Saturday, May 12, 2018

@avargalunmaigal @avargal Unmaigal
தமிழக போலிஸும் எஸ்.வி,சேகரும்


பேஸ் புக் மூலம் தவறான கருத்துகளை பரப்பிய எஸ்,வி,சேகர் சட்டத்திற்கு பயந்து ஒழியவில்லை மறையவில்லை சட்டத்தை கேலி செய்து கோயில் கோயிலாக சென்று வந்து கொண்டிருக்கிறார். என்ன அவர் சமுக வலைத்தளங்களிலும் டிவி.சேனல்களில் மட்டும் தன் தலையை காட்டவில்லை.

நீதிபதிகள் கண்டணம் தெரிவித்தும் ..போலீஸ்சாரோ அவரை வலைவீசி தேடி வருவதாக சொல்லுகிறது

வலை வீசி எஸ்.வி, சேகரை தேடும் தமிழக போலிஸிடம்  எஸ்.வி, சேகரை நாமே பிடித்து கொடுத்தாலும் இவர் எஸ்.வி, சேகர் அல்ல என்று விட்டு செல்லும் நிலையில்தான் தமிழக போலீஸ் இருக்கிறது,


இதற்காக நாம் தமிழக போலீஸின் திறமையில் சந்தேகப்படவோ அல்லது அவர்களின்  திறமையை குறை சொல்லவோ கூடாது. அவர்கள் மிக திறமையானவர்கள்தான். ஏன் வாட்ஸப்பில் தவறனா கருத்துகளை பரப்பிய முகம் தெரியாதவனை கூட ஒரு நாளில் கண்டுபிடித்து சிறையில் அடைத்து விட்டது.. அப்படியானல் அவர்களால் சேகரை என்ன கண்டுபிடிக்கவா முடியாது, எல்லாம் அவர்களுக்கு உத்தரவு இடும் எடப்பாடியிடம்தான் இருக்கிறது..

எடப்பாடி மட்டும் தமிழக காவல் உயர் அதிகாரியிடம் சேகரை அரை மணி நேரத்திற்குள் பிடித்து கோர்ட்டில் நிப்பாட்டவில்லையெனில் உங்கள் பதவியை ராஜினமா செய்யுங்கள் என்று ஒரு வார்த்தை சொல்லட்டும். அப்படி சொல்லிய ஐந்து நிமிடத்தில் சேகரை அந்த அதிகாரி கோர்ட்டில் நிறுத்திவிடுவார்.


தலை இப்படி இருக்க வாலை நாம் குறை சொல்ல கூடாது.

இப்ப தெரியுதா நமக்கு எப்படிபட்ட " நல்ல" முதலமைச்சர் கிடைத்து இருக்கிறார் என்று




அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. வாழ்க மாக்கள் ஆட்சி.

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல... எடப்பாடி தான் அவங்க கையில இருக்கிறாரே தவிர, அவர் கையில அவாளோட வால் கூட இல்ல நண்பரே!! அவர்கள் தான் தலையே.. இது வெறும் புள்ளப்பூச்சி..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.