அமெரிக்க தேர்தல் களத்தில்!
அமெரிக்க தேர்தல் களத்தில் ஒன்பது கட்சி சார்பாக நிற்பவர்கள்தான்
இவர்கள். ஆனால் போட்டி என்னவோ ஹில்லாரிக்கும் ட்ரெம்ப் மட்டும்தான்
அதாவது ஜெயலலிதா கலைஞர் மாதிரி மற்ற கட்சிகள் சார்பாக நிற்பவர்கள் எல்லாம் அன்புமணி
விஜயகாந்த திருமாவளவன் வாசன் மாதிரிதான்.
இதில் ஹில்லாரி ஜெயிச்சாலும் ட்ரெம்ப் ஜெயிச்சாலும் எங்களுக்கு(அமெரிக்கர்களுக்கு) ஒன்றும் ஆகப்போவதில்லை.
இன்சூரன்ஸ் அதுபாட்டுல வருஷம் வருஷம் ஏறிக்கிட்டதுதான் போகும்.(
கலிபோர்னியாவில் வசிக்கும் விசுவிற்கும் நீயூயார்க்கில் வசிக்கும் ஆல்ப்ரட்டிற்கும்
அட்லாணடாவில் வசிக்கும் கிரேஸுக்கும் இதுனால பிரச்சனை இல்லை ) ஆனால் என்னைப் போல உள்ள பாவப்பட்டவர்களுக்குதான் பிரச்சனை.
தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல சீரியா போன்ற நாடுகளில் குண்டு
மழை பொழிந்து கொண்டுதான் இருக்கும் இந்தியா என்னதான் நட்புநாடாக இருந்தாலும் அதன் தலையில்
அப்ப அப்ப குட்டு ஒன்று விழுந்து கொண்டுதான் இருக்கும். பாகிஸ்தானுக்கு நிதி உதவி ஆட்டோமேடிக்காக அனுப்பி கொண்டுதான் இருக்கும்.
சைனாவில் இருந்து இறக்குமதி நடந்து கொண்டுதான் இருக்கும்.
சரி எது எப்படி ஆனாலும் சரி நான் இந்த நாட்டு குடிமகன் என்பதால்
கடமை உணர்ச்சியோடு ஒட்டு போட போகிறேன்
வாழ்த்தி அனுப்பிவையுங்கள் மக்கழே ஹீஹீ
டிஸ்கி : பேஸ்புக்கில்
படித்ததில் பிடித்தது
Prakash JP
அமெரிக்காவுல ஹில்லாரி வரலாம்.. இல்லன்னா டிரம்ப் வரலாம்.. ஆனா கண்டிப்பா
வருஷத்துக்கு இரண்டு முறை மோடி அமெரிக்காவுக்கு வருவாரு.
அன்புடன்
மதுரைத்தமிழன்.
வாழ்த்துகள் சார்.....உண்மைதான் நீங்கள் சொல்வது...வல்லரசு வெறி தணியாத....மனிதநேயமற்ற நாடாகவே இன்னும் எத்தனை காலத்திற்குதான் இருக்கும்....?
ReplyDeleteஉங்கள் ஓட்டு நல்ல ஒரு தலைவரை/தலைவியை தீர்மானிக்கும் அஸ்திரமாக இருக்கட்டும்))))
ReplyDeleteட்ரம்ப் ஜெயிச்சிட்டாராமே! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் கடமை வீரரே..
ReplyDeleteதம +
How hillary clinton managed to lose an election to a candidate as divisive and unpopular as donald trump will baffle observers and agonise democrats for years to come
ReplyDeleteOnce the shock wave glimpses of rational explanation may become visible.
We have to live with the ISOLATIONISM and PREJUDICE of the deep UNCERTAINITIES of a TRUMP PRESIDENCY...
Now AMERICA faces a bitterly divided FOUR YEARS AND the world faces a profoundly narrow WASHINGTON that will base its policies on isolationanism
GOD SAVE AMERICA GOD SAVE ALL OF US