Monday, November 14, 2016




avargal unmaigal
மோடியின் நல்லதிட்டமும்  மோசமான பலன்களும்   (சிறு அலசல்)



மோடியின் இந்த திட்டம் மட்டுமல்ல எந்த தலைவர்களின் திட்டங்களும் நல்ல திட்டம்தான் ஆனால் அந்த திட்டம் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது .அதனால் உண்மையாக யார் பலன் அடைக்கிறார்கள் என்பதை பார்க்கும் போதுதான் அந்த திட்டம் வெற்றியா தோல்வியா என்று தெரியும். இப்படி திட்டம் அறிவிக்கும் போது திட்டத்தை அறிவித்துவிட்டாலே அது தன்னாலாக பலன் கொடுத்துவிடும் என்று கருதி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவித்துவிட்டு அதன் பின் மற்றவர்கள் மீது குறை சொல்லக் கூடாது..



மோடியின் புதிய திட்டம் கறுப்பு பணத்தையும் கள்ளப்பணத்தையும்(கள்ள நோட்டுயையும்) ஒழிப்பதுதான் அப்படி ஒழிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதரத்தை உயர்த்தி இந்தியாவில் பல சமுகத்திற்கு நலன் அளிக்கும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி ,இந்தியாவை தலை சிறந்த நாடாக மாற்றுவதுதான். அப்படி பார்க்கும் போது மோடியின் இந்த திட்டம் மிக சிறந்த திட்டமே அப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக அவரை பாராட்டுவோம்..

அப்படி பாராட்ட நாம் நினைக்கும் போது நம் மனதில் சில கேள்விகள் எழுதுவது இயல்பே... திட்டம் அறிவித்தால்மட்டும் போதுமா அதை எப்படி செயல்படுத்தப்ப போகிறார்கள் அதனால் யார் எப்படி பாதிக்கப்பட போகிறார்கள் என்று பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

பணத்தை பதுக்கியவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் இந்திய அரசாங்கத்தை ஏமாற்றி பல வகைகளில் நல்ல முறை மற்றும் தவறனா முறையில் பணத்தை சேகரித்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை ஒரு கோடி இரு கோடி அல்ல ஆயிர கோடிக் கணக்கில் சில பேர் லட்ச கோடி கணக்கில் பதுக்கிய தொழில் அதிபர்கள் தலைவர்கள்( 10 சதவிகித்தினர்) ஒரு வகையினர். அடுத்த வகையினர் உள்ளுர்ர் தலைவர்கள் சிறுதொழில் அதிபர்கள் சிறு தலைவர்கள் 20 சதவிகத்தினர் மீதுள்ளமுள்ளவர்கள் பொது  சனங்கள்தான் இதில் பலர் பணத்தை நியாய வழியில் சம்பாதித்து இருந்தாலும் பேங்கில் அக்கவுண்ட இல்லாமல் தாங்கள் சம்பாதித்த பணங்களை தங்களது அவசர தேவைகளுக்காக வீட்டிலேயே வைத்திருக்கும் ஏழை ஜனங்கள் இப்படி போகின்றது. இப்படி அவசர தேவைகளுக்கு உதவுமே என்று கஷ்டப்பட்டு சேமித்த ஐயாயிரம், பத்தாயிரம் வச்சிருக்க கீழ்தரப்பட்ட மக்களைதான்  பெரும்பாலும் பேங்குகளின்  வரிசையில் பார்க்க முடிகிறது.  அதிலும் எங்கே நம்ம கஷ்டப்பட்டு நியாயவழியில் சம்பாரிச்ச பணம் செல்லாமல் வீணாகப் போய்விடுமோ என்ற பதட்டத்தைதான் அவர்கள் முகத்தில் காண முடிகிறது. . ஆனால் எந்த பேங்குகளின் வாசலிலும் கறுப்ப பண முதலைகளை பார்க்க முடியவில்லை அவர்கள் என்ன நியாயமற்ற முறையில் தங்களின் வாழ்வை ரிஸ்க் வைத்து சம்பாரித்ததை அப்படியே விட்டுவிடுவார்களா என்ன?குறுக்கு வழியில் சம்பாதித்தவர்களுக்கும் தாங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை மீண்டும் மாற்ற தெரியாத அப்பாவிகளா அவர்கள்.

இப்படி இருக்கும் போது மோடி அறிவித்த திட்டங்களினால் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள்தான். காரணம்  பணத்தை பதுக்கி இருக்கும்  பணமுதலைகள் பிடிபடுவதிலோ ஏமாற்றுப் பேர்வழிகள் அகப்படுவதிலோ அதனால் நாட்டின் பொருளாதாரம் மேன்படுவதிலோ பொது சனங்களுக்கு எவ்விதமான மாற்று கருத்தும் இல்லை இருக்கவும் முடியாது. காரணம் இப்படி பணமுதலைகளால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
 
avrgal unmaigal
Modi’s Black Money Strike
மேலும் மோடி இந்த திட்டத்தை அறிவிக்கும் முன் தேர்தல் காலத்தில் அறிவித்த படி வெளிநாடுகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கறுப்பணத்தை முதலில் கைப்பற்றி அதன் பின் இந்தியாவில் படுக்கி இருக்கும் பணங்களை கைப்பற்ற முயற்சி செய்து இருந்தால் பொதுமக்களிடம் பெரிது வரவேற்பை பெற்று இருப்பார்கள் ஆனால் வெளிநாடுகளில் பதுக்கி இருப்பதில் பாதிக்கும் மேல் அவரின் நண்பர்கள்தான் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை. மோடியின் இந்த வேஷம் நண்பர்களை காப்பாற்றி பொதுமக்களை வதக்கி தேசப்பற்றை காட்டுவதாகத்தான் இருக்கிறது.


சரி வெளிநாடுகளில் பதுக்கி இருப்பவர்கள் அவரின் நண்பர்கள் அதனால் அவர்களை விட்டுவிடுவோம் ஆனால் உள்நாட்டில் இருப்பவர்களை பிடிக்க அவர் தக்க ஏற்பாடுகளை செய்து இருப்பார் என்று பார்த்தால் அதையும் உருப்படியாக செய்யவில்லை. உள்நாட்டில் பதுக்கி இருக்கும் தன் கட்சிகாரகளுக்கும் மற்றவர்களுக்கும் எளிதில் இதில் இருந்து தப்புவிக்க வழிவகைகளை செய்துவிட்டு பொதுசனங்களை பாதிக்கும்படிதான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.


பேங்கு வாசல்களிலும் சமுக தளங்களிலும் நிற்கும் பொது சனங்கள் யாரும் இந்த கறுப்பு பண ஒழிப்பை எதிர்க்கவில்லை ஆனால் இந்த பொது ஜனங்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் செயல்களை எதிர்த்துதான் கூக்குரல் இடுகின்றனர் இப்படி கூக்குரல் இட காரணம்  நோட்டு விவகாரத்தை முறையான ஏற்பாடுகளைச் செய்து  அதற்கான திட்டங்களை பொதுமக்களிடம் தெளிவாக அறிவித்து அமல்படுத்தால்தான் ..இவ்வளவு பெரிய திட்டத்தை  நடைமுறை படுத்தப்படும் போது என்னென்ன சிக்கல்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு பொது மக்களுக்கு அவதி வரலாம் என்று இந்த திட்டத்தை அமுல் படுத்திய மேதைகளுக்கு தெரியாதா என்ன? அப்படி அவர்களுக்கு தெரியவில்லை என்றால் இதனால் ஏற்படும் பலன்களை மட்டும் அவர்களால் அதாவது இந்த  பொருளாதார மேதைகளால் எப்படி துல்லியமாக கணித்து இருக்க முடியும். அல்லது ஒரு வேளை அவருக்கு தெரிந்திருக்கும் என்று வைத்து கொண்டால் அவர்கள் பொது சனங்கள் கஷ்டப்பட்டால் நமக்கென்ன என்று இருக்கிறார்களா?


பொது சனங்களை மனதில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு பாதிப்பு  வராத திட்டங்களை மட்டுமே பொது மக்கள் வரவேற்பார்கள். அப்படி இல்லையென்றால் அவர்கள் இந்த திட்டத்தை மட்டுமல்ல அதை நிறைவேற்ற நினைக்கும் தலைவரையும் காறித்துப்பதான் செய்வார்கள்

இந்த காணொளியை பார்க்க தவறாதீர்கள்
Courtesy Thanks to News18 Tamilnadu

கள்ளப் பணம் வெள்ளைப் பணமாக எவ்வாறு மாறுகிறது?  
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தரும் விளக்கம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. நட்பில் இருக்கும் பட்டயக் கணக்கர்கள் எல்லாம் வேறு மாதிரி பேசுகிறார்கள்..
    பாப்போம் இன்னும் இரண்டு வாரங்கள் ஓடட்டும் ..
    என் கணிப்பின் படி இன்று ஆக ஓகோ என்று சொல்வோர் இரண்டு வாரங்கள் கழித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. தற்போதைய ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகளும் , நடுத்தர வர்க்கத்தினரும் என்பதே உண்மையாகும் , அன்றாட தேவைகளுக்கும் நாளைய பிள்ளைகளின் திருமண சிலவுக்கும் , கல்வி சிலவுக்கும் , மருத்துவ சிலவுகளுக்குமாக சேமித்து வைத்த தொகைகளை மாற்றுவதற்குள் அவர்கள் படும் பாட்டை சொல்லி மாள முடியாது,
    அதே சமயம் நாம் அறிந்த வகையில் தவறான வழியில் சம்பாதித்த அரசியல்வாதிகளின் பணம் , கருப்பு பணத்தை சம்பாதித்த நடிகர்களின் பணம் , பெரும் தொழிலதிபர்களின் கருப்பு பணங்கள் இவையெல்லாம் பதுக்க வேண்டிய வழிகளில் முன்பே பதுக்கப்பட்டுள்ளதுடன் மட்டும் அல்லாமல், கையில் அவர்களிடம் இருந்த இருப்புகளும் பாதுகாக்கப்பட ஆட்சியாளர்களின் அறிவுரைகள் முன்பே வழங்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது , ரூபாய் செல்லாது என அறிவிப்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக கல்கத்தாவின் பா ஜ வின் பணங்கள் கோடியில் வங்கியில் போடப்பட்டுள்ளதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, தேர்தல் காலங்களில் பெரும் தொழில் அதிபர்களின் பொருளாதார உதவிகள் இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் செயல்பட முடியாது என்ற நிலையில் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு முன் கூட்டியே தகவல் தராது இந்த அறிவிப்பை செய்து இருக்க முடியாது என்பதை நாம் ஒதுக்கி விடவும் முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும் நடுத்தர வர்கத்தினரும் என்பதே நம் மனதை கனக்கின்ற விடயங்கள் , கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிகவும் சரியானதே .

    ReplyDelete
  3. காணொளியை முழுமையாக கேட்டேன் தமிழரே....
    திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் பேச்சு பொதுநலமாக இருக்கின்றது கே.டி.ராகவன் அரசியல் பேசுகின்றார் காரணம் அவர் அரசியல்வாதி
    த.ம.1

    ReplyDelete
  4. மூளை கெட்ட தமிழா! அதான் எல்லா டோல்கேட்டயும் ப்ரீ பண்ணி ட்டாரே! இன்னும் என்ன ஏழைகளுக்கு கஷ்டம்?!

    ReplyDelete
    Replies
    1. பெயர் அன்பே சிவம்.. ஆனால் எழுத்துல.. அன்பையே காணோமே... கன்பூயுசன்...

      Delete
    2. தமிழா...

      காரை எடுத்துன்னு போற எல்லா ஏழைகளும் இனிமேல் டோல் கட்டத்தேவையில்லை. இன்னும் அவங்களுக்கு என்ன கஷ்டம்? விளக்கமா சொல்லு..

      Delete
    3. அண்ணே தமிழன் மேல் இருக்கிற அன்பில் உரிமையோடு சொன்னா கோவிக்கிறியளே.?!

      Delete
    4. என்ன சொல்லவந்தாலும் அன்பா சொல்லுங்க.. உரிமையோடா இன்னோருத்தரை " மூளை இல்லாதா" ... அப்படி சொல்லுறது அன்பு இல்ல. வம்பு..

      Delete
    5. அண்ணே டோல்கேட்ட ப்ரீயாக்கி பெரும் முதலைகளுக்கு தந்த மேதையை குத்தவே சொன்னேன மன்னிச்சுக்கோங்க

      Delete
    6. அடே.. டே.. .வஞ்ச புகழ்ச்சியா?

      Delete
    7. அதே,!!1. அதே. அண்ணா நீங்களே என்ன கேள்வி கேட்டதும் மிரண்டுட்டேன். கோபிக்காதியள்.

      Delete
  5. நல்ல திட்டம்தான்.ஆனால் ஒரு வாரம் ஆனபின்பும் நிலை இன்னும் சீரடைய வில்லை. 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் வெளிவராதது மிகப் பெரிய குறைபாடு இந்நிலையில் சில்லறையை நம்பி இருக்கும்ரு ஏழை மக்களுக்கு வழி விடாமல் குண்டூசியைக் கூட ஆன் லைனில் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரும் வங்கியை ஆக்ரமித்துக் கொண்டனர். காய்கறி பால் போன்றவற்றைக் கூட ரிலையன்ஸ் சென்று கார்டு மூலம் வாங்கும் மக்களும் இதில் சேர்ந்தது மேலும் நெரிசலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பல ஏ டி.எம் காருடுகளை வைத்திருப்போர் 100 ரூபாய் நோட்டுகளை அவசியமற்ற நிலையிலும் தொடர்ந்து பெற படையெடுத்து செல்கின்றனர்.மக்களின் மன நிலையை மோடிக்கு எடுத்து சொல்ல யாருமில்லை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.