Thursday, May 24, 2018

@avargalunmaigal
நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா?


இல.கணேசன். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினர் ஆவார்.[ மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர் மிக நல்லவர் என்ற ஒரு பொதுவான கருத்து உண்டு...

பொதுவாக யாரும் அமைதியாக இருந்தால் உடனே நாம் அவரை நல்லவர் என்றும் அறிவாளி என்றும் கருவதுண்டு.... அது அவர்கள் வாயை திறக்கும் வரைதான் ஆனால் அவர்கள் எப்போது வாயை திறந்து பேசுகிறார்களோ அப்போதே அவர்களின் சுயம் வெளி தெரிந்துவிடுகிறது..

நான் சமீப காலமே தந்தி டிவி பார்ப்பதில்லை ஆனால் நேற்று இணையத்தில் சர்ச் பண்ணும் போது இந்த வீடியோ க்ளிப் கண்ணில் பட்டது. இதை எல்லோரும் பார்க்க வேண்டும்

பெரியவர்கள் அனுபவம் மிக்கவர்கள் அவர்கள் சொல்லுவதை அப்படியே மறுக்காமல் கேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்கள்  ஆனால்அது எவ்வளவு தவறு என்பதை இந்த சிறிய பெண் அசோக வர்ஷினியின் நிறுபித்து காண்பிக்கிறார். இந்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு அனுபவம் மிக்க பெரியவர் சாணக்கியர் நல்லவர் எப்படி பதில் சொல்ல முடியாமல் மழுப்பி திணறி தடுமாறி ,சமாளித்து உளறுகிறார் என்பதை பார்க்கும் போது இதுநாள் வரை இவர் மேல் வைத்து இருந்த மதிப்பு எல்லாம் அப்படியே சரிந்து விழுகிறது


இந்த நல்லவரை பார்க்கும் போது எனக்கு மனதில் தோன்றுவது இதுதான் பன்னிக் கூட்டத்தில் சேர்ந்து வாழும் ஆடு மாதிரியாக இருக்கிறது. இதற்குதான் சொல்லுவது சேருவார்கூட சேர வேண்டும் இல்லையென்றால் பன்னிகள் மலம் தின்பது போலவே மலம் தின்ன வேண்டும்.


இராமயாணத்தை எடுத்து கையாளும் இவர் அதில் சொல்லப்படும் தர்மம் நியாத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக பேசிய இந்த பேச்சால் அவரின் மதிப்பும்  மரியாதையும் தலைகுப்புற வீழ்ந்ததுதான் இருக்கிறது இவர் இபோது சப்போர்ட் செய்யும் தலைவர் வாஜ்பாய் அல்ல என்பதையாவது அவர் புரிந்து இருக்கிறார இல்லையா என்பதும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு வேளை பாஜகவில் சேரும் போது அவர்கள் மூளையை கழ்ட்டி விட்டுதான் கட்சியில் உறுப்பினார்களாக சேர்பார்களோ என்னவோ


தந்தி டிவியில் நல்ல இளம் செய்தியாளராக அசோக வர்ஷினி இங்கே ஜொலித்து இருக்கிறார். பிஜேபிக்கு ஆதரவாக செயல்படும் டிவியில் இப்படி ஒரு புரோகிராமா என்று ஆச்சிரியமாக இருக்கிறது,, இந்த பேட்டியை சனிக்கிழமை, மே -19 -ந்தேதி முழுமையாக ஒளிபரப்பிய தினதந்தி நிர்வாகத்திற்கு நன்றிகள்





ஒரு செயலை பிஜேபி செஞ்சா ராஜதந்திரம் ஆனால் அதை செயலை காங்கிரஸ் செய்யதால் சட்டவிரோதம்..... அட அட இல.கணேசன் அவர்களின் பதிலை கேட்டதும் அப்படியே புல்லரிக்குது... அது போன்ற அறிவித்தனமாக பேச்சை கண்டிப்பாக பாருங்கள்



பாராட்டுக்கள் அசோக வர்ஷினி






அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. அறிவுஜீவிதான் நண்பரே.

    ReplyDelete
  2. உங்களின் பல பின்னூட்டங்கள் awaiting moderation page லே இருந்தது இப்போது தான் பார்த்து அதை பதிவு செய்தேன். மன்னிக்கவும்.
    இப்போது எனக்கு வரும் பின்னூட்டங்கள் மெயிலில் வரமாட்டேன் எங்கிறது.ப்ளாக்கரில் ஏதோ மாற்றம் செய்கிறார்கள் போலும், புரியவில்லை.

    moderation எடுத்து விட்டேன் இனி நேரே என் பதிவுக்கு வந்து விடுகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.