Tuesday, November 29, 2016



நீயும் ஒரு முட்டாள்தான் (பேஸ்புக் ஸ்டேடஸ்)


ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளை கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு. அப்படி செய்யாவிட்டால்  நீயும் ஒரு மோடி மன்னிக்கவும் நீயும் ஒரு முட்டாள்தான்


குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே மோடிக்கும் அறிவார்ந்தோர் சொல்லும் அறிவுரைகளும்  உதவாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் மோடி போன்ற ஆட்களுக்கு  எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.


அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் பணத்தை பதுக்கி இருக்கும் முதலாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக அப்பாவி மக்களை தண்டித்து கொண்டிருக்கிறார் மோடி காரணம் அவர் படித்த வேதங்கள் இப்படித்தான் அவருக்கு கற்று கொடுத்து இருக்கின்றன.

மோடிக்கு வோட்டு கூட போடாத மேல்தட்டுமக்கள்தான் மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள் ஆனால் வோட்டு போட்ட மக்களோ மோடிக்கு எதிராக அல்ல கறுப்பணத்திற்கு எதிராக அல்ல திட்டம் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தப்படாததால் எதிர்க்கிறார்கள்.

மோடியோ மேல் தட்டு மக்களுக்கு செளரிகத்தையும் கீழ்தட்டு மக்களுக்கு அசெளரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்.


பொதுமக்கள் :இரண்டு நாளில் பணப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொன்னவர்கள் இப்போது ஐம்பது நாளில் தீர்ந்துவிடும்  என்று சொல்லுகிறார்கள். உண்மையிலேயே ஐம்பது நாளில் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

மதுரைத்தமிழன் :தீருமா தீராதா என்று தெரியாது ஆனால் ஐம்பது நாளுக்கு அப்புறம் அந்த பிரச்சனை பழகிவிடும்

தமிழகத்தில் ஜல்லிகட்டை ஒழித்து கட்டிய மோடி இந்தியாவெங்கும் பணத்திற்கு மல்லுகட்ட வைத்திருக்கிறார்



எஸ்விசேகர் தலையில் இரண்டு தட்டு தட்டி அவரை நகர்வலத்திற்கு கூட்டி சென்று உண்மை நிலையை அவருக்கு உணர்த்த தமிழகத்தில் ஒரு ஆண்மகனாவது இருக்கிறீர்களா?


மாத சம்பளம் வாங்கி கொண்டிருந்த வங்கி மேலாளர்கள் கடந்த சில வாரங்களில் லட்சாதிபதிகளாக ஆகினர்#மோடி அரசு கவனிக்குமா இதை


எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படும்போது இந்தியா கிரிக்கெட் விளையாட ஆட்களை அனுப்பலாமா

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. தெரியாமல் புத்தில் கைவிட்ட கதை
    போலத்தான் தெரிகிறது
    நிச்சயம் இந்தப் பிரச்சனை அவரைக்
    கொத்தாது விடாது
    சொல்லிச் செண்ற விதம் "நறுக்" மற்றும் சுருக்"
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம்மகிட்டே பணம் இல்லாதபோது படும் அவஸ்தையை வலியுடன் அனுபவிக்கிறோம் . ஆனால் அடுத்தவங்க பணம் இருந்தும் கஷ்டப்படும் அவஸ்தையை பற்றி ஆயிரம் ஜோக்ஸ் மீம்ஸ் ....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.