Sunday, May 13, 2018

@avargal unmaigal

தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி


சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரோகினி பாஜிபாகரே. சேலம் மாவட்டம் இதுவரை 171 மாவட்ட ஆட்சியர்களைப் பார்த்துள்ளது. அதில், 170 மாவட்ட ஆட்சியர்கள் ஆண்கள் தான். இந்நிலையில், 171-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி தான், அம்மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர்.

தமிழகத்தில் எந்த மாவட்ட ஆட்சியாளரும் இவரைப் போல மீடியாக்கள் வெளிச்சத்தில் வெளிவந்தது இல்லை.. ஏன் மற்ற மாவட்டங்களில்  மாவட்ட ஆட்சியாளர்கள் என்று ஒருவர் இருக்கிறாரா ? அவர்கள் அந்த மாவட்டத்திற்கு ஏதும் செய்கிறாரா என்று பார்த்தால் அதற்கு பதில் யாரிடமும் இல்லை.. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியாளர் அப்படி அல்ல.. அவர் ஒரு கடவுளை போன்றவர் அவரை எங்கும் நாம் காணலாம். தண்ணிருக்காக ஒரு குடும்ப பெண் அடி பம்ம்பில் தண்ணிர் அடித்து கொண்டிருந்தால் உடனே அவரே போய் அடித்து கொடுப்பதுமட்டுமல்ல உடனே அந்த அடி பம்பை எடுத்து விட்டு அங்கு மோட்டார் ஒன்றை பொருத்தி அதன் மூலம் நாள் முழுவதும் தண்ணீர் வர செய்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பார். அது மட்டுமல்ல

சேலத்தில் ஒடும் அரசு பஸ்ஸுக்கள் மிக சுத்தமானவை அது மட்டுமல்ல தரத்தில் மிக உயர்ந்தது.. காரணம் இங்கே  ஆட்சி செய்யும் கலெக்டர்தான்  பஸ் கண்ணாடியில் ஒரு சிறு கீறல் இருந்தாலும் அந்த பஸ் ஒட தடை செய்துவிடுவார், சாக்கடைகளை சுத்தம் செய்யும் சுகாதார தொழிலாளிகள்  அதறகான உபகரணம் இன்றி செயல்படுவதை பார்த்தால் உடனே அவ்ரே சென்று அந்த சாக்கடையை சுத்தம் செய்துவிடுவார். இப்போது சேலம் மாவட்டத்தில்தான் சுகாதார தொழிலாளிகள் கழிவரைகளில் உள்ள மலங்களை கைகளால்  அள்ளுவது இல்லை .. அப்படி யாராவது கையினால் அள்ளுகிறார்கள் என்று சொன்னால் அந்த பகுதி சேலம் மாவாட்டமாக இருக்காது.


இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியாளரால் கிழ்கண்ட நல்ல நிகழ்வுகள் சேலம் மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கிறது.. நம்ம முடியாதவர்கள் அங்கு சென்று நேரில் பார்க்கலாம்


சேலத்தில் ஒரு போலீசாரும் லஞ்சமே வாங்குவதில்லை .அது மட்டுமல்ல அரசு அலுவலங்களில் கூட யாரும் கை  நீட்டி லஞ்சம் வாங்குவதில்லை


சேலத்தில் போடப்பட்டுள்ள ரோடுகள் உலக தரம் வாய்ந்தவை குண்டும் குழியுமாக இருக்காது, ரோடு போடும் போது அவரே கூட இருந்து போடுவதால் காண்ட்ராக்டர்கள் ஏமாற்ற முடியாது.

சேலம் மாவட்டத்தில் கொசுக்களே கிடையாது. காரணம் அவரே மாவட்டம் முழுவதும் பூச்சி மருந்து அடித்துவிடுவார்


சேலத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் போலி சரக்குகள் விற்பனை செய்ய முடியாது ஏனென்றால் அங்கேயும் சென்று அவரே டெஸ்ட் செய்து தவறு இருந்தால் கண்டுபிடித்து தடை செய்து விடுவார்


கடைகளில் விற்க்கப்படும் பொருட்கள் உலக தரம் வாய்ந்தவை கலப்படமில்லாதவை

சேலத்தில் பிச்சைகாரர்களே இல்லாமல் செய்துவிட்டார் ஒரு வேலை நீங்கள் பிச்சைகாரர் ஒருவரை பார்த்துவிட்டால் அது சேலமாக இருக்காது


சேலத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கட்டிடடங்கள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு கட்டப்பட்டவை

சேலமாவட்டத்தில் உள்ளபள்ளிகளில்  நன் கொடை என்ற பேச்சுக்கே இடமில்லை.. அரசு சொன்ன கட்டணம் மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது அதை மீறும் பள்ளிக்கூடங்கள் உடனே இழுத்து இவரால் முடப்பட்டு இருக்கிறது


இதுமட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் வெயிலோ மழையோ இவரிடம் அனுமதி கேட்டுதான் பெய்யுமாக்கும்.



பின் குறிப்புகள் :

1. இந்தியாவில் உள்ள கலெக்டர்களிலேயே மிகவும் அதிக அளவு விளம்பரபிரியவர்களில் இந்த கலெக்ட்ரர்தான் டாப்.
2. இவர் ஒருவர் மட்டும்தான் தன் வேலையை பொது இடங்களில் செய்யும் போது அனைத்து அதிகாரிகளையும் வீடியோகிராபர்கலையும் முடிந்தால் மீடியாவையும் அழைத்து செல்வார். ஆனால் காமிரா முன்னால் இவர் ஒருத்தர் மட்டும் ஆய்வு செய்வார் கூட வரும்  அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் பார்வையாளராகத்தான் இருப்பார்கள்

3. இவர் ஆட்சி புரியும் மாவட்டத்திற்கு முதல்வரோ அல்லது கவர்னரோ வந்தால் இவர்தான் அவர்களுக்கு முன் இருப்பார். வேறு எந்த மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த அளவு அதிகாரம் கிடையாது. இதை நம்பாதவர்கள் யாரும் இருந்தால் உங்கள் மாவட்டத்திற்கு த்ற்போது தமிழக முதல்வரோ அல்லது கவர்னரோ வந்து இருந்தால் உங்கள் மாவட்ட கலெக்டர்கள்  ரோகிணி மாதிரி அவர்கள் அருகில் நிற்பதை ஒரு போட்டோவாவது எடுத்து காண்பியுங்களேன்.


இப்படி முதல்வரோடு அல்லது கவர்னர்ரோடு இவர் முன் நிற்பதற்கு அதிகாரம் இவருக்கு மட்டும் கிடைத்தது எப்படி என்று பார்த்தால் இவரின் வீளம்பர ஆசைக்கான் பின்புலம் விளங்கும்.


இதையெல்லாம் படித்து சார் நல்லதை செய்பவரை குறை சொல்லாதீர்கள் என்பவர்களே இவர் உண்மையில் நல்லது செய்பவர்தான் என்றால் மற்ற மாவட்ட கலெக்டர்கள் எல்லாம் நல்லது செய்யாதவர்களா? ஆமாம் என்றால் வெட்டியாக சீட்டை தேய்த்துவிட்டு போகும் மற்ற மாவட்ட ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவதுதானே நாம் செய்யும் செயல்.. அதை நீங்கள் செய்வீர்களா?


சரி நான் சொன்னதை எல்லாம் படித்தவர்களே கீழே ப்யூஸ் மனுஷ் சொல்வதை படித்துதான் பாருங்களேன்.
Piyush Manush
April 6 2018

Rohini Bhajibhakare, Collector of Salem is daughter in law of Shankar Bidari, retd DGP Karnataka. His hatred for Tamil folks is well known and presently he is in the BJP. He will be contesting in the upcoming elections in Karnataka and the stand that Bjp has taken openly is no water for tn. As STF chief the harassment of Tamil folks in trying to nab veerapan has been very well documented.

Vijaiendra Bidari, sp, Tirunelveli, husband of the Collector of Salem is another ruthless officer who has filed numerous false cases on people protesting against the nuclear power plant in koodankulam. He is known to have close ties with the mining lobby in the south TN region as his father is close to the mining lobby in Bellary, Karnataka.

Presently in Salem, it is a very well known fact that Thriveni group wields loads of power with Eps at the helm of affairs in Tamilnadu. Thriveni group headed by brothers Prabhakaran and Bala Subramaniam have made billions from the illegal proceeds of iron ore mining in orrissa and are presently very close to the BJP power centers. The Dist administration is full time busy in wasting public money on acquiring land for a airport that would never work. Thriveni group owns 100's of Acres opposite to the present airport. The airport defunct for the past 30 years is being revived by running a single flight on a daily basis with subsidized tickets.

Earlier land acquisition by the Salem Dist administration has ended up with private hands too. Siscol, a joint venture of government and Lakshmi machine works acquired 1500 acres of land and it was then given to Jindal steel work for pittance. Now Salem steel plant too is being privatized. This land snatching exercise for the Salem airport is for sure going the same way looking at the earnestness with which revenue officials are running around disturbing the villagers.

https://www.facebook.com/piyush.manush/posts/10156521596539617


டிஸ்கி : கலெக்டர் ரோகிணி ஸ்மார்ட்டான  & மிக  அழகான ஆள்தான் அது மட்டுமல்ல  நன்றாக படித்து  IAS எக்ஸாம் எழுதி பாஸாகி கலெக்டர் ஆகி நடிப்பதற்கு பதிலாக நேரடியாக திரைத்துறையில் நடித்தால் நயன் தாரா அனுஷ்கா எல்லோரையும் தூக்கி சப்பிட்டு இருக்கலாமே அதன் பின் கட்சி ஆரம்பித்து முதல்வாரகவும் ஆகி இருக்கலாம்.... ஹும்ம்ம் தமிழக தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டத்து திரைப்பட துறையினர் மட்டுமல்ல கலெக்டர்களும் அதற்கான போட்டிகளிள் இறங்கிவிட்டார்கள் போல இருக்கிறது

ரோகினி உங்களுக்கு அரசியலில் வர விருப்பம் இருந்தால் முதலில் மறைந்து இருந்து பாஜகவிற்காக உழைப்பதற்கு பதிலாக நேரடியாக தமிழக பாஜக தலைவர் பதவியை வாங்கி அதன் பின் நீங்கள் செயல்பட்டால் நிச்சயம் சக்ஸஸ் ஆக மிக அதிக அளவு வாய்ய்ப்பு இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்


14 comments:

  1. மிக அவசியமான பதிவு நண்பரே..! அதிகாரத்தில் இருப்பவர்களின் அந்தரங்க செயல்பாடுகள் வெளியரங்கமாகட்டும்.. வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் ஒரு குருப் இவர் ஏதோ யாரும் செய்யாததை செய்தது மாதிரி பில்ட்ப் கொடுக்கிறாங்க அதனாலதான் இந்த பதிவு. இப்ப்டி பில்டப் கொடுக்கிறவர்கள் உஆரு பார்த்தால் கொண்டை வெளியே நன்றாகவே தெரிகிறது

      Delete
  2. எப்படியாவது மக்கள் நலமடைந்தால் சரி ரோஹிணியின் செயல்களை விமரிசிப்போம் அவரது நோக்கம் அவருக்கு மட்டும்தான் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு உண்மையில் யார் நல்லது செய்தாலும் அதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் நான் பாராட்டுவேன் ஆனால் நல்லது செய்வது போல நடிப்பதுதான் தப்பு... நீங்கள் சொல்வதும் சரிதான் அவரது உள் நோக்கம் அவருக்கு மட்டுமே தெரியும்

      Delete
  3. ஜியெம்பி ஐயா சொல்வது போல் மக்களுக்கு நலமானால் நலமே...

    ReplyDelete
    Replies
    1. க்களுக்கு நல்லது செய்தால் அவர் தலைவாரக அல்ல தெய்வமாக மதிக்கப்படுவார்

      Delete
  4. அவங்க சீன் போடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்படி ஒரு கதை இருப்பது தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களை போலத்தான் நினைத்து இருந்தேன்..ஆனால் இப்பதான் கொண்டை வெளியே தெரிய ஆரம்பிக்கிறது

      Delete
  5. நான் நெட்டில் தெரிந்து கொண்ட வகையில் ரோஹிணி நல்லது செய்வது போலவேதான் தெரிகிறது. மக்களுக்கு நல்லது நடந்து மக்கள் அவரை விரும்பினால் நலல்துதானே சகோ இல்லையா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லது செய்வது போலத்தான் தோன்ருகிறது என்று நீங்களே சொல்லுகிறீர்கள் ஆனால் நல்லது பண்ணுகிறார் என்று அடித்து சொல்ல முடியவில்லையே.. மற்ற ஆட்சியாளர்கள் செய்வது போலத்தான் இவரும் செய்கிறார் ஆனால் அதை வெளிச்சம் போட்டு தான் மட்டும் செய்வதாக காண்பிக்கிறார்.

      உண்மையிலே அவர் நல்லதுதான் செய்கிறார் என்றால் நான் பின் குறிப்பு என்று சொல்வதற்கு முந்தையவைகளில் சொன்னது எல்லாம் நடந்து இருக்க வேண்டும்... அப்படி செய்து இருந்தால் நிச்சயம் பாராட்ட வேண்டும்... அவர் ஆட்சி செய்யும் மாவட்ட அரசு அலுவலங்களில் பணம் கொடுக்காமல் காரியம் ஆகுமா? அல்லது அந்த மாவட்டத்தில் பள்ளிகளில் அரசு சொன்ன அளவிற்கு மட்டும்தான் பீஸ் வாங்கப்படுகிறதா அதை சோதனை செஉது சரி செய்து உள்ளாரா? இதை அந்த பகுதி மக்கள் வந்து ஆதாரத்துடன் சொல்லட்டுமே

      Delete
    2. You can SUSPECT anybody, including your GOD- whoever he/she may be? உதவி செய்யலைனா உதவி செய்யலை. செஞ்சா நடிப்பா உண்மையானு தெரியலை? என்ன கேவலமான ஜென்மங்கள் நம்ம எல்லாம்? யாரையும் விமர்சிக்க நமக்கு மட்டும் தகுதி இருக்கு? ஏன்னா நம்ம யோக்கியன். அதுவும் தமிழன்? சரிதானே?

      You dig out everyone's background and caste certificate and ANALYZE them? YOU are PART of the problem here. It is not her, something wrong with YOU!

      Delete
  6. ஆஹா நம்ம ட்ரூத் யாரையோ பாராட்டறாரே னு நினைச்சேன் :)
    கடைசீல பின்குறிப்பு பார்த்துதான் புரிஞ்சது இது sarcasm னு கர்ர்ர் .
    எனக்கு ஒன்னு மட்டும் புரில .இவ்ளோ சொல்றரே பியூஷ் அவரைபற்றியும் பல புரளிகள் வந்து .உமா சங்கர் அப்புறம் சகாயம் இவர்களையும் விட்டுவைக்காத கூட்டம் தானே மக்கள் .

    ReplyDelete
  7. பல கலெக்டர்கள் அலுவலர்கள் விளம்பரப் பிரியர்களாக இருக்கிறார்கள். ர்கோஇனி பேருந்தில் ஆஎரி ஆய்வு செய்கிறார் என்று நெட்டிசன்கள் ஆகா ஓகோ என்று பராட்டியபோதே இவை விளம்பரம்தான் என்று கூறி இருந்தேன்.

    ReplyDelete
  8. "Salem: In a noble gesture and pleasant surprise for students of a primary school, Salem District Collector Rohini R. Bhajibhakare took lessons for them on Thursday even as teachers skipped class to participate in a protest called by a section of the government employees.

    The collector, who was returning after inaugurating a tree plantation programme, stopped her car at a primary school in Rajapalayam village near Mallikarai and took English lessons for students. She taught students for about 15 minutes. The students felt enthused to learn good English from the woman collector."
    முன்பு ஒருமுறை இந்த நியூசை படித்துவிட்டு அதன் பின்பு அதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டு இருந்ததை இப்போது நான் நினைவுகூறுகிறேன்!! நமது ஜனநாயகத்திற்கு இத்தகைய ஜோக்கர்களும் அவசியம் தேவைதான்!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.