Thursday, July 18, 2019

ஒரு காலத்தில்


ஒரு காலத்தில் அதாவது நான் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அதே நிறுவனத்தில் என் முன்னாள் காதலி (அது யாருன்னு கேட்கிறீங்களா அவள் வேறு யாரும் இல்லை என்னுடைய இன்னாள் மனைவிதான் )என்னுடன் வேலை பார்த்து வந்தாள். அப்போது அவள் தினம் தினமும் சேலை மட்டும்தான் கட்டிவருவாள் நெற்றியில் பொட்டு இருக்கும் தலையில் பூ சூடி அழகாக வருவாள் அதை பார்த்து ரசித்து மயங்கி( மயக்கம் அப்போது இரவு நேரத்தில் அடித்த சரக்கால்தான்)காதலில் விழுந்து அவள் அழகை பாராட்டுவேன்


அப்ப இப்ப எப்படி என்று கேட்கிறீர்களா? இப்பவும் நான் அதிகம் மாறவில்லை அப்படி அழகாக சேலை கட்டி பொட்டுவைத்து பூ சூடி வரும் மற்ற பெண்களின் அழகை ரசிக்கிறேன் அது தப்பாங்க?


ஒரு காலத்தில் என் மனைவி கிச்சன் பக்கம் வந்து சமைக்கும் போது சில சமயங்களில் என்ன சமைப்பது என்று தெரியாமல் ஒரு மாறுதலுக்காக உப்புமா செய்து தருவார் அப்போது உப்புமாவை கண்டால் ஒரு காத தூரம் ஒடுவேன் அவளோ ரசித்து ரசித்து சாப்பிடுவாள்.. ஆனால் இப்ப நான் கிச்சனுக்கு வந்து சமைக்க ஆரம்பித்தவுடன் நானும் ஒரு மாறுதலுக்காக உப்புமா பண்ணினால் அவர் ஒரு காத தூரம் ஒடுகிறாள் நானோ அதை  ரசித்து உண்கிறேன்...உப்புமாவை யார் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் புடிக்கும் போல இருக்கு...



ஒரு காலத்தில் அதாவது கல்யாணத்திற்கு முன்பு நான் மிகவும் நகைச்சுவையாகவும் கிண்டல் கேலி செய்து பேசுவது என் மனைவிக்கு பிடிக்குமாம் இப்ப எல்லாம் நான் அ
ப்படி பேசுவது இல்லையாம்....ஒரே கம்பெளயண்ட் பண்ணுறா....அடியே அப்போது நான் காதலில் இருந்தேன்... ஆனால் இப்ப உன்னை கல்யாணம் பண்ணிய பிற்கு நகைச்சுவை எல்லாம் போய்விட்டது மீண்டு நகைச்சுவையாக பேசுனும் என்றால் நான் வேற யாரையாவது காதலிக்க தொடங்கணும் அதுக்கு உனக்கு சம்மதம் என்றால் சொல்லு என்றால் கையில் பூரிக்கட்டையை அல்லவா தூக்குகிறாள் அதை பார்த்த பின் நகைச்சுவையாகவா  பேச வரும் அழுகையெல்லவா வரும்





அன்புடன்
மதுரைத்தமிழன்
18 Jul 2019

9 comments:

  1. WOMEN MARRY MEN HOPING THEY WILL CHANGE
    MEN MARRY WOMEN HOPING THEY WILL NOT CHANGE

    ReplyDelete
  2. நரைக்க முடியாத காதல்

    ReplyDelete
  3. உப்புமா லாஜிக் எல்லாருக்கும் பொருந்துமா, தெரியவில்லை. பொதுவாக தன் சமையலை தானே ரசித்தால்தான் நன்றாக வரும். ஆனால் என் சமையலை நானே ரசிப்பது என்றில்லாமல் அடுத்தவர் ருசி எப்படியிருக்கும் என்று யோசித்து சமைப்பேன்! (டம டம டம டம...)

    எந்தப் பொருளும் கிடைக்கும் வரை இருக்கும் ஆர்வம் கிடைத்தபின் குறைந்துவிடும்!காதலும் அப்படிதானே?!!!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம்.. இது இணையதள நண்பர்கள் சந்திப்புக்குப் பொருந்துமா

      Delete
  4. ஹா ஹா ஹா ஹா ஹா மதுரை கண்டிப்பா பூரிக்கட்டை பறந்திருக்கும்!ணு நல்லாவே தெரியுது. இல்ல பறக்கப் போவுது! இனி உங்களுக்குப் பூரிக்கட்டை எல்லாம் சரியாவாது திருந்தமாட்டாரு இவர் என்று வேறு ஏதாவது எறியப் போகிறார்..!!ஹிஹிஹி

    எந்த ஆஸ்பத்திரில புக்செஞ்சு வைச்சுருக்கீங்க! ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete
  6. வணக்கம்
    ஜி

    யாவற்றுக்கும் மனசுதான் காரணம் நன்றாக நகைச்சுவை கலந்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. விட்டுவிட்ட மூணு இடுகையும் இப்போ படிச்சுட்டேன். மொபைல்ல கமென்ட் போட்டா எழுத்துப் பிழை வரும்.

    சரவணபவன் மேட்டர் பற்றி மாற்றுக் கருத்து உண்டு. வரிச்சூர் செல்வம்-உங்க பாயின்டுகள் யோசிக்க வேண்டியவை.

    ReplyDelete
  8. உண்மையை நகைச்சுவையோடு எழுதியருக்கீங்க. மறுக்க இயலாது.

    பைபிள்லயும் தொலைந்த ஆட்டிற்கு உள்ள மதிப்பு நம்மிடம் இருக்கும் ஆட்டிற்குக் கிடையாது என்றுதானே இருக்கு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.