Saturday, November 12, 2016



பேஸ்புக்கில் வெளிவந்தது படிக்காதவர்கள் படிக்க.

500 1000 ரூபாய் பிரச்சனை வந்ததும் அப்போலோ ஹாஸ்பிடல் வாசலில் யாருமில்லை.....பணப்பிரச்சனை வந்ததும் அம்மா உடல்நல பிரச்சனையை மறந்துட்டாங்க...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹலோ லண்டன் டாக்டர் அம்மா காதில் இந்த 500 1000 ரூபாய் பிரச்சனையை காதில் சொல்லிப் பாருங்க ஒரு வேளை அம்மா எழுந்திருச்சி ஒடுனாலும் ஒடுவாங்க

பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் ஒப்பன் பண்ணுவது மாதிரி இந்தியாவில் உள்ள பேங்குகளில் போலி பேரில் அக்கவுண்ட் மட்டும் ஒப்பன் பண்ண முடிந்தால் இந்த பணப் பிரச்சனை எளிதாக தீர்ந்துவிடும்


உங்களிடம் லீகலாக மாற்ற முடியாத அளவிற்கு 500 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் கோவில்களிலோ அல்லது திருப்பதி கோவிலிலோ பணத்தை போட்டு புண்ணியம் தேடி கொள்ளுங்கள். இப்படி செய்தால் கடவுள் பலமடங்காக உங்களுக்கு செல்வங்களை வாரி வழங்குவார் எதிர்காலத்தில்....

500 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க மோடி  போட்ட திட்டம் போல இந்த ஏர் இந்தியாவில் பணிபுரியும் ஏர்ஹோஸ்டல்களை ஒரே இரவில் தூக்கி அடித்துவிட்டு புத்தம் புதிய எனர்ஜிடிக் ஏர்ஹோஸ்டலை போட்டால் நலிந்த ஏர் இந்தியாவும் பலம் பெறு எங்களை போல வெளிநாட்டவர்களின் உள்ளமும் மகிழும் அதை செய்ய துணிச்சல் மோடிக்கு உண்டா?

கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்யும் மோடி கருப்பு கலர் தமிழர்ளையும் கொஞ்சம் வெள்ளையாக மாற்றி கொடுக்க முடியுமா?ஆமாம் என்றால் நீங்கள்தான் அடுத்த தமிழக முதல்வர்.

என்னடா கலைஞர் இன்னும் டிரம்ப் எனது நண்பர் அவரின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வைகோ இப்பதான் டிரம்பிற்கு போன் செய்து வாழ்ட்து சொன்னேன் என்று அறிக்கைவிடாமல் இருக்கிறார்கள். என்ன ஆச்சு அவர்களுக்கு ஒரு வேளை தங்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்களோ?

மோடி மிக துணிச்சல் மிக்கவர் அதனால்தான் அவர் மிக துணிச்சலாக முடிவு எடுத்து 500. 1000 ரூபாயை ஒழிக்க முயற்சித்திருக்கிறார் என்று சொல்லுபவர்கள் கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் தள்ளாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருப்பது ஏன்? அதனை செய்ய அவருக்கு துணிச்சல் இல்லையா என்ன?

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட பணம் எல்லாம் 500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் அல்ல என்பதை அறியாதவர்களாக இந்தியர்கள் இருக்கிறார்கள் . அவர்களை நினைத்தால் அய்யோ பாவம் என நினைக்கதான் தோன்றுகிறது

500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாதாமே அப்படியானல் இனிமேல் அரசாங்க அலுவலகங்களில் இனிமேல் வேலை நடக்க குறைந்தது 2000 ரூபாய் நோட்டுகளாகத்தானே கேட்பாங்க.. இப்ப என்ன செய்வீங்க?????



//வேசிகள் 500,1000 நோட்டுக்களை வாங்குவதில்லை - மனுஷ்யபுத்திரன்//

ஆமாம் வேசிகள்கிட்டே இந்த ஆள் ஏன் போய் டெஸ்ட் பண்ணுகிறான்?


கலைஞர் தோல்வி அடையும் போது நாங்கள் தோல்வி அடையவில்லை மக்கள்தான் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லுவது போல ஹில்லாரி அறிக்கைவிட வேண்டியதுதானே #hillary

என்னதான் பெண்ணுரிமை அது இது என்று பேசினாலும் அமெரிக்கர்கள் ஆண்களுக்கு இணை பெண்கள் கிடையாது என்று செவிட்டில் அறைந்தமாதிரி சொல்லி இருக்கிறார்கள் #trump victory

ட்ரம்பிற்கு மோடி எப்ப டீ போட்டு சர்வ் பண்ணுவார்? #trump victory

நாட்டிற்கு நல்லது செய்ய ஏழைகளிடம் மட்டும் விளையாடுகிறது மோடி அரசு இதை சொன்னால் அவனுக்கு தேச துரோகிபட்டம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
12 Nov 2016

4 comments:

  1. நல்ல பகிர்வுதான் தமிழரே....

    ReplyDelete
  2. இதெல்லாம் முகநூலிலா வந்தது? ஒன்று கூட நான் கேள்விப்படலயே? (அவ்வளவு உலக அறிவு நமக்கு?)

    ReplyDelete
    Replies
    1. ஐயா முத்து நிலவன் வலைத்தளம்,கீச்சு,பேப்பர் படிக்க வே உமக்கு நேரம் பத்தாது இதில்
      முகநூல் பக்கம் போனிங்கனா அவ்வளவு வினா போயிடும்

      Delete
  3. அருமையான பகிர்வு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.