Thursday, November 10, 2016



RSSன் ஸீலிப்பர் செல்தான் ரஜினிகாந்தா?

காவிரிக்கு குரல் கொடுக்காத ரஜினிகாந்தி மோடிக்கு குரல் கொடுக்கிறார்/

மோடியின் புதிய திட்டத்தை பாராட்டி ரஜினிகாந்த சொல்கிறார் புதிய இந்தியா பிறந்துள்ளது- என்று ஆனால் காவரிப் பிரச்சனைகளின்  போது மோடி அமைதிகாத்து தமிழர்களுக்கு எதிராக நடந்தபோது ரஜினியின் வாய் என்ன செய்து கொண்டிருந்தது.

இன்னும் இவரை தமிழகத்தில் வசிக்க அனுமதி கொடுத்த தமிழர்களை என்னவென்று சொல்லுவது...


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 Nov 2016

7 comments:

  1. இர்ர் ...
    என்னத்தை சொல்ல...
    ஒழுங்காக வரிகட்டிய கமல் அமைதியாக இருக்கிறார்..

    ReplyDelete
  2. அப்பொழுது வாயில் பப்லுக்கான் இருந்திருக்கும் தமிழரே....
    எல்லோரும் கூட்டுக்காரன்தான் இந்த விபரம் ஏற்கனவே மோடி மூலம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது.
    எப்படியோ... கொழுப்பு பணம் ஒழிந்தால் சளி'தான்

    ReplyDelete
  3. நீங்கள் ஊரில் நடக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் குரல் கொடுக்கிறீர்களா? எவனையாச்சும் எப்ப பார்த்தாலும் குறை சொல்லிக்கொண்டு!!!! எல்லாப் பிரச்சனைக்கும் குரல் கொடுக்க அவர் என்ன அரசுயல்வாதியா? நீங்கள் உங்கள் கருத்தை சொல்வது போல் அவர் அவர் கருத்தை சொல்லுகிறார். மோடி செய்த செயலை ஆதரித்ததால் அவர் RSS ஸிலிப்பர் செல் எனக்கூறுவது ஊடக விபச்சாரமாகும்.

    ReplyDelete
    Replies

    1. எல்லா பிரச்சனைகளுக்கும் வாயை திறக்க சொல்லவில்லை.. ஆனால் காவிரி பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை அப்ப வாயை மூடிக்கொண்டு இப்ப ஒன்றுமில்லாதற்கு வாயைதிறந்தால் அப்படி கேட்காமல் வேற எப்படி கேட்பதாம்...ரஜினி அரசியல் வாதியாக இருந்திருந்தால் இன்னும் நாக்கைபிடுங்கிறமாதிரி கேட்டு இருப்பேன். ஆனால் அவர் நடிகன் என்பதால் மட்டும் இவ்வளவோட விட்டுவைத்திருக்கிறேன்


      நான் என் கருத்தை சொல்லுவது போலத்தான் அவர் தன் கருத்தை பதிந்து இருக்கிறார் அதில் நான் தப்பே சொல்லவில்லை ஆனால் முக்கியமான விஷயத்தில் தன் கருத்தை சொல்லாமல் வாய்மூடி இருப்பது ஏன் என்று கேட்டுதான் என் கருத்தை வெளியிட்டு இருக்கிறேன்

      நான் சொன்னது தப்பு என்றால் அதற்கு நீங்கள் பதிலாக ஊடக விபச்சாரம் என்று சொல்லுவது மட்டும் சரிதானா? நான் எல்லோரையும் குறை சொல்லுகிறேன் என்கிறீர்கள் சரி குறையை சுட்டிக்காட்டுவது தவறா? நான் சாமன்யவர்களை குறை சொல்லவில்லை சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களை மட்டுமே குறை சொல்லுகிறேன் காரணம் உயர்னிலையில் உள்ளவர்கள் மக்களுக்கு ஒரு வழிகாட்டி என்பதால்... அது தப்பா?

      Delete
    2. ஆம், ரஜினி தனது கருத்தை கூறாதது எனக்கும் சரியாகப் படவில்லை. சில பல காரணங்களால் அவர் தனது கருத்தை கூறுவதை தவிர்த்திருக்கலாம். ஏன் அது அவர் வியாபார நோக்கமாக கூட இருக்கட்டும். அது அவர் தனி நபர் சார்ந்த விருப்பமாகும். அவர் இந்த விடயத்தில் கருத்து கூறினால்தான் மட்டும்தான் மற்ற விடயங்களில் கருத்து கூறலாமா?

      ஒரு பிரச்சனையில் நாம் அது சம்பந்தபட்டவர்களிடம் கருத்தை எதிர்பார்ப்பது புத்திசாலித்தனம். ஒரு வியாபாரியிடம் அல்லது நடிகனிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

      நண்பரே, அவருடைய இந்த கருத்தை வைத்துக்கொண்டு அவர் RSSன் ஸ்லீப்பர் செல் என எந்த விதமான அடிப்படை ஆதாரம் இல்லாமல் கூறுவதை என்னவென்று சொல்ல?? உங்களுக்கு எதிரான கருத்தையோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தையோ ஒருவர் தராத போது அவற்றின்மேல் தொடுக்கும் தனிநபர் தாக்குதலை நான் ஊடக விபச்சாரம் எனக் கூறியது தவறா ?

      Delete
  4. அவருக்கும் வேற வழியில்லை ,இருக்கிறதைக் காப்பாற்றிக் கொள்ளனும் இல்லையா:)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.