தேசம் ஓன்று சட்டம் இரண்டு
அன்று தமிழ்நாட்டில் 18 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய இந்திய அரசியல் சட்டம் இன்று கர்நாடக எதிர்ப்பு எம் எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுகிறது.
அன்று தமிழ்நாட்டில் 18 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய இந்திய அரசியல் சட்டம் இன்று கர்நாடக எதிர்ப்பு எம் எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுகிறது.
அன்று அம்பேத்காரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் இன்று மோடி மற்றும் அமித்ஷாவால் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது போல....
இந்த திருத்தி அமைக்கப்பட்ட சட்டபடி சட்டம் உங்கள் பக்கம் இருக்க வேண்டுமானால் நீங்கள் பாஜக பக்கம் இருக்க வேண்டும் அவ்வளவுதானய்யா
ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம் என்று சொல்லிக் கூப்பாடு போடுபவர்கள் ஒரே சட்டம் என்பதில் மட்டும் வேறுபட்டு இருக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எல்லா கட்சிகளிலும் வழக்கறிஞர் அணிதான் இருக்கும், ஆனால் பாஜக-வுக்கு மட்டும் நீதிபதி அணியை மட்டும்தான் வைத்திருக்கிறது
இனி எதுவும் சாத்தியம் இந்தியாவில்...
ReplyDeleteஇந்த இடுகையின் கருத்து தவறு மதுரைத் தமிழன்.
ReplyDeleteசட்டம் ஒன்றுதான். அதனை எப்படிப் புரிந்துகொள்கிறார், எப்படி இண்டெர்ப்ரட் செய்கிறார், வந்திருக்கும் கேசை எப்படி லிங்க் பண்ணுகிறார் என்பதில் நீதிபதிகளுக்குள் வித்தியாசம் வந்துவிடும். அதனால்தான் மேல் முறையீடு, இன்னும் மேல் முறையீடு என்று வழக்குகள் நெடுங்காலம் நீட்டிக்கப்பட்டு, வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் நிறைய சம்பளம் பெறுகின்றனர், வேலையும் வருகிறது.
நம்ம சார்பைப் பொறுத்து, இது பாஜக சார்பு, இது திமுக சார்பு, இது நியாயம் என்றெல்லாம் சொல்கிறோம். இப்போ பாருங்க, ஏழுபேர் சிறையில் 25+ வருடங்களுக்கு மேல் இருப்பது - இது நியாயம் என்று சிலரும், பாவம் என்று சிலரும், அநியாயம் என்று சிலரும் கருதுகிறார்கள். சட்டம் ஒன்றுதான். நான் குமாரசாமி, எழுதுவதில் கோட்டை விட்டாரே தவிர நீதியில் கோட்டை விடவில்லை, குன்ஹா ஒரு பக்க சார்பாக (தனிப்பட்ட காரணங்களுக்காக) தீர்ப்பளித்துள்ளார் என்பதில் நிச்சய நம்பிக்கை கொண்டுள்ளேன். இதற்கு மாற்றுக் கருத்து உள்ளவர்களும் நிறையப்பேர் உண்டல்லவா?