Monday, July 22, 2019

மோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி ஆலோசனை



காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் ''அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்,'' என, முதல்வர் எடப்பாடி ம்ற்றும் ஓ..பி.எஸ்., தெரிவிப்பதில் உண்மை ஏதும் இல்லை... உண்மை என்னவென்றால் மோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம்  செய்யத்தான் ஆலோசனை செய்து வருகிறார்களாம்

உண்மையான நிலமை இப்படி இருக்க  காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான பிரதமர் மோடியின், தமிழக வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என பொய்யான செய்திகள் பரப்பபடுகின்றன.

இப்போது உள்ள இடத்தில் மோடி சென்று தரிசனம் செய்ய விரும்பாததற்கு காரணம் கூட்ட நெரிசலில், பக்தர்கள் இறந்துள்ளதால் அந்த இடம் மிக தீட்டுபட்டு இருப்பதாலும் மேலும் மோடி அங்கு வருகை தருவது தேவையில்லாத விமர்சனத்திற்கு இடம் கொடுத்து என்று நினைப்பதாலும் அதிதிவரதரை இடமாற்றம் செய்யலாமா என்று எடப்பாடி மற்றும் ஒபிஏஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம் ...

மோடி திட்டமிட்டப்படி வரப் போகிறாரா அல்லது அத்திவரதர் இடம் மாறப் போகிறாரா என்பது ஒரு சில தினங்களில் தெரிந்துவிடும்

கொஞ்சம் பொறுத்துதான் பார்ப்போம்


அன்புடன்
மதுரைத்தமிழன்


22 Jul 2019

5 comments:

  1. காலக்கெரகமடி கருமாரி.

    ReplyDelete
  2. ஆள்பவருக்குப் பின் தான் ஆண்டவன் என்பது தெரியுமல்லவா

    ReplyDelete
  3. இன்னும் இந்த அத்திவரதர் என்னென்ன திருவிளையாடல் எல்லாம் ஆட இருக்கிறாரோ!!!

    ReplyDelete
  4. உங்க கற்பனைக்கு அளவே இல்லை.

    இப்போ அந்த மண்டபத்தை அடையும் இடம் கொஞ்சம் நெரிசலா இருக்கு. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 30-40000 வந்தபோது அப்படி இல்லை. நிறைய விளம்பரங்களால், ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அந்தக் கோவிலுக்கு வருகிறார்கள். வார இறுதியில் இது 2-3 லட்சங்கள் ஆகும்போது அதனை இப்போதுள்ள நடைமுறை தாங்க முடியாது.

    காஞ்சீபுரமும் குறுகிய தெருக்கள் கொண்டு, ஒரே அடைசலுமாக இருக்கிறது. ஒவ்வொரு 300 மீட்டர்களிலும் ஒரு புகழ் வாய்ந்த கோவில். அதனால் இங்கு வந்தவர்கள் அடுத்த கோவிலுக்குச் செல்வது என்று எல்லாக் கோவில்களிலும் கூட்டம்.

    உங்கள் மெயில் ஐடி இருந்திருந்தால் காஞ்சியின் படங்களை (அத்திவரதரை அல்ல) அனுப்பியிருப்பேன்.

    ReplyDelete
  5. இல்லை ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசிடம் கேட்ட போது இப்போதுள்ள கூட்ட சூழலில் வர வேண்டாம் என்று இவர்கள் தான் சொன்னார்கள். அப்புறம் டோஸ் விழுந்தது. சயன கோலம் எழுந்து நின்று அருள்பாலிப்பது என்ற இரண்டுக்கும் உள்ளே செண்டிமெண்டல் சமாச்சாரம் உள்ளது. அதன் பொருட்டு பயணத்திட்டம் மாற்றப்பட்டது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.