Sunday, January 6, 2019

Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் நாவல் விமர்சனம்


நமது சேலத்துத் தோழமை Gayathri L-ன் எமது நாவல் குறித்தான விமர்சனம். Looks like a proficient enthusiastic critic type review, and yes she is... அன்பும் நன்றியும் மகிழ்வும்...

//வாசகசாலை முப்பெரும் விழாவில் ஆசிரியர்கள் மலர்-விசு அவர்களின் 'Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) வெளியிடப்பட்டது...


சற்றே பெரிய புத்தகம் என்றாலும், the plot and the tone grips u and keeps u going... அதற்கு ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகள்...

ஆசிரியர்களை பற்றிய சிறுக்குறிப்பு, 'கதை பிறந்த கதை' போல ஒரு சிறு முன்னுரை சேர்த்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்...

கதையின் களம் எண்பதுகளில் அமைக்கப்பட்டிருக்கிறது... கிட்டத்தட்ட ஒரு நாடோடி போல் தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்த இளைஞன் விச்சு, +2 முடிப்பதற்காக வேலூர் வந்து சேர, அங்கே முதன்முறையாக நல்ல நண்பர்களை சம்பாதிக்கிறான்... கதையின் ஓட்டத்தில் உமா, ரகு, விஜய், எலி மாம்ஸ், குரு எல்லோரும் நமக்கும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்...

என்ன தான் நான் ஆண்களுடன் பழகி, வளர்ந்திருந்தாலும்... ஆண்-ஆண் நட்பின் dynamics பற்றி அதிக பரிச்சயம் இல்லை... இந்த கதை gives u a sneak peek... எந்தவொரு விஷயத்தையும் ஆசிரியர்கள் வர்ணிக்கும் விதத்தில் நாமும் கூடவே பயணிப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது... கிணறு அட்டகாசங்கள், வேட்டை deserve special mention ❤️

சுஜாதாவின் பிரிவோம்-சந்திப்போம் புத்தகத்துடன் துவங்கும் கதை, அதே புத்தகத்துடன் முடிவது நைஸ் டச்... கதை முழுவதும் இதே தீம் இழையோடுவது யதார்த்தம் கலந்த வாழ்வியல்...

ஆசிரியர்கள் இசைக்காதலர்கள் போலும்... மேற்கத்திய இசையுடன் இளையராஜாவும் போட்டி போட்டு நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்...

டவுன்ஷிப்பின் முதல் சிஏ ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் குரு, அதை அடைந்தபின் வாழ்க்கையை
சுவைக்க ஆசைப்படும்போது... almost everything has changed in the interim... வாழ்க்கை என்பது a means to an end மட்டுமே கிடையாது... அது ஒரு சுவாரஸ்யமான பயணம்... Live in the moment என்பதை இதை விட அழகாக சொல்லியிருக்க முடியாது...

பங்கஜம் பாட்டியின் கதை adds an extra pep... ஆனால் உமாவுடன் அவளுக்கான தொடர்பு அத்தனை புரிப்படவில்லை... உமாவின் பெரியப்பா கதாபாத்திரம் ஒரு திணிப்பு போல் தோன்றுகிறது ஆனால் வேலூரின் வரலாற்றை சொல்ல அவரே சிறந்த தேர்வு...

கதையில் ஆங்காங்கே தென்படும் சென்னை வட்டார மொழி 'வந்துகினு, போய்கினு' கதையுடன் ஒட்டாமல் பிசிர் அடிக்கிறது... இன்னும் கொஞ்சம் கிரிஸ்ப் எடிட்டிங் செய்திருந்தால் கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம்...

உமா-விச்சு இடையில் ஏற்படும் நட்பு காதலாக பரிணாம மாற்றம் அடைந்து, திருமணம் என்ற பந்தத்தில் தான் முடியும் என்ற logical conclusion takes a beating... Somethings are really not meant to be என்கிற fatalistic சிந்தனையை தூண்டுகிறது...

மொத்தத்தில் Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் ஒரு nostalgic trip...

இந்த நாவலை இணைந்து எழுதியவர்கள் மலர் & விசு 


 Those who want to buy online.. heres the link.

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நல்ல விமர்சனம்.
    வாழ்த்துக்கள் எழுத்தாளர்களுக்கு...

    ReplyDelete
  2. எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாசிக்கத் தூண்டுகின்ற மதிப்புரை. ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்...

    வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.