Wednesday, May 23, 2018

போராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள்


தமிழக மக்களே உங்கள் உரிமைக்காக போராடுங்கள் அதில் தவறு இல்லை ஆனால் அப்படி போராடும் போது தவறு செய்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் திசை திரும்பிவிடும். தூத்துகுடியில் போராடும் உங்கள் பக்கம் நியாயங்கள் இருக்கலாம் ஆனால் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு அது நியாயமாக தெரியவில்லை  அதனால் அதை ஒடுக்க அவர்கள்  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து  நிற்கிறார்கள்... 99 நாள் அறவழியில் போராடிய நீங்கள் 100 வது நாள் போராடும் போது அதில் சில பேர் செய்த தவறான செயல்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்  இப்படி தவறுகளை செய்வீர்கள் அல்லது இப்படி சில ஆட்களை விட்டு அதிகார வர்ககமே தவறு செய்யவிட்டு பழியை உங்கள் மீது போட்டும் இருக்கலாம்.... அவர்கள் அப்படி செய்துவிட்டு அதன் பின் போலீஸாரை ஏவிவீட்டு உங்களை சுட்டு தள்ளி இருக்கிறார்கள்..

அரசு சொல்லுவதை  நிறைவேற்றுவதுதான் சாதாரண போலீசாரின் கடமை அதனால் அவர்கள் மீது கோபப்பட்டு தாக்குவது சரியல்ல நீங்கள் தாக்குவது என்றால் அந்த அதிகார வர்க்கத்தைதான் சூழ்ச்சி செய்து தாக்க வேண்டுமே தவிர போலீஸாரை அல்ல போலீஸாரும் உங்களை போல உள்ள ஒரு மனிதர்தான் அவர்களை தாக்கும் போது அவர்களுக்கும் உணர்ச்சி ஏற்படுவது இயல்பு அவர்களின் உயிரும் அவர்களுக்கு மதிப்புதானே. அப்படி சிந்தித்து செய்லபடவில்லையென்றால் நிச்சய்ம இந்த மாதிரி உயிர் இழப்புக்கள் ஏற்படுவதை மேலும் தவிர்க்க இயலாது. சில சமயங்களில் சாமயோசிதாமாகத்தான் செயல்பட வேண்டும் உணர்ச்சி வசப்படக் கூடாது..




மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் எதிர்க்க வேண்டியது அந்த ஆளும் அதிகார வர்க்கத்தைதான் அவர்கள் ஏவும் போலீசை அல்ல... அதிகார வர்க்கம் அனுப்பும் போலீசை உங்கள் நட்பாக்க்கி அவர்களை விட்டே அந்த அதிகார வர்க்கத்தை மறைமுகமாக எதிர்த்து அழிக்க வேண்டும் அதுதான் சாணக்கிய தனம் போலீஸாரும் நம்மை போல ஒருவரே அவருக்கும் குடும்பம் பிள்ளைகள் உண்டு அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள்தானே அவர்களுக்கும் அங்குள்ள நிலமை தெரியாதா என்ன? அதனால் அவர்களை மறைமுகமாக பயன்படுத்து அதிகார வர்க்கத்தை அழிக்க முற்பட வேண்டும்

மேலும் போராடும் போது பொது சொத்துக்களை நாசம் செய்ய வேண்டாம் அது உங்களை போல உள்ள் ஒருவரின் கடின உழைப்பால் சம்பாதித்ததுதான் அதை நீங்கள் அழித்தால் அவர்கள் இந்த போராட்டத்திற்கு எதிராக திரும்ப கூடும் அது போராட்டத்தை வலுவிலக்க செய்யும்.. நீங்கள் அழிக்க நினைத்தால் அதை அதிகார வர்க்கத்தின் சொத்துகளைதானே தவிர பொதுமக்களின் சொத்துகளை அல்ல

போராடும் உணர்வு இருக்க வேண்டும் ஆனால் போராடும் போது உணர்ச்சி வசப்படக்கூடாது நிதானம் மிக முக்கியம் அப்போதுதான் நாம் போராட்டத்தில் வெற்றி பெற முடியும்..

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது புலியை போல பதுங்கி அமைதி காத்து கொளுங்கள் அதன் பின் அதி வேகமாக பாயுங்கள் அப்படி பாயும் போது உங்களை அடக்கி ஆழும் அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்து அழியுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நியாயமான, உண்மையான ஆலோசனை.

    ReplyDelete
  2. நல்ல பதிவு நண்பரே.. உண்மை.!! போலீசாருக்கும் மனைவி பிள்ளைகள் உண்டு. ஆனால் காக்கிசட்டை அணிந்தவுடன் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேர் மக்களை அடிமைகளாகக் கருதிக்கொண்டு செயல்படுவதும் மறுக்க முடியாது.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. நல்ல தலைமைதான் இப்போதைய தேவை

    ReplyDelete
  4. அற்புதமான இந்தச் சூழலில் மிக மிக அவசியமான பதிவு பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மக்களுக்கு நன்மை செய்யத்தான் அரசு, ஆனால் அதை சிலர் தன் நன்மைக்கு மட்டும் ஆட்டுவிக்கிறார்கள் ...

    ReplyDelete
  6. உரிய நேரத்தில் வழங்கப்பட்ட மிகச் சரியான பரிந்துரை.

    ReplyDelete
  7. நல்ல பதிவு. சரியான தலைமை இல்லாதது இந்த நிகழ்விற்கு ஒரு காரணம். மேலிட ஆணை என்றாலும் போலீஸ் கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.