Saturday, January 6, 2018


அப்படி என்ன  வரம் கேட்டு  கடவுளை அதிர வைத்தனர் இந்த பக்தாள்ஸ்

கடவுள் : பக்தாள்ஸ், உனக்கு என்ன வரம் வேண்டும்?

பக்தாள்ஸ் : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை எல்லாம் ஒழித்து விடவேண்டும்.

கடவுள் : பக்தாள்ஸ் அது ரொம்ப கஷ்டாமாச்சே வேறு ஏதாவது கேள் கண்டிப்பாக செய்து தருகிறேன்.

பக்தாள்ஸ். கடவுளே நான் கேட்பதெல்லாம் தமிழகத்தில் பாஜக ஆட்சியில் வந்து அமர வேண்டும் என்பதுதான்

கடவுள்: பக்தாள்ஸ் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கை மட்டும்தான் முடிவிடனுமா இல்லை இந்தியாவில் ஏன் உலகில் உள்ள அனைத்து ஒயின்ஷாப்புகளையும் முடிவிடனுமா சொல்லு மூடிடுறேன். ஆனால் இதை மட்டும் என்னிடம் கேட்டுவிடாதே

கொசுறு :
கடவுள் : பக்தாள்ஸ்  உன்னிடம் ஒரு கேள்வி எப்படி உனக்கு இந்த டாஸ்மாக் கடைகளை எல்லாம் ஒழித்து கட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் வந்தது என்று சொல்லேன்

பக்தாள்ஸ்: கடவுளே இந்த டாஸ்மாக் கடைகளை எல்லாம் அதிமுக மற்றும் திமுக ஆட்களே வைத்து நடத்துகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சாராய ஆலைகளையும் அவர்களே நடத்துகிறார்கள் அதனால்தான் அதை மூடச் சொல்கிறேன்.

கடவுள் அதுதானே பார்த்தேன்,  என்னமோ மக்கள் மீதுள்ள அக்கறையினால்தான் கேட்டு இருக்கிறாய் என நினைத்தேன் சரி சரி இடத்தைவிட்டு கிளம்ப்பு இல்லைன்னா எனக்கு சேர்த்து நீ குழி பறித்தாலும் பறித்து விடுவாய்


டிஸ்கி : பழைய ஜோக்குதான் ஆனால் புதியவடிவில் தந்ததுமட்டும் நான்

அன்புடன்
மதுரைத்தமிழன்
06 Jan 2018

5 comments:

  1. இரசிக்க வைத்த உண்மை தமிழரே...

    ReplyDelete
  2. மது விலக்கு வந்தால் நல்லதுதான். பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பலரும் குடித்துவிட்டு வந்து அப்பாக்கள் போடும் சண்டையால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை என்பது உண்மை

    ReplyDelete
  3. சிந்திக்க வைத்த காமெடி...

    ReplyDelete
  4. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கவில்லை என்று உங்களிடம் யார் சொன்னது!!!!!

    ReplyDelete
  5. தமிழகத்தில் இப்போது நடப்பதே பா.ஜ க ஆட்சிதான் ... இது தெரியாம இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்கார் மதுரை...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.