உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 1, 2018

வெளிநாட்டில் வசிக்கும் தேச துரோக இந்தியர்கள் vs உள்நாட்டில் வசிக்கும் தேச பக்த இந்தியர்கள்

@avargal unmaigal
வெளிநாட்டில்  வசிக்கும் தேச துரோக இந்தியர்கள் vs உள்நாட்டில்  வசிக்கும் தேச பக்த இந்தியர்கள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பற்றி உள்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு (எல்லோரும் அல்ல கொஞ்ச பேருக்கு) ஒரு காழ்புணர்ச்சி உண்டு. அதுவும் மோடி தன் மனைவியை விட்டு பிரிந்த மாதிரி  வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவை கைவிட்டதாக நினைக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எல்லோரும் தேச தூரோகிகள் மாதிரியும் அவர்களிடம் இந்திய தேச பக்தி கொஞ்சமும் கிடையாது என்றும். தேச பக்தியை தாங்களே மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்ட மாதிரி, உள்நாட்டில் வசிக்கும் இந்தியகள் நினைக்கிறார்கள்..


இப்படி உள்நாட்டில்  வசித்துக் கொண்டு தேசபக்தி,  தேசபக்தி என்று பேசுபவர்களை விட, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மிக அதிகமாக தங்கள் தாய் நாடான இந்தியாவை நேசிக்கிறார்கள் என்பதுமட்டுமல்ல. இப்படி வெளிநாடு வந்தாலும் தங்களின் கலாச்சார பண்பாட்டையும் கொஞ்சமும் கைவிடாமல் வாழ்ந்துவருகிறார்கள் என்பதுதான் ம்றுக்க முடியாத உண்மை.


இப்படி வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களால் இந்தியாவிற்கு கிடைக்கும் மிகப் பெரிய நன்மைகள் ஒன்று அன்னிய செலவாணி,  இரண்டு இப்படி வெளிநாட்டில் சென்று வேலைப்பார்ப்பதால் உள்நாட்டில் வசிப்பவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு. இப்படி அவர்கள் வெளிநாட்டில் சென்று வசிக்கவில்லை என்றால் இன்னும் அளவிற்கு அதிகமாக வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். அடுத்தாக இப்படி வெளிநாட்டிற்கு வந்து வசித்து நல்ல கல்வி கற்று அதில் ஒரு பகுதியினர் இந்தியாவவிற்கு வந்து  தாங்கள் கற்ற உயர்தரக் கல்வியை வைத்து, நல்லபடியாக நிறுவனங்களை நிர்வாகிக்கின்றனர். பலர்  முதலீடு செய்து பல தொழில்களை ஆரம்பிக்கின்றனர்.
@avargal unmaigal

@avargal unmaigal


இந்தியா கடைசியாக அணுகுண்டு சோதனை நடத்திய போது உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து பொருளாதார தடைவிதித்த போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனுப்பிய பணங்களால்தான் நம்மால் அன்னிய செல்வாணியை செய்ய முடிந்தது. அதுமட்டும்ல்லாமல் இப்போது போல அல்லாமல் இந்தியா அன்னிய நாட்டு பொருள் உற்பத்தியை சார்ந்து இராமல் சுய உற்பத்தி செய்து கொண்டிருந்ததாலும் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க முடிந்தது, ஆனால் இப்போது நிலமை தலைகிழாக மாறிவிட்டது .காரணம் இந்தியாவில் வசிக்கும் தேசபக்தர்கள் இந்தியாவில் உள்ள வளங்களை தங்களது சுய நல லாபத்திற்காக வெளிநாட்டுக்கு தாரை வார்த்து கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் சுய தொழில்களுக்கு ஆதரவு கொடுக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் அதுமட்டுமல்லாம் உள்நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்காமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பை சார்ந்து இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி இருக்கும் போது வெளிநாடுகள் தங்கள் நாட்டை பாதுகாக்க பொருளாதார நடவடிக்கை எடுக்கும் போது இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிக பெரிய அளவில் பாதிக்கபடுகிறது.


அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் அவர்களின் விசா கொள்கையை மாற்றும் போது மிக அதிக அளவில் பாதிக்கபடுவது இந்தியாதான். உள்நாட்டில் உள்ள் தேசபக்தர்கள் இப்படி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை பார்த்து அடிமைகளே தாயகம் திரும்பிவிடுங்கள் என்று வெட்டி கூச்சல் மட்டும் இடுவார்கள். அவர்கள் இந்திய வளங்களை சுரண்டி விற்று மேலை நாட்டில் தங்களது பணத்தை பதுக்க மட்டும் செய்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல கஷ்டங்கள் அனுபவித்து பணம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் தேச துரோகிகள் பட்டம் மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள்

உள்நாட்டில் வசிக்கும் "தேச பக்த" இந்தியர்களே வெளிநாட்டில் கடுமையாக உழைக்கும் இந்தியர்களை குறை சொல்லுவதற்கு முன்னால் முதலில் நீங்கள் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பின்னாவது குறை சொல்லுங்கள்... நீங்கள் தேசத்தை நாசம் செய்யும் தேச விரோதிகளை தலைவர்களாக தேர்ந்தெடுத்துவிட்டு மற்றவர்களை  தேச துரோகிகள் என்று சொல்லாவேண்டாம்.


நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காத நீங்கள்தான் உண்மையான தேச விராதிகள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

  1. அனைவரும் நாடு திரும்பினால் மோடி வேலை கொடுத்து விடுவாரா ?
    நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  2. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்னும் ஒரு சொலவடைஉண்டு

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog