Wednesday, November 16, 2016



avargal unmaigal
black money backfires

மோடியின் திட்டத்தால் வரும் காலங்களில் இந்தியாவில் இப்படி நடக்க வாய்ப்புக்கள் அதிகமே!


மோடியின் கருப்புபண ஒழிப்பு திட்டம் நல்லது என்றாலும் அதை செயல்படுத்திய விதம் மிக மோசமாகத்தான் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்றாலும் அப்படி வைத்திருக்காத மிடில்கிளாசும் அதற்கு கிழே  உள்ள ஏழை மக்களும் மிக அதிகமாக பாதிக்கப்ட்டு இருக்கின்றனர்.மற்றும் சிறுவியாபரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் பேஸ்புக்கில் உட்கார்ந்து ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கும் மேதைகள் இதனால் பாதிக்கப்படவில்லை இப்போது  ஆனால் அவர்களும் மிக விரைவில் பாதிக்கப்படுவார்கள்..


மோடியை பாராட்டுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள் மோடி கருப்பு பணத்தை ஒழிக்க திட்டம் போடும் போது முதலில் வெளிநாட்டுகளில் பதிக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதன் பின் இந்திய மக்களை பாதிக்கும்  இந்த கறுப்பு பண திட்டத்தை அமுல் படுத்தி இருந்தால் மக்கள் எந்தவித கஷ்டங்களையும் நாட்டிற்க்காக பொறுத்து கொண்டிருப்பார்கள் அல்லது பொறுத்து கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லாம்..


ஆனால் மோடி அப்படி செய்யவில்லை அது ஏன் என்று அவரை துதிபாடும் எவரும் கேட்கவில்லை கேட்க மாட்டார்கள் மானம் கேட்ட மோடியின் அடிவருடிகள்

சரி மோடியின் இந்த திட்டத்தால் இந்தியாவில் பதுக்கி இருந்த கருப்பு பணம் எல்லாம் வெளிகொண்டு வரப்பட்டு இருக்கிறதா என்றால் ஆமாம் கொண்டு வரப்பட்டி இருக்கிறது ஆனால் கொண்டு வரப்பட்ட சதவிகிதம் மிக குறைவு என சொல்லாம்..காரணம் இப்படி பதுக்கி இருப்பவர்கள் தாங்கள் பதுக்கிய பணத்தை சட்டத்தில் உள்ள ஒட்டைகளை வைத்து அதை எளிதில் மாற்றி மீண்டும் பணத்தை பதுக்கி கொண்டிருக்கிறார்கள் அதே சமயத்தில் அவர்களால் அதை முழுவதையும் மாற்ற முடியவில்லை என்பது உண்மைதான்....மேலும் வங்கியில் கணக்கு இல்லாமல் 50 சதவிகிட்திற்கும் மேல் இந்தியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வீட்டிலே நியாமான முறையில் சம்பாதிட்து சேமித்து வைட்து இருந்த பணங்களும் இப்போது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பணம் கறுப்பு பணம் அல்ல..... ஆனால் இந்த பணத்தையும் அரசாங்கம் கணக்கில் எடுத்து இத்தனை கோடி கருப்பு பணம் இந்த திட்டத்தினால் இது வறை வெளிக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்று அறிக்கைகள் விட்டு இந்த திட்டம் சக்ஸஸ் என்று மார்தட்டி கொண்டிருக்கிறது...


மோடியின் இந்த திட்டத்தால் வசதி படைத்த பண முதலைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை ஏழைமக்களும் மிடில் கிளாஸ் ஆட்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த பாதிப்பு இதோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் அதைப் போல முட்டாள்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது...காரணம் மோடியின் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டு சத்தம்மில்லாமல் இருக்கும் பண முதலைகள்  மற்றும் சிறு அரசியல் தலைவர்கள் அரசு அடிகாரிகள் கவுன்சிலர்கள் வியாபாரிகள் கல்வி நிறுவன அதிபர்கள் ஹாஸ்பிடல் முதலாளிகள் யாரும் இப்படியே அமைதியாக இருந்துவிடப் போவதில்லை. தாங்கள் இழந்ததை மீண்டும் பெற தவறான வழியில் இறங்குவார்கள் அதாவது இதற்கு முன்பு தாங்கள் சேர்த்த கறுப்பு பணதை எப்படி சம்பாதிதார்களோ அதை வழியே பின்பற்றி மிகவும் அக்ரசிவ்வாக சம்பாதிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்கள் ஆரம்பிக்கும் போது ஏழை எளிய மக்கள் மிடில் க்ளாஸ் குடும்பங்கள் மட்டுமல்ல பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடும் மேதாவிகள் மற்றும் மோடியினை பாராட்டும் அடிவருடிகள் மற்றும் பிஜேபி கட்சியினரும் கூடத்தான் பாதிக்கப்படுவார்கள்


எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று பார்ப்போமா? உதாரணமாக கல்வி நிறுவன முதலாளிகள் தாங்கள் இழந்த பணத்தை மீண்டும் குறுக்கு வழியில் சம்பாதிக்க வரும் காலங்களில் மறைமுக கல்வி கட்டணங்களை அதிகரிப்பார்கள் ஹாஸ்பிடல் முதலாளிகள் டாக்டர்களுக்கு டார்கெட் விதித்து நோயாளிகளுக்கு தேவையில்லாதா டெஸ்டுக்ளை மிக அதிக அளவில் எடுக்க சொல்லுவார்கள் அரசு துறைகளில் காரியங்கள் நடக்க தொகைகள் அதிகரிக்கப்படும் பத்திரம் பதிய டிரைவர் லைசன்ஸ் எடுக்க கவன்சிலர் எம் எல் ஏக்கள் போன்றவர்களிடம் காரியங்கள் சாதிக்க தொகை மிக அதிகமாக வசூலிக்கப்படும் அமைச்சர்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களில் கொள்ளை அடிப்பது மிக அதிகமாக இருக்கும் இப்பபடி பலதுறைக்களில் கட்டணங்கள் நிச்சயம் அதிக அளவில் வசூலிக்கப்படும் இதனால் பாதிக்கப்படுவது யார் என்று பார்த்தால் கருப்பு பண முதலைகள் அல்ல ஏழை எளிய மற்றும் மிடில் கிளாஸ் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடும் மேதாவிகள் மட்டுமே


இப்படி எல்லாம் பொதுமக்களை பாதிக்காமல் இருக்க மோடி எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும் பெரிய நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடங்களை திருப்பி பெற நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும் வருமானதுறையினரை முடுக்கிவிட்டு பல பெரிய இறிய  நிறுவங்கள் மற்றும் வியாபார தளங்களில் சோதனைகள் இடைவிடாமல் மேற்கொண்டு எல்லோரையும் வருமானத்திற்கு ஏற்ற வரியை கட்ட நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும் அது போல வருமான வரி கட்டாமல் ஏமாற்றும் சினிமா நடிகர்கள் மீதும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும் இப்படி எல்லாம் செய்துவிட்டு கடைசியாக இப்போது செயல்படுத்து திட்டத்தை நடைமுறை படுத்தினால் மக்கள் எந்தவித கோபமும் படவாய்ப்பில்லை அது மட்டுமல்லாமல் இந்த திட்டதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஆதரித்து இருப்பார்கள் என்பது நிச்சயமே..

இந்த திட்டம் மிக சூப்பாரன திட்டம் என்று சமுகவலைதளங்களில் உங்களுக்கு ஆதரவு தரும் மேல்தட்டுமக்கள் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதில்லை ஆனால்  இந்த திட்டத்தினால் மோடி இழந்து பெரும்பாலான ஏழை எளியவர்களின் ஆதரவைத்தான் இந்த ஏழை எளிய மக்கள்தான் வாக்கு சாவடிக்கு வந்து வாக்கு அளிப்பவர்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

black money backfires
16 Nov 2016

7 comments:

  1. சரியாக அலசி நடக்கப்போவதை சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே.... பார்ப்போம்.

    ReplyDelete
  2. அட நான் இதைப் பற்றி யோசிக்கவில்லையே.முதலில் இத்திட்டம் அருமை என்று நினைத்தேன் தாங்கள் முன் வைத்த கருத்தை பார்கையில் ஏழை எளியோர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கையிலே பதட்டமாக இருக்கிறது.

    தாங்கள் கூறிப்படி வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணம் இந்தியாவிற்கு கொண்டு வந்தால் கருப்புப் பணம் ஒழிப்பு நடக்கலாம்(சந்தேகம் தான்) நண்பரே..

    ReplyDelete
  3. 2000 கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்குச் சாமான் வாங்கணும் என்கிறார்கள். ஆனால் அறுபது ரூபாய்க்குச் சாமான் வாங்கினாலும் கார்டு ஒத்துக்கிறார்கள் . அதனால் கார்டு ஏற்றுக்கொள்ளும் கடையாகத்தான் பார்த்து சாமான்கள் வாங்குகிறேன்

    ReplyDelete
  4. என்னமோ நடக்குது உலகத்திலே. ஒண்ணுமே புரியலே. பணம் இல்லாதவன் பிணம் என்பது போய் இப்போது பணம் உள்ளவனும் பிணம் ஆகி விட்டான். இந்தக் கணக்கில் போனால் சீனா போல பாஜக தவிர வேறு கட்சியே இந்தியாவில் இல்லாத சர்வாதிகார நிலை ஏற்படலாம்.
    --
    Jayakumar

    ReplyDelete
  5. oddly enough the poor people are put in a daydream that the rich are being looted ...
    sad..

    ReplyDelete
  6. //மோடியை பாராட்டுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள் மோடி கருப்பு பணத்தை ஒழிக்க திட்டம் போடும் போது முதலில் வெளிநாட்டுகளில் பதிக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதன் பின் இந்திய மக்களை பாதிக்கும் இந்த கறுப்பு பண திட்டத்தை அமுல் படுத்தி இருந்தால் மக்கள் எந்தவித கஷ்டங்களையும் நாட்டிற்க்காக பொறுத்து கொண்டிருப்பார்கள் அல்லது பொறுத்து கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லாம்..//


    ஒவ்வொரு குற்றம் செய்பவனும் தன்னைவிடப் பொரிய குற்றவாளி இருக்குறான் என்று கூறித் தப்பித்துக் கொள்கிறான்.

    //உதாரணமாக கல்வி நிறுவன முதலாளிகள் தாங்கள் இழந்த பணத்தை மீண்டும் குறுக்கு வழியில் சம்பாதிக்க வரும் காலங்களில் மறைமுக கல்வி கட்டணங்களை அதிகரிப்பார்கள் ஹாஸ்பிடல் முதலாளிகள் டாக்டர்களுக்கு டார்கெட் விதித்து நோயாளிகளுக்கு தேவையில்லாதா டெஸ்டுக்ளை மிக அதிக அளவில் எடுக்க சொல்லுவார்கள் அரசு துறைகளில் காரியங்கள் நடக்க தொகைகள் அதிகரிக்கப்படும் பத்திரம் பதிய டிரைவர் லைசன்ஸ் எடுக்க கவன்சிலர் எம் எல் ஏக்கள் போன்றவர்களிடம் காரியங்கள் சாதிக்க தொகை மிக அதிகமாக வசூலிக்கப்படும்//

    கறுப்புப் பணம் எந்த விதித்தில் ஒழிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதை சம்பாதிக்க முயல்வார்கள். இதை மோடி செய்ததால் என்ன யார் செய்தால் என்ன? அப்போ கறுப்புப் பணத்தை ஒழிக்கவே கூடாதா??

    ReplyDelete
    Replies
    1. கருப்பு பணம் ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆனால் இன்னும் சிறப்பாக திட்டம் தீட்டி சாமான்ய மக்கள் பாதிப்படையாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்பதுதான் என் கருத்து ஒரு 10 சதவிகிதம் கறுப்பு பணம் பிடிக்கப்பட்டு இருந்தாலும் அது வெற்றிதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.