண்டும்


தமிழக மண்ணில் நடந்த கொலைக்குக் கேரளா முதல்வர் பாத்திமாவின் பெற்றோர்களுக்கு நியாயமான விசாரணை நடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இது சம்பந்தமாகத் தமிழக முதல்வரோடு பேசுவதாகவும் சொல்லி இருக்கிறார் தமிழக முதல்வர் இதுபற்றி ஒன்றும் அறிக்கை விடாதது பற்றிப் பார்க்கும் போது மத்திய அரசை இன்னும் அவர் தொடர்பு கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் ஒரு வேளை மத்திய அரசைத் தொடர்பு கொண்டால் அவர்கள் இந்த வழக்கை எப்படிக் கையாள வேண்டும் என்று அறிவுரை பெற்ற பின் அதற்கு ஏற்ப செயல்படுவார் என்று கருதலாம்


அமோசான் காடுகளில்தான் விஷ செடிகளும் மரங்களும் இருக்கின்றன என கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இந்தியாவில் தாமரை என்ற விஷச் செடி நன்றாகப் பரவி வருகின்றது என்பதை மட்டும் மக்கள் அறியாமல் இருக்கிறோம்

கருவேலமரத்தைமரத்தை வேரோடு வெட்டி சாயத்தது போல தாமரையையும் வெட்டி சாய்த்தால்தான் தமிழகம் நலம் பெறும்


அன்புடன்
மதுரைத்தமிழன்
@avargalunmaigal



Chennai Police commissioner AK Viswanathan on #FathimaLatheef suicide:

The case has been transferred to Central Crime Branch. A special team will be constituted to probe the case and all those who are guilty will be dealt with accordingly.


இதைப் பார்க்கும் போது கசாப்கடைக்காரனிடம் ஒரு ஆடு சென்று  நல்லத் தீர்ப்பு நீங்கள்தான் சொல்ல முடியும் என்று கேட்பதுப் போலத்தான் இருக்கிறது......


அமோசான் காடுகளில்தான் விஷ செடிகளும் மரங்களும் இருக்கின்றன என கேள்விபட்டு இருக்கிறேன் ஆனால் இந்தியாவில் தாமரை என்ற விஷஸ் செடி நன்றாக பரவி வருகின்றது என்பதை மட்டும் மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்

Iyer Iyengar Technology


ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்- திருமாவளவன்

கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதி, மதரீதியான ஒடுக்குமுறை, வன்கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- #Thirumavalavan


இப்படி கேட்பது கசாப்கடைக்காரனிடம் ஒரு ஆடு சென்று  நல்லத் தீர்ப்பு நீங்கள்தான் சொல்ல முடியும் என்று கேட்பதுப் போலத்தான் இருக்கிறது......


பாத்திமா தாயாரின் பேட்டி

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.