Saturday, November 5, 2016



அமெரிக்கர்களிடம் இருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கடந்த வாரத்தில் ஒரு மாலைப் பொழுதில் டிவியில் தமிழ் செய்திகளை பார்த்து கொண்டிருந்த எனக்கு சொன்ன செய்திகளையே மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்து கொண்டிருந்த புதிய தலைமுறை செய்தியை நிறுத்தி இங்கே  உள்ள லோக்கல் செய்திகளை பார்க்கலாம் என சேனலை மாற்றிய போது எங்கள் பகுதியில் நடக்கும் ஒரு நிகழ்வு டிவியில் ஒளிப்பரப்புபட்டு கொண்டிருந்தது.

அது வேறு ஒன்றுமல்ல எங்கள் பகுதில் உள்ள ஒரு ஷாப்பின்(Wawa) முன்னால் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கான ஒரு விவாவதம் எங்கள் டவுன்ஷிப்பில் உள்ள கோர்ட்டில்  ஆறுபேர் தலைமையில் பலதுறையை சேர்ந்தவர்களும் மற்றும் அந்த பகுதி பொதுமக்களுடன் நடந்து கொண்டிருந்தது. இங்கே  இடம் நமது இடமாக இருந்தாலும் நாம் நினைத்தபடி கட்டிடங்களோ அல்லது கடைகள் மற்றும் மால்களோ கட்டிவிட முடியாது நம் நாட்டில் உள்ளது போல . நம் நாட்டில் அரசு துறை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து கவனித்துவிட்டால் அது எந்த இடமாக இருந்தாலும் அங்கு நம் விருப்ப்பபடி எதையும் செய்யமுடியும் ஆனால் இங்கு அப்படி எளிதில் எதுவும் செய்யமுடியாது.


ஆனால் இந்த பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான இறுதிகட்ட விவாதம் மூன்று மணிநேரத்திற்கும் மேல் நடத்தப்பட்டது. அதில் முதலில் அந்த பகுதியை சார்ந்த டிராபிக் டிப்பார்ட்மெண்டை சார்ந்த உயர் அதிகாரி அந்த பெட் ரோல் பங்க் அங்கு வருவதினால் எந்த அளவிற்கு அந்த பகுதியில் வருங்காலத்தில் டிராபிக் ஏற்படும் இப்போது எந்த அளவிற்கு டிராபிக் இருக்கிறது என்று விவாவதித்து அவரின் கருத்தை பதிந்தார்.(அப்படி விவாதிக்கும் போது அந்த ஷாப்பிற்கு எந்த நேரத்தில் கார்கள் அதிகம் வருகிறது எவ்வளவு கார் ஒரு நாளைக்கு வருகிறது பீக் அவர்ஸ் எது  எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு அதிகரிக்கும் அப்படி அந்த ஷாப்பிற்கு வரும் கார்கள் வெளியே போகும் போது லெஃப்ட் டேர்ன் எளிதில் எடுக்க முடியுமா அதனால் என்ன என்ன கஸ்டம் மற்றும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு இந்த ஆண்டு இதுவரை அந்த பகுதியில் ஏற்பட்டவிபத்துகள் போன்ற பல விஷ்யங்கள் அலசப்பட்டன) அது போல அந்த டவுன்சிப் பகுதியை சார்ந்த திட்ட கமிஷன் அதிகாரி அது வருவதினால் டவுன்சிப்பிற்கு எற்படும் லாப நஷ்டம் பற்றி தன் கருத்தை எடுத்துரைத்தார். அந்த பகுதியை சார்ந்த இன்ஞ்சினியர் பெட் ரோல் பங்க்கிற்கு பெட் ரோல் கொண்டுவரும் டேங்கர் லாரி எப்படி அங்கே வரவேண்டும் எந்த நேரத்தில் அது வந்தால் நல்லது என்றும் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அந்த பெட் ரோல் பங்க் வருவதினால் பிரச்சனைகள் உண்டா இல்லையா என்று தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்தார், அதன் பின் அந்த ஷாப் உரிமையாளர் தன் வாதத்தை எடுத்துரைத்தார் அதன் பின் அந்த பகுதியில் வாழும் மக்கள் அது வருவதினால் தங்களுக்கு என்ன என்ன இடைஞ்சல் அசெளரியங்கள் ஏற்படும் அதனால் அதற்கு அனுமதி கொடுக்க கூடாது என்று வாதித்தனர். இப்படி வாதித்தவர்கள் சும்மா ஏணோ தானோ என்று வாதிக்கவில்லை அவர்களும் அதை பற்றி நன்கு ஆராய்ந்து தங்கள் வாததிற்கான ஆதாரங்களையும் திரட்டி ஒவ்வொருவரும் நன்கு பேசினர். இந்த பகுதியை சார்ந்த அமெரிக்கர்கள் மட்டும்மில்லை நம் இந்தியர் பலரும் கலந்து கொண்டு வாதித்தனர்.இறுதியில் அந்த பகுதி பப்ளிக் பிராசிகியூட்டரும் தன் வாதத்தை வைத்தார் அவரின் வாதம் ஷாப் ஒனர்களுக்கு சாதகமாக இருப்பது போல இருந்ததது. அதை வீட்டில் இருந்து டிவியில் பார்த்த எங்களுக்கே கோபம் வந்தது. ஒருவேளை அனுமதிகொடுத்தால் நாங்களும் அந்த பகுதிமக்களோடு சேர்ந்து போராட வேண்டும் என்று நினைக்க தோன்றியது.



இறுதியில் விவாவதங்களை கேட்டு கொண்டிருந்த ஆறு பேர் குழு தங்களுக்குள் பப்ளிகாக விவாதித்து  இறுதியில் பப்ளிக்காக அவர்களுக்குள் வோட்ட்டு எடுப்பு நடத்தினர் அனுமதிப்பதா இல்லையா என்று. கடைசியாக பொதுமக்களின் நலன் கருதி அதற்கு அனுமதி இல்லை என்று அனைவரும் வாக்கு போட்டு அந்த திட்டத்தை நிராகரித்தனர்.

இப்படி ஒரு சின்ன சின்ன விஷயங்களில் கூட பப்ளீக்காக விவாதம் நடத்தி எது அந்த பகுதிமக்களுக்கு நல்லது கெட்டது என்று பார்த்து செயல்படுகிறார்கள்.அதனால் என்னவோ அமெரிக்காவில் இன்னும் வளங்கள் பாதுக்காக்கப்படுகிறது அமெரிக்கா பல நாடுகளின் வளங்களை சுரண்டுகிறது என்பது மிக உண்மைதான் அப்படி சுரண்டுபவர்கள் தங்கள் நாட்டின் வளங்களை வருங்கால சந்ததிகளுக்காக பாதுகாக்கிறார்கள் என்பது அதைவிட மிக உண்மையே

ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் இந்தியாவில் நடக்கிறது  மீத்தேன் வாயு திட்டம் ஆகட்டும் அல்லது அணுமின் தொழிற்சாலையாகட்டும், பட்டாசு தொழிற்சாலையாகட்டும் பெப்ஸி, கோக்  அடுக்குமாடி குடியிறுப்பாகட்டும் இப்படி பல எந்த திட்டம் ஆரம்பித்தாலும் மக்கள் நலன் மற்றும் வருங்கால சந்ததிகள் நலன் பற்றி சிந்திக்காமல் தங்களின் சுயநலத்தால் அடுத்தவன் வீட்டின் பெட் ரூமில் அவன் அனுமதிகூட பெறாமல் அங்கேயே அந்த திட்டத்தை செயல்படுத்திவிடுவார்கள் நம் நாட்டு தலைவர்களும் அரசு துறை அதிகாரிகளும்.


அமெரிக்கம் பல நாட்டை அழிக்கிறான் வளங்களை அள்ளி செல்லுகிறான் என்று குற்றம் சாட்டினாலும் அவன் தன் நாட்டை எப்படி பாதுக்காக்கிறான் என்று பார்க்கும் போது ஆச்சிரியத்தையே அளிக்கிறது உலகின் பல நாடுகளில் தண்ணிர் பிரச்சனை பெட் ரோலியப் பிரச்சனை இருந்த போதிலும் இந்த இரண்டையும் அவன் மிக அதிகமாக பாதுகாப்பதோடு அதனை முழுமையாக பயன்படுத்தாமல் மற்ற நாட்டு வளங்களை பயன்படுத்தி வாழ்கிறான்

இதைப்படித்த பின்பாவது இந்தியர்கள் தங்கள் நாட்டின் வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்காக கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் இல்லையென்றால் இந்தியாவும் சுடுகாடகத்தான் காட்சி அளிக்கும் வருங்காலத்தில்


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. உண்மைதான்...
    நம் நாட்டில் பணமிருந்தால் நேஷனல் ஹைவேயில் கூட வீடு கட்டலாம்... அந்த ரோட்டை நமக்காக மாற்றிப் போடுவார்கள்.

    மக்கள் நலன் காக்கும் நாடுதான் முன்னேற்றப் பாதையில் செல்லும்....

    இங்கும் பெட்ரோல் பேரல் விலை தாறுமாறாக் குறைந்த போதும்.... பெட்ரோல் விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை... நஷ்டம்தான் என்றாலும் அதை மக்கள் மீது சுமத்தவில்லை... நம்ம ஊரில் பாருங்கள் பேரல் 120 டாலர் விற்கும் போது விற்ற விலையைவிட பேரல் 30 டாலருக்கு கீழ் வந்தும் அதிகமாகத்தான் இருக்கிறது.... 10 காசு இறக்கு 3 ரூபாய் கூட்டும் அநியாயம் நம்ம நாட்டில் மட்டுமே....

    ReplyDelete
  2. நல்லதொரு நடைமுறை. நேற்று புதிய தலைமுறைச் செய்திகளில் ஒரு வீடியோ காட்டினார்கள். சுய தொழில் தொடங்க எண்ணிய இளைஞனை லஞ்சம் லஞ்சமாக வாங்கி அலைக்கழிக்க அரசுத்துறையை வீடியோ எடுத்து அந்த இளைஞர் வெளியிட்டிருந்த காட்சிகள். ஹூம்!

    ReplyDelete
  3. அருமையான அலசல் நண்பரே உண்மையில் நாம் இதை படித்துக் கொள்ளவேண்டும்

    ReplyDelete
  4. பெங்களூரில் விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் ஒரு ஸ்டீல் ஃப்லைஓவர் அமைக்க திட்டம் எடுத்துள்ளது அரசு.ஏற்கனவே ஒரு கான்க்கிரீட் ஃப்லை ஓவர் இருக்கிறது இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனார் இருந்தாலும் முடிவு செய்து முடித்துவிட்டு மக்களின் ஆதரவு எதிர்ப்புகளைப் பரிசோதிக்கின்றனர் இதனால் விமான நிலையத்துக்க்ச் செல்லும் நேரம் ஏழு நிமிஷம் குறையுமாம் வேலைகள் தொடங்கஉத்தரவு போட்டாயிற்றாம்

    ReplyDelete
  5. அமெரிக்கர்களின் பொறுப்புணர்ச்சி சிந்திக்க வைக்கிறது!

    ReplyDelete
  6. ji ihad observed more such stringent rules do prevail in UAE particularly in DUBAI
    though the public participation/public debate as described in this article do not exist...very much
    UAE decides....that is all....to the benefit of the people....

    ReplyDelete
  7. நல்ல பதிவு. நல்லவற்றை விட்டு அல்லாதவற்றை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். நம் நாட்டில் விவாதம் என்பதே கிடையாது. ஒருவர் எடுக்கும் முடிவை ஒருமனதாக ஏற்பதாக கூறுவார்கள்.

    ReplyDelete
  8. அருமையான தகவல்

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  9. உண்மை தான்! மக்களுக்களின் வசதிக்காக மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கும் அவர்களும் பணமிருப்போர் வசதிகளை கருத்தில் கொண்டு தீர்மானிக்கும் நம் நாட்டு நிர்வாகங்களும் மலையும் மடுவும் போலதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.