Friday, December 6, 2019

@avargal unmaigal
இந்தியாவில் சட்டங்கள் உறங்கும் போது என்கவுண்டர் விழித்துக் கொள்கிறதா?

All four accused in the rape-and-murder case of a 25-year-old woman veterinarian were shot dead in an encounter by the Telangana police during the early hours of Friday.



இந்திய அரசையும் நீதித்துறையையும் கேளிக்குரியவையாக்கும் என்கவுண்டர் நிகழ்வு... இந்த என்கவுண்டர் நிகழ்வைக் கேட்கும் போது சாதாரண பொது மக்கள் ஆரவாரிக்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்  தலை குனிந்துதான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும்..


ஒரு பெண்ணைத் துடிக்கத் துடிக்க பாலியல் வன்புணர்வு செய்து  வாயில் மது ஊற்றி மிகக் கொடூரமாகச் சித்ரவதை செய்து அவளை  பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இந்த மாதிரி கொடூரத்தைக் கேட்கும் போதே உள்ளம் பதறுகிறதல்லவா? அப்படிப்பட்டவர்களை  என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றதை  இந்த சமுகம் கொண்டாடித் தீர்க்கிறது . நியமாகப் பார்த்தால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள்தான் அதில் சிறு சந்தேகமும் இல்லை ஆனால் என் கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்வது தவறான முன் உதாரணம்தான்

இந்தியாவில்  குற்றவாளிகள் சட்டத்தில் இருக்கும் ஒட்டைகள் மூலம் தப்பித்துக் கொள்கிறார்கள் இந்த ஒட்டைகள் மூலம் குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க வேண்டிய நீதித்துறையோ அதனைச் செய்யாமல் எந்தெந்த ஒட்டைகள் இருக்கிறது அதன் மூலம் எப்படித் தப்பித்துக் கொள்ளலாம் என்று முறையைச் சொல்லித் தருவதாகவே இருக்கிறது அதனால்தான் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து இப்படிப்பட என் கவுண்டர் முறையை ஆதரிக்கிறார்கள்.

ஆனால் இந்த என் கவுண்டர்கள் அதிகார பதவியில் இல்லாத குற்றவாளிகள் மீதுமட்டும் செயல்படுத்தப்படும் ஒரு நிகழ்வாகவே இது வரை இருந்திருக்கிறது.


இதே குற்றவாளிகள் அதிகார பவரில் உள்ளவர்களின் பிள்ளைகளாக இருந்திருந்தால் அவசர அவசரமாக தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இந்த மாதிரியான கேஸை விரைந்து முடிக்கவும்  ஏதோ ஒரு நிராதிபதியை பிடித்து வெளிப்படையான விசாரணை இன்றி இப்படிப் பலி கொடுக்கவும் நம் இந்தியாவில் வாய்ப்புக்கள் மிக அதிகம் அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்தாலும் மக்கள் உண்மையை அறியாமல் இப்படி ஆரவாரிக்கத்தான் செய்வார்கள்.


அப்படியானால் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் எதற்கெல்லாம் அரசும் நீதித்துறையும் அவசரமாகக் கூடி உடனே சட்டம் இயற்றி அதை நடைமுறைக்குக் கொண்டுவருவது போல இதற்கும் ஒரு அவசரச் சட்டம் நிறைவேற்றி அதன் மூலம் ஒரே மாதத்தில் விசாரணையை முடித்து இதைவிட மிக சித்திரவதை செய்து அதுவும் பொது மக்கள் முன்னிலையில் செய்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புக்கள் உண்டு நீதிமன்றங்கள் வழங்கும் உடனடி தீர்ப்பு மட்டுமே மக்களை இத்தகைய தவறான என்கவுண்டர் கொண்டாட்டங்களை ஆதரிக்கச் செய்யாது என்பது மட்டுமல்ல குற்றங்களையும் குறைக்க வழி செய்யும்.


அப்படி எல்லாம் புதிய இந்தியாவில் இந்திய அரசும் நீதித்துறையும் செய்யவில்லை என்றால் புதிய இந்தியாவின்  வக்கிர ஆண்களின் மனதில்  பெண்களும் காண்டமும் ஒன்றுதான் அதாவது யூஸ் அண்ட் த்ரோவ் அல்லது டெஸ்ட்ராயாகத்தான் தோன்றும்

இந்திய வக்கிர ஆண்களின் மனதில் இப்படிப் பட்ட வக்கிர நினைப்புகள், செயல்கள் முற்றிய கேன்ஸராக உள்ளது அதற்காக வைத்தியமாக நீதி போதனையைச் செய்து கொண்டு இருக்க முடியாது அதற்குக் கடுமையான வைத்திய முறையைத்தான் கையாள வேண்டும்

அதுவரை  நாட்டில் எங்கோ ஏதோ ஒரு பெண்ணுக்காக மட்டும் நிகழ்த்தப்படுகிற இத்தகைய என் கவுண்டர் அரங்கேற்றங்களால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் எல்லாம் ஒரு நாள் சமுக வலைத்தள கூத்து தான் ட்ரென்ட்தான்


என்கவுண்டரை  எதிர்க்கும் யாரும் இந்த என்கவுண்டரை எதிர்க்கவில்லை.  இதன் மூலம் சுட்டுக் கொல்வதையும் எதிர்க்கவில்லை ஆனால் இதைச் சாக்கா வைத்து அப்பாவிகளைச் சுட்டு கேஸை மூடும் அநியாயம் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதால் மட்டுமே அதை  எதிர்க்கிறார்கள்.அதற்குள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் என் கவுண்டரை பலர் ஆதரிக்கமாட்டார்கள் இந்த என்கவுண்டரை ஆதரிப்பவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தைச் சற்று நினைவு கூர்ந்தால்  நான் சொல்லவருவது புரியும்


இறுதியாகச் சொல்ல விரும்புவது இந்தியாவில் என் கவுண்டர்கள் பல சமயங்களில் உண்மையை மறைக்கச்  செய்யப்படுவதாக இருக்கலாம் இது போலீஸாரால் மட்டுமல்ல அரசியல் தலைவர்களாலும் செயல்படுத்தப்படுகின்றது என்பதும் உண்மை




அன்புடன்
மதுரைத்தமிழன்

என் கவுண்டர் (Encounter) படுகொலைகள் மூலமாக( Instant Justice) உடனடி நீதி வேண்டுவோர் கட்டாயம் இந்த வழக்கை பற்றி படிக்கவும்
 https://en.m.wikipedia.org/wiki/Murder_of_Pradyuman_Thakur?fbclid=IwAR2YuJeDnZr99djO8AwpL1ION28W8Y1Hbb_V_gqsxXhWTmzKmfSzeunbF0g

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.