Thursday, November 21, 2019


ரஜினிகாந்த : அதிசயம் நடக்கும், அற்புதம் படுக்கும். ஆச்சர்யம் டேன்ஸ் ஆடும்

ரஜினிகாந்த யேசு அழைக்கிறார் என்ற கிறிஸ்துவ ஜெபக் கூட்டங்களுக்கு செல்கிறார் போல அதனால்தான் அதிசயம் நடக்குது, அற்புதம் படுக்குது. ஆச்சர்யம் டேன்ஸ் ஆடுதுன்னு சொல்ல ஆரம்பிச்சு இருக்கிறார்




மதுரைத்தமிழன் :என்னய்யா இந்த மோடி அரசு இப்படி எல்லாம் பண்ணுது பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறாங்க அதே சமயத்தில் மாநில அரசுகளை விலைக்கு வாங்கி நடத்துறாங்க..


செய்தி :நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன தமிழகத்தில் 34,037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ளன.

  மதுரைத்தமிழன் :வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது போல இந்த எல்லா கேஸுக்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஆவண செய்யுமா? வேண்டுமானால் பொழுது போக ப சிதம்பரம் கேஸை மட்டும் வைத்துக் கொள்ளலாம்

புதிய இந்தியாவில் ஃப்ராடுகளின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது... அதற்காக நாம் மோடிஜிக்கு நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கிறோம்... அப்படி நன்றி பாராட்டாதவர்கள் ஆண்ட்டி இண்டியன்ஸ்

இதற்கு காரணம் நேருதான் அவர்தான் நாட்டுமக்களை மோசடி பண்ண கற்று கொடுத்திருக்கிறார்.. இந்த பழக்கத்தை  தடுக்க  எல்லோரும் யோகா செய்யனும் என்று அறிக்கை விட்டுடலாம் சரியா?



அந்த காலத்துல குடுகுடுப்ப காரன் நல்ல காலம் பொறக்குதுன்னு நல்ல காலம் பொறக்குதுன்னு சொல்லிட்டு இருந்தான் எப்ப மோடி அவனை காப்பி அடித்து புதிய இந்தியா  பொறக்குதுன்னு புதிய இந்தியா  பொறக்குதுன்னு சொல்ல ஆரம்பிச்சாரோ அப்பவே குடுகுடுப்ப காரன்  தன் தொழிலைவிட்டுவிட்டு போயிட்டான்





அடிமைகள் திராவிட முன்னேற்ற கழகம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
21 Nov 2019

6 comments:

  1. //அடிமைகள் திராவிட முன்னேற்ற கழகம்//

    ஸூப்பர் வார்த்தை.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வார்த்தைகள்

      Delete
  2. செய்தித் தாள் போல முன்னே வரும் செய்திகள் பின் அவையே பதிவாகவும்

    ReplyDelete
    Replies
    1. எனது பொழுது போக்கிறாகாக பதிவுகள் என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்

      Delete
  3. வரும், ஆனா வராது...
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    ReplyDelete
    Replies
    1. சார் இங்கே நான் எனது பொழுது போக்கிற்காக ஏதாவது கிறுக்கி கொண்டு இருப்பேன் அதற்கு கருத்து போடவில்லை என்றாலும் பரவாயில்லை .ஆனால் நீங்கள் செய்து கொண்டு இருப்பது மகத்தான பணி அதை தொடர்ந்து செய்யுங்கள்......உங்களின் முயற்சிக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.