Thursday, May 17, 2018

ஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதா?


ஜனநாயக நாடாக இருந்து வரும் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவருகிறது. அதை எதிர்ப்பவர்கள் மட்டுமன்றி ஆதரிப்பவர்களும் வருங்காலத்தில் மிகவும் பாதிக்கப்படப் போகின்றனர்... அப்படி தாங்கள் பாதிக்கப்பட்டு அழிகிறோம் என்று உணரும் போது எல்லாம் நம் கைவிட்டு போய் இருக்கும்..தங்களது வருங்கால சந்ததியினர் நாசமாக போனாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களாகவே இந்த கால மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அய்யோ...


கர்நாடக தேர்தலும் நீட் எக்ஸாமும் ஒன்றுதான்....தவறான சட்டத்தால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது

கறுப்புபண நடவடிக்கையால் மோடியால் கைப்பற்றப்பட்ட பணம் இப்போது கர்நாடாகவில் ஒவ்வொரு எம்.எல்,ஏக்களுக்கும் 100 கோடி வீதம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது... கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை வெற்றி #ஜெய்ஹிந்த்


29 தொகுதிகளில் பாஜக வுக்கு டெபாசிட் காலி. அதை ஈடுகட்டதானே ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் 100 கோடி ரூபாயை பாஜக தலைமை இன்வெஸ்ட்மெண்ட் பண்ணுகிறது.

எப்போது வோட்டுக்கு மக்கள் பணம் வாங்கத் தொடங்கிவிட்டார்களோ அப்போதே அவர்கள் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்களும் தங்களது சீட்டுக்களுக்கு எதிர்கட்சி தலைமையிடம் இருந்து 100 கோடி ரூபாய் பெற்றுக் கொள்ள் ரெடியாகிவிட்டனர்


மோடி அரசின் ஜன்நாயக படுகொலைகள் தீவிரவாதிகளின் படுகொலைகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல #karnataka

பப்பு என்று அழைக்கப்படும் ராகுல் காந்தி குமாரசாமியை மிக எளிதாக விலை பேசி வளைத்துவிட்டார்.. ஆனால் சாணக்கியர்களான அமித்ஷாவும் மோடியும் முதல் ரவுண்டி பப்புவிடம் தோற்று போய்ருக்கிறார்கள்


எடியூரப்பா 15 நாளில் பெரும்பான்மையை நிறுபிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்.... ஹூம் அதன் பின் இன்னும் 15 நாள் எக்ஸ்டென்சன் தரப்படும்......அதன் பின் அதௌ ஒரு தொடர்கதையாக தொடரும்


ஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது

இந்திய சட்டப்படி எடியூரப்பா பதவி ஏற்றது செல்லாதாம் அடேய் இந்திய சட்டம் இப்போது மோடி சட்டமாக மாறி ரொம்ப நாளாகிவிட்டது அது கூட தெரியாமல் இருக்கிறீர்களே


அந்த காலத்தில் காங்கிரஸ்காரன் கட்சியைகளைத்தான் உடைத்தான் ஆனால் பாஜகவோ ஒரு படி  மேலே சென்று சட்டத்தையே உடைத்து நொறுக்கி கொண்டு இருக்கிறது. #ஐ லவ் பிஜேபி

எடியுரப்பா பதவி ஏற்புக்கு சட்டத்தில் இடம் இருந்தாலும் அவர் பெரும்பான்மை நிருபிக்கபடாத வரையில் அவர் புதிய சட்டங்களில் கையெழுத்து போடுவது என்பது மிக மோசமானது.. இந்திய சட்டத்தில் இப்ப்டி ஒரு பெரிய ஒட்டை இருக்கிறது

கர்நாடாகவில் பிஜேபி ஆட்சியை பிடித்துவிட்டது...இதை மாற்ற மோடி அரசில் சட்டம் ஏதும் இல்லை. அதனால் மற்ற கட்சிகள் செய்யும் ஏற்பாடு எல்லாம் வேஸ்ட் அதனால வேற வேலை இருந்தால் பார்க்க போகலாம்

பிஜேபியை அழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அந்த கட்சியில் நாம் ஸ்லீப்பர் செல்காக சேர்ந்து கொண்டு அங்கு இருக்கும் பக்தால்ஸைவிட நாம் மிக அதிகமாக கூவி கரியாங்களை போல அழிக்க தொடங்குவதுதான் மிக சிற்ந்த செயல் அதைவிட்ட்டால் வேறு வழி ஏதும் இல்லை


நாட்டை நாசமக்குவதில் காங்கிரஸுக்கு கொஞ்சமும் சளைத்தல்ல என்று பிஜேபி செயல்படும் போது பேசாமல் இரண்டு பேரும் கூட்டணி வைச்சு கொண்டு சண்டை போடாமல் நாட்டை நாசப்படுத்துவதை தொடரலாமே  இந்திய மக்களும் அதைத்தானே விரும்புகிறார்கள்

கர்நாடக வெற்றி மோடியின் செல்வாக்கிற்கு கிடைத்த வெற்றி அல்ல அவரின் பிரதமர் என்ற அதிகாரத்திற்கு கிடைத்த வெற்றி

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு அப்புறம் மிக பெரியதாக  வரலாற்றில் பேசப்படும்  படுகொலை மோடி செய்யும் ஜனநாயக படுகொலையாகத்தான் இருக்கும் பொறுத்து இருந்து பாருங்கள்


இனிமேல் பாகிஸ்தானனை பற்றி கிண்டல் கேலி வேண்டாம் அதற்கு இணையாக இந்தியாவை கொண்டு செல்லும் பாதையில் மோடி செயல்பட்டு கொண்டிருக்கிறார். #ஜெய்ஹிந்த்


அன்புடன்
மதுரைத்தமிழன்
17 May 2018

5 comments:

  1. நீங்கள் சொல்வதுபோல் மக்கள் தமது சந்ததிகளின் வாழ்வைப்பற்றி கவலைப்படவில்லை நண்பரே.

    ReplyDelete
  2. சர்வாதிகாரியின் ஆட்சியில் இந்தியா வாழத்தகுதியற்ற நாடாக மாறிக்கொண்டு இருக்கின்றது.

    ReplyDelete
  3. will you please change the header to something else? very offensive for those who cannot bear a child

    ReplyDelete
    Replies
    1. குழந்தை இல்லாதவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் அல்ல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க அதை விட அழுத்தமாக சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை என்பதால் அப்படி பதிந்து இருந்தேன். இப்போது அதை நீங்களும் மற்று ஒருவரும் சொன்னதால் நீக்கிவிட்டேன்..

      சுட்டிக்காட்டியதற்கு நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.