படித்து பாருங்கள் இப்படியும் நிகழ்ந்து இருக்க்க வாய்ப்புக்கள் இருக்கலாம்தானே ?
ஏய்.... உன் கிட்ட எத்தனை தடவை சொல்லுறது, என் பின்னாலா வாராதே என்று.... எனக்கு உன்னைக் கண்டாலே பிடிக்கலை..
ப்ரியா உன்னை ஹாஸ்பிட்டலில் பார்த்த பின் உன் அழகு என்னைக் கவர்ந்து இழுக்கிறது.... நான் சொன்னபடி கேளு, உனக்கு நான் நல்ல விலையுயர்ந்த காரை பரிசாகத்த தருகிறேன். அதன் பின் நீ இந்த ஸ்கூட்டியில் எல்லாம் பயணம் செய்ய வேண்டாம்.
ஏய்....நாயே சொன்னால் கேளு... இதற்கு மேலே என்னை நீ தொந்தரவு பண்ணினால், நான் போலீஸுக்கு போவதைத் தவிர வேற வழியில்லை. அதனால சொல்லுறேன் மரியாதையாக, என்னை பின் தொடர்வதை நிறுத்தி விடு அதுதான் உனக்கு நல்லது எனக்கும் நல்லது ....
அதைக் கேட்ட கோவிந்த ராஜுலு கட கடவெனச் சிரித்தான். ப்ரியா, நான் யாரின் மகன் என்று உனக்கு இன்னும் தெரியவில்லை . நான் அமைச்சரின் மகன் இந்த மாநிலத்தின் போலிஸே என் தந்தை சொல் கேட்டு ஆடும். அப்படி இருக்க நீ போலீஸுக்கு போவேன் என்று என் கிட்டப் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்டாதே .நான் சொல்லுற படி செய் ,அதுதான் உனக்கு நல்லது இன்னும் இரண்டு நாள் தருகிறேன் அதுக்குள்ள யோசிச்சு உன் முடிவை சொல்லு...
அடேய் உன் அப்பா மாநிலத்தில் பெரிய ஆளாக இருக்கலாம் .அதற்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை .உன்னால் முடிந்தை செய் ... நானும் எந்த அளவிற்கு போல்ட்டான ஆள் என்று உனக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கும் காண்பிக்கிறேன். இதுக்கு எல்லாம் பயந்தவள் நான் இல்லை என்று சொல்லி ஸ்கூட்டியை ஒட்டி சென்றாள்.
இவளிடம் நாம் மென்மையாக நடந்தாள் இவள் வழிக்கு வரமாட்டாள் ,நம் போக்கில்தான் இவளைக் கையாளனும் என்று யோசித்து கோவிந்த ராஜுலுவும் அந்த இடத்தை விட்டு அகன்றான்
அடுத்த நாள் தன் தந்தையின் கட்சியில் உள்ள நம்பிக்கையான ஆட்களை அழைத்து ,அவர்களிடம் நம் கட்சி ஆட்கள் வேண்டாம் .ஆனால் வெளி ஆட்களில் உங்களுக்குத் தெரிந்த சில நம்பிக்கையான ஆட்களை என்னிடம் அனுப்பி வையுங்கள் அவர்களை வைத்து ஒரு காரியம் செய்யவேண்டும் யாருக்கும் தெரியாமல் என்று சொன்னான்..
அந்த கட்சி ஆட்கள் அவர்களுக்குத் தெரிந்த நம்பிக்கையான ஒரு லாரி டிரைவரையும் ,அவனது கூட்டாளியையும் கோவிந்துலுவிடம் அனுப்பி வைத்தனர்.
அந்த ஆட்களைப் பரியா வழக்கமாக ஸ்கூட்டியை நிறுத்தும் இடத்திற்குக் கூட்டிச் சென்று, பரியா அறியாமல் .அவளை அவர்களுக்கு அடையாளம் காண்பித்து. நாளை அவளைக் கடத்தி தான் சொல்லும் இடத்திற்குக் கூட்டி வர வேண்டும் என்று கட்டளையிட்டான் .அது மட்டுமல்லாமல் அவள் தினமும் காலையில் இங்குதான் தன் வண்டியை நிறுத்திவிட்டு இரவில்தான் திரும்பவும் வண்டி எடுக்க வருவாள் அதனால் அந்த நேரத்தில் அவ்லை கடத்துமாறும் ஆலோசனை சொன்னான்
அவனின் ஆலோசனைப்படி அடுத்த நாள் பிரியா தன் வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றதும் அவள் வண்டியின் டயரை பஞ்சர் ஆக்கி வைத்தனர் அந்த கயவர்கள் .அதன் பின் மாலைப் பொழுது சாய்ந்ததும் அந்த கயவர் கும்பல் வண்டியை விட்டு சற்று தூரத்திலிருந்து அவளின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தனர்
இரவு நேரத்தில் வேலையிலிருந்து திரும்பிய பரியா தன் வண்டியை ஸ்டார்ட் செய்த போதுதான் தன் வண்டியின் டயர் பஞ்சராகி இருப்பதைப் பார்த்தாள் அதை எப்படிச் சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அதற்காகக் காத்திருந்த அந்த கும்பலில் ஒருவன் அருகில் வந்து என்னம்மா பிரச்சனை என்றான். அதற்குப் பிரியா அண்ணா வண்டியின் டயர் பஞ்சாராகி இருக்கிறது என்று சொன்னாள் அப்படியாம்மா அடுத்த தெருவில் ஒரு ரிப்பேர் ஷாப் இருக்கிறது. அங்கே சென்று சரி செய்வோம் என் கூட வா என்று அந்த வண்டியை வாங்கி தள்ள ஆரம்பித்தான்.. அப்போது அவனிடம் இருந்து சாராய வாடை வந்ததும் அவளுக்குச் சந்தேகம் வந்தது .அதனால் உடனே போன் பண்ணி தன் நிலைமையைத் தங்கையிடம் சொல்லி முடித்து சற்று ஜாக்கிரதையாகச் சற்று தள்ளி, இடைவெளிவிட்டு அவள் நடந்த போது அருகில் ஒரு கார் வேகமாக வந்து அவளை அள்ளிச் சென்றது. அவள் கத்தும் முன்பு அவளின் வாய் அடைக்கப்பட்டது.. அப்போதுதான் பெரும் ஆபத்தில் இருப்பதை அவள் உணர்ந்தது கத்த முயன்றாள் அந்த நேரத்தில் அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கோவிந்துலுவின் வீட்டிற்கு அவளைக் கொண்டு சென்றனர். கோவிந்துவிடம் அவளை ஒப்படைத்துவிட்டு அவர்கள் மேலும் குடிக்க அருகில் உள்ள சாரயக் கடைக்குச் சென்றனர்
அதன் பின் அவளை அவ்ல் சுயநினைவு இன்றி இருக்கும் போது அவளை பாலியல் பலாத்காரம் செய்து தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான் அவள் கண்விழித்ததும் தன் நிலைமையை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானாள்.
நான் சொன்னதைக் கேட்டு இருந்தால் இப்படி நடந்து இருக்காது அல்லவா சரி சரி இந்த பணத்தை எடுத்துக் கொண்டு பேசாமல் சத்தமில்லாமல் வாழக் கற்றுக் கொள் அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்றான் கோவிந்த ராஜுலு
அடேய் பாதகா உன்னை என்னை சீரழித்த உன்னை இப்படியே வீட்டு விட்டுச் செல்வேன் என்று நினைத்தாயா நான் ஒன்றும் கோழை இல்லை உன்னை என்ன செய்கிறேன் பார். உன் குடும்பத்தினரின் அந்தஸ்தைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்துகிறேன் பார் .இப்போதே மீடியாவிற்கு போகிறேன். அங்கு எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி உன்னையும் உன் குடும்பத்தாரையும் சந்தி சிரிக்க வைக்கிறேன் என்றாள்.
அதைக் கேட்ட கோவிந்த ராஜு கோபமுற்று உன் வாயால்தான் நீ கெடுகிறாய் என்று சொல்லி, அவளது செவிட்டில் ஓங்கி அறைந்தான் இதை எதிர்பார்க்காத அவள் நிலை குலைந்து சரிந்து கீழே மயங்கி விழுந்தாள்.
உடனே கோவிந்த ராஜுலு அவளைக் கூட்டி வந்தவர்களை போனில் அழைத்தான் அவர்கள் வந்ததும் இவளைக் கொன்று எங்காவது தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள். உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, காரியம் முடித்துவிட்டு சில நாட்கள் கழித்து வாருங்கள் உங்கள் லட்சக்கணக்கில் பணம் தருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தான்
அவர்களும் சரி என்று அவளைத் தூக்கிச் சென்றனர் .அப்படிச் செல்லும் வழியில் இவளை கொல்லத்தானே போகிறோம் அதனால் இவளை நாமும் அனுபவித்துவிட்டுக் கொல்வோம் என்று பேசி அவளை ஒரு ஒதுக்குப்புறமாகத் தூக்கி சென்று நால்வரும் அவள் கதறக் கதற அவள் வாயில் சாராயத்தை ஊற்றி வன்புணர்வு செய்தனர். அதன் பின் அவள் சுயநினைவின்றி போனதும் அவளை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு ஒடிவிட்டனர்...
அவளைக் காணாத பெற்றோர் போலீஸில் தகவல் கொடுத்தனர் ஆனால் அதைக் கேலி செய்து உன் மகள் ஒடிப் போயிருப்பாள் என்று சொல்லி கேலி செய்தனர்......அதன் பின் அவர்கள் வேறு ஒரு போலிஸ் நிலையம் சென்று புகார் அளித்ததும் அதனை வாங்கிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்ட போது பாலத்திற்கு அருகே கருகிய நிலையில் பெண் பிணம் கிடைப்பதை அறிந்தது சென்று பார்த்த போது தாங்கள் தேடிய அந்த பெண்டாகடர்தான் அது என்று உறுதி செய்தனர்..
இந்த கொடூர நிகழ்வை அறிந்தது நாடே கொந்தளித்தது. மாநில அரசும் தீவிரமாக விசாரிக்கச் சொல்லி போலிஸிடம் சொன்னதும். போலிஸார் விசாரணையில் சிசிடிவி கேமிராவில் பரியாவை கடத்தியவர்களை யார் என்று அறிந்து அவர்களைத் தேடிப் பிடித்தது...
இந்த செய்தியை அறிந்த கோவிந்த ராஜுலு எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என்று நினைத்து உடனே தன் தகப்பனாருக்கு போன் செய்து நிலைமையை சொன்னான் .அவனைத் திட்டிய அவர் சரி சரி நான் அந்த பிரச்சனையைக் கவனித்துக் கொள்கிறேன் சில நாட்கள் நீ ஏதும் பேசாமல் அமைதியாக இரு என்று சொல்லிய அந்த அரசியல் பெருந்தலை சோமய்யா மாநில உயர் போலிஸ் அதிகாரியிடம் சொல்லி மக்கள் மிகவும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள் இந்த பிரச்சனைக்கு முடிவு சீக்கிரம் முடிவு காண அவர்களை என் கவுண்டரில் போட்டுத் தள்ளுங்கள் என்று ஆர்டர் கொடுத்தார்... அதன் பின் தனக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு அந்த குற்றவாளிகளிடம் நடந்த விஷயத்தைப் பற்றி ஏதும் சொல்ல வேண்டாம் அவர்கள் தப்பிப்பதற்கு நாளை அதிகாலையில் நான் ஏற்பாடு பண்ணுவதாக சொல்லு என்று கூறி அவர்களின் வாயை அடைக்க வைத்தார் .அந்த குற்றவாளியைச் சந்தித்த அந்த போலீஸ் அதிகாரி நாளை காலையில் கொலை நடந்த இடத்திற்கு உங்களை போலீஸ் அதிகாரிகள் கூட்டி செல்வார்கள் அப்போது அவர்கள் உங்களின் கைகளில் விலங்கௌ ஏதும் மாட்டமாட்டார்கள் அங்குச் சென்றது அங்கு உங்களுக்காக இருக்கும் காரில் ஏறி வடநாட்டில் சில காலங்கள் இருங்கள் என்று சொல்லிச் சென்றார் அவர்களும் அதை நம்பி மகிழ்ச்சியாக இருந்தனர்..
அடுத்த நாள் காலையில் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்ற போது ஏற்கனவே சொல்லியிருந்த படி மற்றைய போலீஸ் அதிகாரிகள் என் கவுண்டரில் அந்த குற்றவாளிகளைப் போட்டுத்தள்ளினார்கள் அதன் பின் மீடியாவிற்கு தகவல் சொன்னார்கள் மீடியாவில் தகவல் ஒலிபரப்பானது நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷமாக அந்த என் கவுண்டரை அறிந்து ஆராவரித்து இனிப்புகள் வழங்கி பட்டாசு கொளுத்தி ஆடல்பாடல்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். சமுக வலைத்தளங்களில் இருந்து பாராளுமன்றம் வரை இந்த என்கவுண்டர் பிரச்சனை பேசி தீர்த்தனர்..
அநேக மக்கள் இந்த என் கவுண்டர்தான் சிறந்தது நாட்டின் சட்ட திட்டங்கள் எல்லாம் வீண் என்று பேசினார்கள் ஆனால் உண்மையான குற்றவாளி இன்னும் மக்களுடன் சேர்ந்து இந்த என் கவுண்டரை ஆதரித்தான் காரணம் அவனுக்குத்தான் இந்த என்கவுண்டரின் அர்த்தம் முழுமையாகத் தெரியும்
இப்பதிவு ஒரு கற்பனைதான் ஆனாலும் இது போல நடந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
___________________________________________________________________
கற்பனை என்றாலும் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. எனினும் ஒரு வேளை சுட்டுக் கொல்லப்படாவிட்டாலும் மூலக் குற்றவாளி மாட்டி இருக்க மாட்டார். இதுவரை பெரிய குற்றங்களில் சிலர் மாட்டியபோது பின்னால் உள்ளவர்கள் மாட்டப் போகிறார்கள் விஐபிக்களுக்கு இதில் தொடர்பு என்றெல்லாம் சொல்லப்படுகிறதே தவிர இதுவரை அப்படி யாரும் சிக்கியதில்லை. ஆட்டோ சங்கர் விவகாரத்தில் அப்படித்தான் கூறினார்கள். பல ரகசியங்கள் வெளிவரப்போகிறது என்றார்கள் ஒன்றும் நடக்க வில்லை. தற்போதைய பொள்ளாச்சி சம்பவம் வரை இதே நிலைதான். காலம் கடத்தக் கடத்த இந்த நான்கு பேரும் சேர்ந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு. இனி இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு துணை போனால் நமக்கும் இதே கதிதான் என்ற அச்சமாவது ஏற்படும். இதே போல உபி யிலும் ஒரு பெண்ணை எரித்த குற்றாவாளிகளுக்கும் இதனையே பின்பற்றுதல் நல்லது.
ReplyDeleteயாரையும் தீர விசாரிக்காமல் கொல்வது தவறு இட் இஸ் சிம்ப்லி ஹை ஹாண்டெட்னெஸ்உங்களுக்கு க்சற்ப்னை கொடிகட்டி
ReplyDeleteபறக்கிறது