Thursday, May 3, 2018

avargal unmaigal
இந்தியா வல்லரசு நாடாக ஆக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்


விசு: என்னய்யா மதுரைத்தமிழா உனக்கு லூசு ஏதும் பிடித்து இருக்கிறதா? நல்லாதானே இருந்தே இப்ப ஏன்?

மதுர : விசு எனக்கு இந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஒரு ஆசை உ
ண்டு. அது மோடி நினைச்சால் மட்டும்தான் முடியும் என்று எனக்கு தெரிந்துவிட்டது..


விசு: யோவ் மதுர நீ எப்பவும் மோடிக்கு எதிராக பதிவு போடுவ ஆனால் இன்று என்ன ஆச்சு?
மதுர : நான் எப்பவும் மோடிக்கு எதிராக பதிவுகள் போட்டது இல்லை எப்பவுமே மோடி பேசுவதையும் செய்வதையும் அப்படியே பதிவாக எழுதுகிறேன் ஆனால் அதை எல்லோரும் மோடி எதிர்ப்பு பதிவாக கருதுகிறார்கள். ஆனால் மோடி சொல்லாததையும் செய்யாததையும் இந்த பக்தாள்ஸ் போடுறான் அதை ஆதரவு பதிவு என்று சொல்லுகிறார்கள். இப்ப சொல்லுங்க மோடியின் நண்பன் நானா இல்லை அந்த பக்தாள்ஸா?

விசு : ஆமாம் நீ சரியாகத்தான் சொல்லுற....... ஆனால் இப்ப இந்தியா வல்லரசு நாடாக ஆக மோடி மீண்டும் பிரதமாராக வேண்டும் என்று சொல்லுறே அதை கேட்கும் போதுதான் உன் புத்தி மேலே எனக்கு சந்தேகம் வருது... வெயிலால் உனக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம்.


மதுர: விசு  எனக்கு மூளை ஒன்றும் குழம்பி போகல..... மோடியின் செயல்பாடுகளையும் உலக வரலாற்றையும் கடந்த சில தினங்களாக ஆராய்ச்சி செய்துபடித்து பார்த்தேன். அதன் பின் அந்த ஆராய்ச்சியின் முடிவில்தான் மோடியால் மட்டும்தான் இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்று அறிந்து கொண்டேன்..

விசு:  அவனவன் மோடி பெயரை சொன்னாலே காறித்துப்றான் நீ என்னன்னா அவரால்தான் முடியும் என்று உளருகிறாய்? ஆமாம் உன் ஆராய்ச்சி பற்றி முடிவை பற்றி கொஞ்சம் விபரமாக சொல்லேன்.

மதுர: விசு..... உலக வரலாற்றை ஆராய்ந்து பார்த்த நான் அதில்  எப்படி  பல நாடுகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது என்று பார்த்த  போது  பல நாடுகள் அழிவிற்கு பின்னால்தான் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன. என்று  தெளிவாக புரிந்தது.   இப்ப நம்ம மோடியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் இந்தியாவை அழிவுபாதைக்கு அழைத்து  சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரால் இந்த ஐந்து ஆண்டுளில் அவ்வளவாக் அழிக்க முடியவில்லை அதனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம்  இந்தியாவை அழித்துவிடுவார். அதன் பின் தன்னாலே இந்தியா வளர்ச்சி பெற்று ஜப்பான் போன்ற நாடுகளைப் போல மிக  வல்லராசக ஆகிவிடும். அதைவிட்டுவிட்டு வேறு யாரையாவது பிரதமாரக்கினால் அவர்கள் அழிவுப்பாதையில் இருந்து நல்ல பாதைக்கு கொண்டு சென்
றுவிடுவார்கள் அதன் பின் நாம் விரைவாக வல்லரசாக முடியாது.

இப்ப புரியுதா நான் ஏன்  இந்தியா வல்லரசு நாடாக ஆக மோடி மீண்டும் பிரதமாராக வேண்டும் என்று கூறுகிறேன் என்று...

விசு இன்னும் தாமதம் செய்ய வேண்டாம் நான் இங்கு சொன்னதை பலரிடம் எடுத்து சொல்லுங்கள் இந்தியா வல்லரசாக உதவுங்கள்..

மோடிக்கு ஜே  பாரத மாதாகி ஜே... ஜெய்ஹிந்த்.........


அன்புடன்
மதுரைத்தமிழன்


03 May 2018

6 comments:

  1. உங்கள் பேச்சை கேட்டால் விளங்கிடும்.

    ReplyDelete
    Replies
    1. ச்சே உங்களுக்கு நம் நாடு வல்லரசாக ஆவது புடிக்கவில்லை போல ..ஹீஹீ

      Delete
  2. மோடிக்கு ஜே...ஜே...ஜே!

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களோட சேர்ந்து ஜே..ஜே போடுறேன்

      Delete
  3. அமர்த்தப்பட்ட ஆன்லைன் அடிமைகள், முட்டுக்கொடுக்கும் மீடியாக்கள், அறிவாளி போர்வையில் உள்ள அரை ட்ரவுசர்கள், காவி நீதிபதிகள், அடிமை தேர்தல் ஆணையம், கலவரம் தூண்டும் எச்ச கள், வெட்கம் கெட்ட தமிழிசைகள், பொறி உருண்டைகள், டயர் நக்கி அடிமைகள் என்று எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் ஒன்றே ஒன்று.. மின்னணு வாக்கு இயந்திரத்தை மட்டும் வாக்குச் சீட்டாக மாற்றினால் மட்டும் போதும்.. இந்தியா வல்லரசாகிவிடும்!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அப்படி செய்தால் மீண்டும் நல்லாட்சி கிடைத்துடும் அதுக்கு அப்புறம் சினிமா அது இதுன்னு போய்விடுவீங்க அதனால நான் சொன்ன ஐடியா தான் சரி ஒரு மூறை கிடைத்த சுதந்திரத்தை கை நழுவவிட்டோம் மீண்டும் கஷ்டப்பட்டால்தான் அதன் அருமை நம்மக்களுக்கு புரியும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.