Saturday, July 6, 2019

@avargal unmaigal
தமிழ்நாட்டில் இதை கடைபிடிக்காதா ஆட்களே இருக்க மாட்டார்கள்??





 நான் கடந்த முறை இந்தியாவிற்கு வந்த போது என் மனைவியின் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றேன். அந்த வீட்டுல உள்ளவங்க என் மனைவியின் தம்பி முறையில் உள்ள பையனுக்கு  பொண்ணு பார்க்க எல்லோரும்  கிளம்பிட்டு இருந்தாங்க. அவர்கள் என்னைப் பார்த்ததும் அவர்கள் பொண்ணு பார்க்க போவதையே நிறுத்திவிட்டு என்னை நன்றாக உபசரித்தார்கள். எனக்கும் மிகவும் பெருமையாக இருந்தது.  நமக்காக பொண்ணு பார்ப்பதையே நிறுத்திவிட்டு எனக்காக இருந்ததால் நான் காலரை தூக்கிவிட்டு என் மனைவியிடம் பெருமை பேசிக் கொண்டிருந்தேன். அப்பதான் என் மனைவி சொன்னாங்க சும்மா கிடங்க நீங்க ரொம்ப பீத்திகாதிங்க என் உறவினர் வீட்டுல அன்று பெண்பார்க்க போகதா காரணமே நீங்கதான். ஆனா அது நீங்க நினைக்கிறமாதிரி இல்லை...உங்களை பார்த்ததும் சரியான ராவுகாலம் வந்துடுச்சுடா இப்ப போனா போன காரியம் நல்லா நடக்காதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும் அதையும் எங்கிட்ட சொல்லிட்டாங்க .


என் மனைவி இப்படி சொல்லுவதற்கு பதிலாக என்னை பூரிக்கட்டையால் நாலு சாத்து சாத்திருக்கலாமுங்க....

@avargal unmaigal



சரி காமெடி பண்ணது போதும்.... கொஞ்சம் சீரியாஸ இந்த ராகுகாலம் என்ற ஒரு மூட நம்பிக்கையைப்பற்றி பார்ப்போம்.



உலகத்திலேயே ஏன் இந்தியாவிலே இல்லாத ஒரு விஷயம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் அது இந்த ராகுகாலம் எமகண்டம்தான். தமிழ்நாட்டில் ராகுகாலத்தை நம்பாதவர்கள் ஒருசிலரே. எந்த அலுவலகத்துக்குப் போனாலும்  ராகுகாலம், எமகண்ட நேரத்தில் ஒரு வேலையும் நடக்காது. இப்படி ராகுகாலம், எமகண்டம் அதிகம் பார்ப்பதால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மற்றவர்களைவிட  அதிகம் சாதனைகள் படைத்ததாக எந்த புள்ளிவிபரங்கள் இருப்பதாக தெரியவில்லை


மேலை நாடுகளில் இப்படி நல்ல நேரம் பார்க்காமல் ஆரம்பித்து  நடத்தியதினால் என்னவோ அவர்கள் இந்தியாவை விட பல மடங்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் சகுனம் பார்க்கும் நாம் ஏன்,  'தமிழ்நாடு உலகின் முதல் பிரதேசமாக வர நல்ல நல்ல நாள் நேரம் பார்த்து முன்னேறேச் செய்து இருக்க கூடாது


சகுனம், நல்ல நேரம், ராகு காலம் என்று சொல்வதெல்லாம் சும்மா ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே! நடைமுறையில் வாழ்க்கைக்கு இவை எந்த அளவு பயன்படுகின்றன என்றால் பூஜ்ஜியம் தான். சகுனம் பார்க்காமல் செய்யும் காரியம் சரியாக நடக்காது, கெட்டுவிடும் என்றால் சகுனம், சாஸ்திரங்கள் அனைத்தையும் பார்த்து செய்தால் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

இந்த நம்பிக்கைக்கு அடிப்படை என்னவென்று தெரியாமல் பலர் கண்மூடித்தனமாக இன்னும் நம்புவதுதான் வியப்பு. இதில் கலைஞரின் குடும்பம் கூட விதிவிலக்கு அல்ல .ஏன் மூடநம்பிக்கை எதிராக முழங்கி கொண்டிருக்கும் கலைஞர் வீட்டில் கூட எல்லா நிகழ்வுகளும் நல்ல நேரம் பார்த்துதான் நடைபெறுகிறது, அவர்கள் ராகுகாலம் எமகண்டத்தில் சில நிகழ்வுகளை நடத்துகிறார்கள் என்றால் அது உடன்பிறப்புகளின் கல்யாணத்தை சீர் திருத்த முறையில் நடத்துவதாக சொல்லி நடத்துவது மட்டும்தான்


சரி விடுங்க....



இது யாரால எப்போது எப்படி ஆரம்பிக்கபட்டது என தெரியவில்லை அதை ஆரம்பித்துவிட்டவர்கள் யாரோ ஒருவன் தொடர்ந்து வெற்றிக் கொண்டிருப்பதை கண்டு பொறாமைக் கொண்டு அவனின் வேகத்தை தடுக்க இதை ஆரம்பித்து விட்டு இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன். இப்படிபட்ட செயல்கள் மனிதனின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல்களாக  காலம் காலமாக நடந்து வருகிறது


என்னைப் பொருத்தவரை ஒருவர் செய்யும் எந்த செயலும் யாரையும் பாதிக்காமல் இருக்கிறதோ அந்த செயலை செய்யும் நேரங்கள் நல்ல நேரம் என்றும் அதற்கு பதிலாக கெட்ட செயலை செய்யும் எந்த நேரமும் ராகுகால எமகண்ட நேரமே.


இதைபடிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி ராகுகாலம் எமகண்டத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வேலைக்கு அப்பாய்ன்மென்ட் கொடுத்தால் மறுத்து விடுவீர்களா? அல்லது உலகின் அழகான மிக நல்ல பொண்ணு தன் காதலை சொன்னால் ஏற்கமாட்டீர்களா? மிக உயர்ந்த அவார்டை தந்தால் வாங்க மறுத்துவிடுவீர்களா? கோடி ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா? இந்தியாவின் தலைவராக தேர்ந்தெடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா என்ன? சாக கிடக்கும் உங்களுக்கு ரத்தம் தேவைபடும் போது அதை ராகு காலத்தில் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா? உண்மையை சொல்லிவிட்டு போங்களேன்.


நான் சொன்னது தப்பபோ சரியோ ஏதோ என் மனசிலே தோணிச்சு அதனால சொல்லிட்டேன்.. நீங்களும் உங்க மனசில தோணியதை சொல்லாமே

மதுரைத்தமிழன் சரியான ராவுகாலம்டா!  இது ஒரு மீள் பதிவு






அன்புடன்

மதுரைத்தமிழன்

8 comments:

  1. நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி அருமையான கேள்விகள்...

    சிறப்பு...

    ReplyDelete
  2. மதுரைத் தமிழன் .... என்ன சொன்னாலும், நமக்கு ஒன்று பழகிவிட்டால் மாற்றிக்கொள்வது மிகக் கடினம். எந்த முக்கியமான முடிவுகளையும், மீட்டிங்கையும் நான் ராகு காலத்தில் வைத்துக்கொண்டதில்லை. என் Boss இடம் சொல்லிவிடுவேன். அதுபோல போகும்போது 'எங்க போறீங்க' என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் வராது. முக்கியமான ரிப்போர்ட்டுகள் எல்லாம் 1 நம்பரில் முடியும்படியான பக்கங்களில்தான் நான் அனுப்புவேன். 18 பக்கங்கள்தான் ரிப்போர்ட் என்றால், கடைசியில் ஒரு பிளாங்க் பக்கம் வைத்து, அதுக்கும் நம்பரிட்டு அனுப்புவேன். இதெல்லாம் செண்டிமெண்ட் கதைதான்.

    நீங்க கேட்கிற கேள்வி அர்த்தம் உள்ளது. ஆனால் பழகிவிட்டால் மாற்றி நினைக்கத் தோன்றாது. ஆனால் கைமீறிப்போகும் எதற்கும் இதனைப் பார்க்கமுடியாது. வெள்ளி காலை 10:45க்கு விமானம் புறப்படுகிறது என்றால், நான் வீட்டிலிருந்து அதற்கு முன் புறப்படுவேன் அதில் பெரிய விஷயமில்லை. 1:30 மணிக்கு புறப்படுகிறது என்றால் (வெள்ளி) 10:30க்கு முன்னாலேயே வீட்டிலிருந்து கிளம்புவேன் (நினைவில் இருந்தால்). நம்பிக்கையில் லாஜிக் பார்க்கமுடியாது.

    என் பசங்களுக்கு இது தெரியாது என்பதால், அவங்க ராகு காலம்லாம் பார்ப்பதில்லை. அவ்ளோதான் விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வெளிப்படைத்தன்மை ரொம்பவே கவர்ந்தது.

      Delete
  3. படம் - இதனை உங்க மனைவி பார்த்தா நல்ல நேரம்தான். இதுவே எதிர் திசையில் இருந்து இதனைச் செய்தால் கெட்ட நேரம்தான். இதைக்கூடா நான் சொல்லித்தரணுமா?

    ReplyDelete
  4. அப்பாயிண்ட்மெண்ட் - நான் அவங்கள்ட நேரடியா இந்த நேரத்துக்கு வந்துதான் வாங்கிக்கொள்ளமுடியும் என்று சொல்லிடுவேன், சொல்லியிருக்கேன். நம்ப ஆரம்பித்துவிட்டால் டக்கென அதனை விட முடியாது

    ReplyDelete
  5. முடிவில் கேட்ட கேள்விகள் ஸூப்பர்...

    ReplyDelete
  6. ஒரு சில நபர்களை அல்லது ஒரு சில காரியங்களை தள்ளிப்போடுவதற்கு (AVOID பண்ணுவதற்கு) மட்டுமே நான் இராகுகாலம் போன்றவற்றை பயன் படுத்துகிறேன். நான் விரும்பும் விஷயங்களுக்கு நேரம் பார்ப்பது இல்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.