பெட்னா என்ற தமிழ் சங்க அமைப்பு அமெரிக்காவில் செயல்பட்டுகொண்டிருக்கிறது. அது அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநில தமிழ் சங்கங்களை இணைத்து ஒவ்வொருவருடமும் கோடை விடுமுறையின் போது தமிழை வளர்க்க என்று சொல்லி இந்தியாவில் இருந்து பல ஆட்களை அழைத்து 3 நாட்கள் விழாவாக கொண்டாடிவருகிறது எனப்தை மட்டும் நான் அறிவேன் காரணம் எனக்கும் இந்த பெட்னா மற்றும் அமெரிக்காவில் உள்ள எந்த சங்கங்களுக்கும் தொடர்பும் இல்லை அந்த சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை..
கடந்த சில் வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சார்ந்த பட்டிம்னற நகைச்சுவை பேச்சாளர் எழுத்தாளர் மற்றும் வலைபதிவாளர் திரு. விசு அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் பெட்னா விழாவிற்கு போவதற்காக டிக்கெட் புக் பண்ண போகும் நேரத்தில்தான் தெரிந்தது பாண்டியராஜன் அந்த விழாவில் கலந்து கொள்வதாகவும் அதனால் விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டதாக பதிந்திருந்தார்.. அதை பார்த்த எனக்கு ஆச்சிரியம் நகைச்சுவை நடிகர் பாண்டியராஜன் வருவதற்கும் இவர் அங்கு போகாதற்கும் என்னடா சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை.. காரணம் பெட்னா போன்ற அமைப்புக்கள் திரைஉலகினரை கூப்பிட்டு தமிழை வளர்ப்பது என்பதை காலம் காலமாக செய்வதுதானே அதற்கு இந்த மனுஷன் எதிர்ப்பு தெரிவித்து போகாமல் இருக்கிறரே என்று நினைத்து கொண்டேன்..
ஆனால் கடந்த வாரத்தில்தான் முகநூலில் நடந்த அடிதடியில் பெட்னாவை விமர்சித்து பலரும் பதிவு போட்டு இருந்தார்கள் அப்பதான் புரிந்தது பெட்னாவில் கலந்து கொள்ளூம் பாண்டியராஜன் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்று....... அதன் பின் தான் புரிந்தது அந்த அமைச்சர் கலந்து கொள்வதற்குதான் பலத்த எதிர்ப்பு என்று,,, பெட்னாவில் முக்கிய பங்கை வகிக்கும் பீட்டர் என்பவர் ஏன் மாஃபா பாண்டியராஜன் அழைத்தார் என்று காரணம் கூறி இருந்தார்.. அவர் கூறியது ஹார்வோர்ட் பல்கலைகழகத்தில் தமிழுக்கு சேர் அமைக்க பாண்டியராஜன் நீதி உதவி அளித்தார் அதன் காரணமாக அவரை கெளரவிக்கும் பொருட்டு அவரை அழைத்து இருக்கிறோம் என்று சொன்னார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களா பாண்டியராஜன் ஒன்றும் அவர் கை காசை எடுத்து நன்கொடையாக தரவில்லை தமிழக மக்களின் வரிப்பணத்தை எடுத்துதான் தந்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் அதுமட்டுமல்ல பெட்னா உயர் மட்ட குழுவில் இருப்பவர்கள் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகிய வசதி படைத்தவர்கள் இங்கு அவர்கள் பிஸினஸ் செய்க்கிறார்கள் அவர்களின் பிஸினஸின் வளர்ச்சிக்காக நட்புக்காக இப்படி பாண்டியராஜனை அழைக்கிறார்கள் என்றும் குற்றசாட்டும்கிறார்கள்.
இவர்கள் இப்படி தமிழை வளர்க்கிறோம் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கிறோம் தமிழர் நலன் காக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.. இவர்கள் எப்படியும் செய்யுது கொள்ளட்டும்..
ஆனால் சாதாரண மனிதனான என் பார்வையில் தமிழகத்தில் அதுவும் தூத்துகுடியில் பொதுமக்கள் தங்கள் நலனுக்காக போராடும் போது அவர்களை சுட்டு கொல்ல உத்தரவு போட்டது தற்போதைய அரசு . அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்ட தூத்துகுடி மக்களை இந்த பதிவு வெளியிடும் நேரம் வரை தமிழக முதல்வரோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களோ ஏன் இந்த பாண்டிய ராஜனோ இதுவரை நேரில் சந்தித்து ஆதரவு கூறவோ அல்லது ஆறுதல் கூறவோ இல்லை. அதோடு இல்லாமல் அங்கு சென்றுஆறுதல் கூறிய தலைவர்கள் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது காரணம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்ட்ட நேறத்தில் சென்றதற்காம். அதிலும் இன்று ஸ்டாலினை அதற்காக கைது செய்தாகவும் தகவல் செய்திகள் அறிந்தேன்
இப்போது ஆளும் அதிமுக அரசு இப்படி சர்வாதிகாரத்தை மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு பல வகைகளிலும் துரோகம் செய்கிறது இதை கண் கூடாக எல்லோரும் அறிவார்கள்..
அப்படிபட்ட அரசில் அமைச்சராக இருக்கும் பாண்டிய ராஜனை பெட்னா இப்போதும் அழைத்து பெருமை படுத்துமா அல்லது கூட்டத்தில் இருந்து விலக்கி வைக்குமா என்பதுதான் கேள்வி
கடல் கடந்து வந்து இங்கு தமிழ் தமிழர் தமிழ்கலாசாரம் தமிழ் நாடு என்று பேசிக் கொண்டிருக்கும் பெட்னா மற்றும் அமெரிக்க தமிழ் சங்கங்கள் இப்போது என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்..
அவர்களின் இணையத்தளத்தில் தூத்துகுடி சம்பவம் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார்களா என்று பார்த்தால் மிக சாமர்த்தியமாக அங்குள்ள மக்களுக்கு இரங்கலை மட்டும் சொல்லி அந்த நிகழ்விற்கு காரணமான அரசிற்கு ஒரு சிறிய கண்டனத்தை கூட பதிவு செய்யாமல் தவிர்த்து இருக்கிறார்கள். எல்லாம் இந்த பிஸினஸ் படுத்துபாடுதான்
https://fetna.org
அட்லீஸ்ட் அந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழர்களாவது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொள்ளும் நிகழ்வில் கறுப்பு ஆடை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்களா?
மதுரைத்தமிழன்
அனைத்து விதத்திலும் சரியாய் அனைவருக்கும் சரியாய் இருக்கும் ஒருவரை அழைப்பதென்றால் யாரையுமே அழைக்க முடியாது.நம் நோக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியவர் யாராக இருப்பினும் அழைத்துக் கௌரவித்தல் அவசியமே அதே சமயம் நமது அதிருப்தியையும் மிகச்சரியாக அந்த நிகழ்வில் பதிவு செய்வதில் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து
ReplyDeleteசங்கத்தில் அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு பேச்சு வந்திருக்காதுதானே......
Deleteஅட்லீஸ்ட் நீங்கள் சொன்னபடி அதிருப்தியை மிக அழுத்தமாகவ்து அந்த நிகழ்வில் பதிவார்களா என்று பார்ப்போம்... ஆனால் இணையதளத்திலே அவர்கள் அதிருப்தியை தெரிவிக்காதவர்கள் நேரிலா தெரிவிக்க போகிறார்கள்?
DeleteFETNA itself is an anti-national organization. They always invite anti national leaders. Nothing surprise
ReplyDelete