Wednesday, May 2, 2018


@avargalunmaigal
சாமான்ய மனிதனின் பேஸ்புக் கிறுக்கல்கள்

முட்டாள்தனம்தான் முதல்வர்களுக்குரிய தகுதி என்று ஆகிய பின் சிவில் எக்ஸாமை சிவில் எஞ்சீனியர்கள் மட்டும்தான் எழுதனும் என்று அந்த முதல்வர் சொன்னால் கேலி பண்ணக்கூடாது என்று இந்த சமுகத்திற்கு தெரியவில்லை


தமிழக அரசியலில் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதால் அரசியலுக்கு நடிகர்கள் வந்ததால், இப்பொழுது தமிழக திரைப்பட துறையில் நல்ல நடிகர்களுக்கு வெற்றிடம் ஏற்ப்பட்டு இருக்கிறதாம்  அதை நிரப்ப அரசியல் வாதிகள் தயாரா? அல்லது புது முகங்கள் வர தயாரா? எவ்வளவு நாள்தான் கிழட்டு முகங்களையே பார்த்து கொண்டிருப்பது



மனசாட்சிப்படி தீர்ப்பு அளித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜியை சட்டப்படி கேலி செய்வது தவறு அதனால் அவரை கேலி பண்ணி மீம்ஸ் போடுபவர்கள் மீம்ஸை மனசாட்சிபடி போடுகிறோம் என்று சொல்லி போடுவது தப்பில்லை


முன்பு குற்றங்களை  மற்றவர்களுக்கு தெரியாமல் செஞ்சார்கள் ஆனால் இப்போது குற்றங்களை மிகவும் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் காரணம் இப்போது உள்ள நீதிபதிகள் அவரவர்களின் மனசாட்சிபடி தீர்ப்பு அளிக்க ஆரம்பித்துவிட்டதால்


@avargal unmaigal

முன்பு இந்திய தினசரி நாளிதழ்கள் பி.டி.ஐ செய்தி நிறுவனத்தில் இருந்து வரும் செய்தியை ஆதாரமாக வைத்து  செய்திகளை தங்கள் பாணியில் எழுதி வெளியிட்டு வந்தனர். ஆனால் இப்பொழுதோ மோடியிடம் இருந்து வரும்  "போலிச்' செய்திகளை வைத்து அதை உண்மை செய்திகள் போல தங்கள் பாணியில்  எழுதி வெளியிட்டு வருகின்றனர் #IndianMedia




அன்புடன்
மதுரைத்தமிழன்
எனது பேஸ்புக் கிறுக்கல்கள்
02 May 2018

5 comments:

  1. யோசிக்க வேண்டிய, அதே சமயம் உண்மையான பதிவு.

    ReplyDelete
  2. ரொம்ப நக்கலாச்சுது உங்களுக்கு

    ReplyDelete
  3. சினிமாத்துறையில் வெற்றிடமா ? நானும் இறங்கி பார்க்கலாமோ... ஆனால் வில்லன் நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லையே...

    ReplyDelete
  4. மாசாட்சி என்பதே இஷ்டத்துக்கு வளைக்கக்கூடியதுதானே

    ReplyDelete
  5. என்ன செய்வது எல்லா நேரம் வேறென்ன சொல்வது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.