Saturday, July 20, 2019

@avargal unmaigal
குற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள் Saravana Bhawan owner P. Rajagopal is a  sexual offender

தமிழர்கள்  மற்ற இனத்தவர்களைவிட தாங்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் படித்தவர்கள் என்று தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வார்கள். அப்படிபட்ட குணத்தை கொண்டவர்கள் சமீப காலங்களாக குற்றவாளிகளை தியாகிகளை விட மேலானவர்கள் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் என்ன மாதிரியான வியாதி என்று புரியவில்லை


சரவணபவனின் உரிமையாளர் இறந்ததும் அவரை என்னமோ புனிதர் போல பலரும் பாராட்டி எழுதின்றனர். அவர் ஒரு முருக வேஷம் போட்ட ஒரு காம மிருகம்...அதுதான் உண்மை அவர் ஹோட்டல் நடத்தினர் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் நல்ல உணவை கொடுத்தார் முருகன் கோவிலுக்கு நிறைய நன்கொடைகள் செய்து இருக்கிறார்.. அப்படி அவர் செய்தது எல்லாம் அவருடைய தனிப்பட்டவரின் வளர்ச்சிக்காதானே ஒழிய தமிழக மக்களின் மீதான அக்கறையோ வள்ர்ச்சிக்கோ சேவைக்கோஅல்ல


நல்லா நோட் பண்ணிக்குங்க இந்தக் பெரிய மனிதரோட பணத்துக்கு அந்த  பெண் ஆசையும்படல இந்தக் பக்தரின் காமத்தை அந்த பெண் தூண்டவும் செய்யல  அல்லது வலியப் போய் இந்த தியாக செம்மலுக்கு அந்த பெண் வலையும் விரிக்கல அப்படி இருந்தும்
சரவணபவனின் உரிமையாளரை புகழ்ந்து அந்த பெண்ணை இகழ்ந்து ஆவதும் அழிவதும்  அழிந்ததும் பெண்ணாலேன்னு எழுதுறாங்க சபல புத்தியால் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி என்று எழுதுவதற்குக் பதிலாக ஒரு பெண்ணால் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளின்னு எழுதுறாங்க..



இறை பக்தியில் ஈடுபட்டால் சபலங்களை கட்டுபடுத்த முடியும் ஆனால் இவ்வளவு பக்திமானாக தன்னைக் காட்டி கொண்டு சபலத்தை கட்டுபடுத்த இவரால் முடியவில்லை என்றால் இவருக்குள் எந்த அளவிற்கு வெறி இருந்திருக்கும் அதுவும் கொலையில் ஈடுபடும் அளவிற்கு...


இதுல என்ன கொடுமை என்னன்னா பேஸ்புக்கில் இருக்கும் பெண் பிரபலங்கள் கூட இந்த மனிதன் இறந்ததும் அண்ணாச்சி என்று அழைத்து அவரையும் அவர் ஹோட்டலையும் புகழ்ந்து எழுதுறாங்க ஏம்மா பிரபலங்களே .ஏம்மா அண்ணாச்சி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன் உங்களுக்கு நல்லா சாப்பாடு போட்டு படுக்கைக்கு அழைத்தால் அப்பவும் அண்ணாச்சி என்றுதான் அழைப்பீங்களோ

படித்த வசதி படைத்த வெட்கம் கெட்டவர்களே! தன்  பண வசதியை வைத்து சாகும் வரை தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அதற்கான தண்டனையை பெறாமல்  நாடகமாடி சென்றவரை பாராட்டிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் என்பது இல்லையா என்ன?


மனசாட்சி  என்று உங்களுக்கு இருந்தால் நீதிக்கு போராடிய அந்த பெண்னை பாராட்டி தன் பணவசதியால் நீதியை விலைக்கு வாங்கினாலும் இறைவனின் நீதீயில் இருந்து அவர் தப்ப முடியவில்லை என்று அல்லவா எழுதி பாராட்டி இருக்க வேண்டும்


நல்ல வேளை இவர் முருகப் பக்தராக இல்லாமல் இராம பக்தராக இருந்து பாஜகவின் தமிழக தலைவராகவும் இருந்திருந்தால் இந்நேரம் அண்ணாவிற்கு அருகில் இந்த அண்ணாச்சியும் உறங்கி கொண்டு இருப்பார் அல்லது குற்றவாளி ஜெயலலிதா அருகில்  இந்த குறறவாளியும் தூங்கி கொடிருப்பார்.


ராஜகோபால் தன்னிடம் உள்ள பணவசதியை  வைத்து கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து கொண்டு நீதியை இழுத்து கொண்டு சென்றார்...அது போல திருச்சஞ்தூர் முருகன் கோவிலுக்கும்
அள்ளி அள்ளி கொடுத்தார் ஆனால் கடவுள் ஒன்றும்  நமது தலைவர்களை போல நீதியரசர்களை போலவோ இல்லாதால் சரியான நேரத்தில் தண்டனை அளித்து இருக்கிறார்.


தாங்கள் செய்த குற்றங்களுக்கு முழு தண்டனை அனுபவிக்காமல் சமீபத்தில் சென்றவரகள் ஜெயலலிதாவும் சரவணபவன் ராஜகோபாலும்தான்.
அன்புடன்
மதுரைத்தமிழன்


 அண்ணாச்சியின் சாவு  கௌரவத்திற்காக செய்த கொலையாக கூட இருக்கலாம். சிறையில் இருப்பது இழுக்கு என்பதால் ... விசாரணை கமிஷன் அமைத்தால் இன்னொரு உண்மை வெளிவரலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

Saravana Bhawan owner P. Rajagopal passes away at hospital in Chennai. Rajagopal was sentenced to life imprisonment for the murder of one of his employees in 2001 and had surrendered last week after the Supreme Court rejected his plea seeking more time.

5 comments:

  1. எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை.

    இராஜகோபால் அவர்கள் தவறு செய்திருக்கலாம். அதற்கான மன உளைச்சல், நஷ்டம் ஆகியவற்றை அடைந்துவிட்டார். மாட்டிக்காத மற்றவர்கள் அவரை எள்ளக்கூடாது. மலைமுழுங்கிய மகாதேவன்கள் இங்கு அரசியலில் யோக்கியர் வேடம் போடறாங்க.

    இராஜகோபால் அவர்களின் உழைப்பு, தொழிலாளர்கள் நலன் பேணிய விதம், மற்ற நல்ல செயல்கள் பாராட்டப்படத் தக்கது

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத்தமிழன்

      //எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை. ///

      கருத்துக்கள் வேறுபடுவது இயல்பே

      //இராஜகோபால் அவர்கள் தவறு செய்திருக்கலாம். ///

      தவறு செய்திருக்கலாம் என்று சொல்வதுதான் தவ்று அவர் தவறு செய்து இருக்கிறார் என்பதுதான் சரியான சொல்...


      //அதற்கான மன உளைச்சல், நஷ்டம் ஆகியவற்றை அடைந்துவிட்டார். ///

      அவர் மன உளைச்சல் நஷ்டம் அடைந்துவிட்டார் என்பதால் மிகப் பெரிய குற்றத்தை மன்னித்துவிட முடியாது... இதுவே என் மகளுக்கோ உங்கள் மகளுக்குகோ நேர்ந்தால் நாம் அவர் மன உளைச்சல், நஷ்டம் ஆகியவற்றை அடைந்துவிட்டார் என்று சொல்லி எளிதில் சென்று விடுவோமா என்ன?


      //மாட்டிக்காத மற்றவர்கள் அவரை எள்ளக்கூடாது.//

      மாட்டதவரை அல்லது பொது வெளியில் ஏதும் தெரியாதவரை எல்லோரும் நல்லவர்கள்தான்.யாரும் யோக்கியர்கள் இல்லைதான் தவ்று செய்வது மனித இயல்பு தான் ஆனால் அது கொலை வரைக்கு சென்று மற்றவர்களின் உயிரை எடுக்கும் அளவிற்கு செல்வது என்பது மன்னிக்க முடியாததுதான்

      /மலைமுழுங்கிய மகாதேவன்கள் இங்கு அரசியலில் யோக்கியர் வேடம் போடறாங்க.///

      உங்களின் இந்த கருத்தை நான் 100 சதவிகிதம் ஒத்துக் கொள்கிறேன்


      //இராஜகோபால் அவர்களின் உழைப்பு, தொழிலாளர்கள் நலன் பேணிய விதம், மற்ற நல்ல செயல்கள் பாராட்டப்படத் தக்கது//

      இதற்காக அனைவரும் அவரை பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இதில் எந்த வித மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்காது.. ஆனால் இதற்காக அவர் செய்த குற்றத்தை மறந்துவிட வேண்டும் அதை பற்றி பேசக் கூடாது என்பதில் எந்தவித நியாயமும் இல்லை


      ஒரு உதாராணம் சொல்லுகிறேன் நாம் வெள்ளை வேஷ்டி கட்டிக்கிட்டு ஒரு பொது விஷேசத்திற்கு செல்லுகிறோம்... அப்போது நம் வேஷ்டியில் ஒரு சிறிய கருப்பு கலரிலோ அல்லது சிவப்பு கலரிலோ ஒரு கரை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வோம் அந்த வேஷ்டியை களைந்து விட்டு வேறு ஒரு நல்ல வேஷ்டியை கட்டி செல்வோம் இதுதான் மனித இயல்பு இந்த வேஷ்டியின் பெரும் பகுதி வெள்ளையாக இருந்தும் ஒரு சீரிய கறை ஏற்பட்டால் அந்த கறைதான் நம் கண்ணிற்கு மிகப் பெரியதாக தெரியும் அது போலதான் இந்த ராஜகோபாலின் செயலும்...

      Delete
  2. நீதிக்குப் போராடி, கடைசியில் குறிப்பிடத்தக்க திருப்தி அடையாத ஜீவ ஜோதி, தன் மறைந்த கொல்லப்பட்ட கணவனுக்குத் தன்னால் ஆன அனைத்தையும் செய்துவிட்டார் என நிம்மதி அடைந்துகொள்ளலாம். Extraordinarily courageous lady

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண்ணிற்கு ஒரு ராயல் சல்யூட்... இந்த பெண் சமுகத்தில் வசதி படைத்தை செல்வாக்கு மிக்க பெரிய ஆளை கடைசிவரை அவரின் பண பலத்திற்கு அஞ்சாமல் துணிந்து நின்றது பாராட்டுக்குரியது இந்த பெண்ணிற்கு எத்தனை வித கனவுகள் இருந்திருக்கும் அத்தனையும் தவிடு பொடியாக்கி இருக்கிறார் ராஜகோபால்... எவ்வளவு மனக் கஷ்டத்தை இந்த பெண் அனுபவித்திருப்பார்

      Delete
  3. '' தாங்கள் செய்த குற்றங்களுக்கு முழு தண்டனை அனுபவிக்காமல் சமீபத்தில் சென்றவர்கள் ஜெயலலிதாவும், சரவண ராஜகோபாலும்... உண்மை!!!...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.