Friday, July 19, 2019

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் அத்திவரதர் ரை சிறப்பு தரிசனம் செய்தது என்ன தப்பா?


மதுரையின் நம்பர் 1 ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக ட்ரீட் செய்யப்பட்டு அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை கணடதும் அது எப்படி என்று கேள்வி கேட்டு விமர்சனம் செய்கிறார்கள் உடனே நமது அறமற்ற நிலையத்துறையின் சீரழிவா?நாடு எங்கே போகிறது?  இது போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர்...



நான் கேட்கிறேன் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் யோக்கியர்களா என்ன? இல்லை யோக்கியர்கள் மட்டும்தான் அங்கு செல்ல வேண்டும் என்றுமென்று ஏதாவது எழுதி வைத்திருக்கிறதா என்ன? அப்படி இருந்திருந்தால் பல கோடி மக்கள் சென்ரு தரிசனம் செய்தவர்களில் சில ஆயிரம் மக்கள் மட்டும்தான் நேர்மையானவர்களாக யோக்கியர்களாக இருந்திருப்பார்கள் மீத முள்ள  அனைவரும் அயோக்கியர்களே அவர்கள் எந்த விதத்திலாவது யாரையாவது ஏமாற்றி சம்பாத்தித்தவர்களாகவே இருப்பார்கள் ஆனால் என்ன ஏமாற்றும் அளவில்தான் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் மற்றபடி எல்லோரும் ஒன்றுதான்


ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக ட்ரீட் செய்யப்பட்டு அத்தி வரதரை சிறப்பு தரிசனம் தவ்று என்றால் எத்தனை தேசிய தமிழகஅரசியல் வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகள்  வந்திருப்பார்கள் அவர்கள் எல்லாம் இந்த ரௌடி வரிச்சூர் செல்வத்தைவிட மோசமானவர்கள்தானே ஏன் ரௌடி வரிச்சூர் செல்வத்திற்கு அப்பன் என்று கூட சொல்லாம் அப்படிப்பட்ட அவர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்கையில் இந்த ரௌடி வரிச்சூர் செல்வத்திற்கும் ஏற்பாடு செய்ததில் தப்பே இல்லைதானே

இப்போது கல்வி தந்தையர்கள் என்று தமிழகத்தில் அழைக்கபடுபவர்களின் கடந்த காலங்களை தோண்டி எடுத்து பாருங்கள் அவர்கள் எல்லாம் இந்த ரௌடி வரிச்சூர் செல்வத்திற்கு அப்பங்களாகத்தான் இருப்பார்கள் அதில் சிறிதும் சந்தேகம் ஏதும் இருக்காதுதானே


தூத்து குடியில் போராடியவர்கள் மீது தேவையில்லாமல் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு போட்ட அதிகாரிகளில் இருந்து ஆட்சியாளர்கள் வரை கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்


ஏன் குற்றங்கள் பல புரிந்த மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு எத்தனை கோவில்களில் சிருப்பு தரிசனங்கள் பூஜைகள் நடத்தப்பட்டன. அப்ப எல்லாம் கோவில்கள் அசுத்தப்ப்டுத்தப்படவில்லையா என்ன?


சரவணபவன் ராஜகோபால்...கடுமையான உழைப்பால், ஒரு சாமான்யன் வர்த்தக சக்ரவர்த்தியாக முடியும் என்று நிரூபித்தவர்..

யோசித்து பார்த்தால் வாழ்க்கை என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு புதிர் என்பது மீண்டும் ஒரு முறை புரியவரும்..

லட்சோப லட்சம் மக்களுக்கு அருமையான உணவை அளித்தவர். பல்லாயிரம் ஊழியர் குடும்பங்களில் வாழ்வாதாரமாக நின்று ஒளியேற்றியவர்..

அவர் செய்யாத இறைபணிகள் இல்லை.. கொடுக் காத நன்கொடைகள் இல்லை..அப்படிப்பட்டவர் பெண் விவகாரத்தில் ஈடுபட்டு கொலை வரைக்கு சென்றவர்தானே அப்படிப்பட்ட அவருக்கு எத்தனை தடவை சிறப்பு தரிசனங்கள் செய்யப்பட்டன.


அப்போதெல்லாம்  வாயை மூடிக் கொண்டவர்கள் ரௌடி வரிச்சூர் செல்வத்திற்கு சிறப்புதரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது மட்டும் ஏன் குரல் கொடுக்க வேண்டும்


ஒன்றுமட்டும் நிச்சயம் இப்படி பட்ட அயோக்கியர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யாலாம் ஆனால் கடவுளோ தன்னை பார்க்க  கூட்டத்தில் சிக்கி தவித்து வரும் பக்தர்களுக்குதான் உண்மையான தரிசனம் கொடுத்து உண்மையான ஆசிர்வாதத்தை தந்து கொண்டிருப்பார்



இப்படி நடப்பது இந்துமதக் கோவில்களில் மட்டுமல்ல மற்றைய மத வழிபாட்டுதளங்களிலும் இப்படித்தானே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Jul 2019

3 comments:

  1. தங்களது கருத்து மறுப்பதற்கில்லை...

    ReplyDelete
  2. தகவல் புதிது ஆனால் கேள்விகள் சரியே பணமிருந்தால் எல்லா தரிசனமும்கிடைக்கும்

    ReplyDelete
  3. உண்மையான பக்தர்களை இறைவன் ஆசீர்வதிப்பார். உண்மை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.