Saturday, November 9, 2019

இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்பார்த்த தீர்ப்பு இது


இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்பார்த்தபடியே தீர்ப்பு வந்திருக்கிறது.. இல்லை இல்லை தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்க வேண்டும் என்று  நினைத்தீர்கள் என்றால் நீங்கள் சிறந்த முட்டாள்களாகவே இருக்க முடியும்

உலகெங்கும் உள்ள நாடுகளையும் ஏன் அமெரிக்காவையே எடுத்துக் கொண்டாலும் பெரும்பான்மையான தீர்ப்புக்கள் அதிகாரப் பவர்  கொண்ட பெரும்பான்மையானவர்களின் விருப்பப்படியே தீர்ப்புக்கள் வழங்கப்படுகிறது என்பது புரியும்


ஊடகங்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளிலிருந்து நான் புரிந்து கொள்வது இந்த தீர்ப்பு ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது புரிகிறது


அதாவது  ஆதாரங்கள் அடிப்படையில் அல்லாமல் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ண அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது மிக சரியே இதற்கு ஆளும் கட்சியின் தலைவரான மோடிக்கு நிச்சயம் நாம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்


இந்த தீர்ப்பை  ஏற்றுக் கொண்டு கடவுளின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்
இஸ்லாமியர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான் இஸ்லாமியர்களுக்குப் புனித இடம் என்பது மெக்காவும் மதினாவும் தான் மற்ற இடங்கள் எல்லாம் சாதாரண இடங்கள்தான் அது எந்த மசூதியாக இருந்தாலும் .அதனால்தான் இஸ்லாமியர்கள் தொழுகை நேரம் வந்துவிட்டால் அருகில் உள்ள மசூதிகளுக்குச் செல்வார்கள் அல்லது கிடைத்த இடங்களில் ஒரு துண்டை போட்டுத் தொழுகையை நடத்துவார்கள் காரணம் எங்குத் தொழுதாலும் அல்லா அங்கு வந்து அவர்களை ஆசிர்வதிப்பார் என்பது உண்மை.


ஆனால் இந்துக்களில் ஒரு பகுதியினருக்கோ (இந்துக்கள் அனைவரும் ராமரை வழிபடுவதில்லை )பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்த இடம்  அது புனிதமான இடம் அங்குக் கோவில் கட்டி  வழிட்டால்தான் ராமர் அருள்பாலிப்பார் என்று நம்புகிறார்கள் . அதனால் அவர்களின் நம்பிக்கைக்கு நாம் உதவ வீட்டு கொடுத்துச் செல்லுங்கள்..


விட்டுக் கொடுப்பதால் யாரும் தாழ்ந்து போவதில்லை அதற்கு மாறாக அவர்கள் உயர்ந்துதான் நிற்கிறார்கள் அதனால் இஸ்லாமியர்களாக உயர்ந்து நின்று நாட்டில் அமைதி நிலவ தொழுங்கள்


எங்கே சுத்தமான இடம் கிடைக்கிறதோ அங்கே தொழுது கொள்ளுங்கள் என்றே இஸ்லாம் சொல்கிறது.  இஸ்லாம் சொற்படி நடங்கள்


இந்து பெரும் மக்களே உங்கள் விருப்படி அங்குக் கோவில் கட்ட அனுமதி கிடைத்துவிட்டது கோவில் கட்டிய பிறகு அங்குச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டு  நாட்டில் வாழும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழப் பிரார்த்தியுங்கள்


இறுதியாக இஸ்லாமிய சகோதரர்களுக்கு  கிடைத்தால்  அது மசூதி   அதுவே இந்து சகோதரர்களுக்கு கிடைத்தால் கோவில்...  ஆனால் பிராத்தனை பொதுவானதே  அதனால் இந்தியாவின் இந்தியர்களின் அமைதிக்கு அனைவரும் பிரார்த்திப்போம்

அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. சிறப்பு... இது மதுரையின் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல இருக்கிறது தனபாலன்

      Delete
  2. நம்பிக்கைகளையே வாதியாக நினைத்து எழுதப்பட்ட தீர்ப்பு

    ReplyDelete
  3. தீர்ப்பு சரியோ, முறையோ, தவறோ ஆனால் தங்களது பதிவு அழகு.

    ReplyDelete
  4. இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் மதவெறியை கற்றுக்கொடுத்தது நிறுவனமயப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தான். மிக நேர்மையாக உங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    அப்புறம், மோடி படிப்படியாக உங்களை கவர்ந்திழுப்பதில் வெற்றி பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு முன்பு கூட காஷ்மீர் விவகாரத்தில் மோடியின் பக்கம் தீர்ப்பு வழங்கி இருந்தீர்கள்.

    ஹா ஹா ஹா! நான் அவதானித்ததை சொன்னேன். மற்றும்படி காஷ்மீர், அயோத்தி இரண்டு விவகாரங்களிலும் உங்கள் கருத்து தான் எனது கருத்தும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.