Wednesday, November 23, 2016



விருது வாங்கலையோ விருது......!!??!!

கமா, புல் ஸ்டாப், கிராமர் மிஸ்டேக், ஸ்பெல் மிஸ்டேக் இப்படில்லாம் வந்துடக்கூடாதுன்னு ஸின்ஸியரா ஒரு லெட்டரை டைப்பிக்கிட்டு ஆபிஸ் வேலையில் மூழ்கிட்டு இருக்கும் போது இப்ப ஒரு கால், எதோ நெம்பரே இருக்கே அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது எந்த கால் வந்தாலும் அட்டெண்ட் பண்ணிட வேண்டியிருக்குன்னு எடுத்து ஹலோவினால்,  எதிர் முனையில் " ஹலோ நான் சென்னையிலர்ந்து ............... பேசறேன். 7 ம் தேதி விருது வழங்கும் விழா உங்களுக்கு 'கவி விர்த்தகி ' ன்னு விருதும் சான்றிதழும் தரலாம்னு இருக்கோம்.....


' அடேய் ராசா எவரு  நூவு?  நான் எந்த 'வர்த்தகமும்' பண்ணலையே ? எதுக்கு எனக்கு 'விர்த்தகி ' பட்டமு? ' மைண்ட் வாய்ஸ லாக் பண்ணிட்டு ' நான் இப்ப ஆபிசுல இருக்கேன்  ப்ரீயாயிட்டு கூப்பிடறேன் '

" சரிங்க .. ' டெல்லி கணேஷ்,' ...... நடிகர் லாம் வர்றாங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யார்னா இருந்தாலும் சொல்லுங்க கொடுத்துடலாம்...."

சரி கூப்பிட்டு கொடுக்கறாங்க ஆளுக்கு ஒரு விருத போய் வாங்கிட்டு வந்துரலாமா? உங்களுக்கு என்ன என்ன விருது வேணும் சொல்லுங்க? சும்மா ஜாலியா போய் டைம் பாஸ் பண்ணிட்டு ' மார்க்கெட்' போன ஆக்டரை யாவது பார்க்கலாம்... பட் இங்கதான் இருக்கு ட்வீஸ்ட்டு........ விருது விழா எல்லாம் உண்மைதான் ஆனா இதெல்லாம் ' மொய்' வாங்கி விருந்து போடற விழா ப்ரெண்ட்ச்....... ஆமாப்பா ஆமா ஒரு விருதுக்கு 5000 ரூபா. இந்த மாதிரி இருபது பேரை ஆளை புடிச்சி வாங்கின அமௌண்ட்ல ஓசி மண்டபம் புடிச்சு ஸ்பான்ஸர் 'அன்ன தானத்த' விருந்துன்னு போட்டுருவாங்க. ஓடாத ஆக்டருங்களை அரைமணி நேரம் மைக்ல பேசி ஓட்டி அவர் கையால் இந்த விருத கொடுத்துடுவாங்க.. ஆக்டருக்கு கவர்ல ஒரு பத்தாயிரம் போதும்.. மீதி 90,000 விருது விக்கிற அந்த ராசாவுக்கு....

இப்படி ஒரு " இலக்கிய கூட்டம்" ன்னு நிறைய பேரு குரூப்பா அலைஞ்சுக்கிட்டு இருக்குங்க... நல்ல பிஸினஸ்ப்பா ... நம்ம நாட்டுல எவ்வளவு ஸ்மால் அம்பானிங்க? இதுக்கெல்லாம் மூளை வேணும் ப்ரெண்ட்ச்...  முதல்ல அந்த பிஸினஸ் அம்பானிக்கு " செம்மொழி விர்த்தகர்' ன்னு இவருக்கு கொடுங்கன்னு ஒருத்தன் நெம்பரை போட்டு கொடுக்க போறேன்.   நெம்பி அந்த நெம்பருக்கு போனை போட்டு  வாயை திறந்தா உலகத்துல இருக்க அத்தனை 'பேடு வேர்டஸையும்' பேசற அவன் அந்த ஆளுக்கு கொடுக்க போற விருத நினைச்சா இப்பவே பக பகன்னு சிரிப்பு பொத்திக்கிட்டு வருது...


 சரி விடுங்க இதுவும் நல்ல பிஸினஸாதான் படுது விருதுதானே? ஒரு முப்பது பேருக்கு கொடுத்து தொலைவோம்  நானும் ஒரு கம்பேனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்... யாரெல்லாம் பார்ட்னர் ஆக வரீங்க?
--
எழுதியவர் உஷா , வேலூர்

நையாண்டி பதிவை இந்த வலைத்தளத்திற்க்காக எழுதி தந்தமைக்கு திருமதி. உஷா அவர்களுக்கு நன்றி
 

18 comments:

  1. எனக்கும் இப்படி ஒரு போன் வந்தது. உடனே மகிழ்ந்தேன். அவர் சொன்ன விபரத்தில் மகிழ்ச்சி காணாமல் போனது. என்னிடம் ஆறாயிரம் கேட்டார்கள். அப்போது நான் தெலுங்காநாவில் இருந்தேன். அவர் கேட்ட ஆறாயிரம், என் செலவு ஒரு நாலாயிரம் ஆக மொத்தம் பத்தாயிரம் கொடுத்து ஒரு விருது வாங்கி வீட்ல வைச்சா... மனைவிக்கு கிட்ட இருந்து சுலபமாக ஒரு விருது கிடைக்கும் பாருங்கோ...அதான் மிகப்பெரிய விருதான ”மாங்கா மடையா”

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அதிர்ஷட்ம் நன்றாகவே இருக்கிறது அதனாலதான் 10000க்கு இரண்டு விருது

      Delete
  2. பதிவுக்கு போடற போட்டோ எல்லாம் ' அள்ளுதுங்க' உங்களுக்கும் ஒரு விருது தரலாம்னு இருக்கேன்... நூறு ரூபா நோட்டா நூறு அனுப்பி வைங்க.........

    ReplyDelete
    Replies

    1. தலைவி நயன்தாரா தலைமையில் விருது விழா ஏற்பாடு செய்தால் 100 ரூபாய் நோட்டு கட்டுகள் உங்களுக்கு அனுப்படும் எவ்வளவு வேண்டும் என்று சொன்னால் பாகிஸ்தான் காரனிடம் முன் கூட்டியே சொல்லி ஏற்பாடு பண்ணலாம்

      Delete
    2. அப்படியே ஏற்பாடு பண்ணிடறேன் உங்க நயனுக்கு 60 வது பிறந்த நாள் அப்ப இந்த விழாவை... ஹே.........

      Delete
    3. ஆகா ... எங்கப்பா அந்த பூரிக்கட்டை

      Delete
    4. உஷா மேடம்! நயன் தாரா பதிவுக்கு அப்புறம் வேற எந்த பதிவும் போடலையே.மாதம் ஒரு முறையாவது வலைப்பக்கம் எட்டிப் பாருங்க

      Delete
  3. எனக்கு அடிக்கடி போன் வரும் உங்க நம்பரைத் தேர்ந்தெடுத்த்திருக்கோம்ன்னு . உங்கள் குடும்பத்திற்கு ஒரு ஜாலி டூர் ஃ பிரீ என்று சொல்வார்கள் ,நான் இது வரை போனதில்லை .இது புதுசா இருக்கே , ரூம் போட்டு யோசிச்சிருக்கானோ ?

    ReplyDelete
    Replies
    1. நீயூஜெர்ஸி வலைப்பதிவர் சார்பாக உங்களுக்கு விருது கொடுக்க ஏற்பாடு செய்யட்டுமா கொஞ்சம் செலவு அதிகம் மாகும் யோசிச்சு சொல்லுங்க

      Delete
    2. நியூஜெர்சி போகவர செலவு நான் பார்த்துக் கொள்கிறேன் , எனக்கு தங்கும் இடம் சாப்பாடு செலவு நீங்கள் பார்த்துக்கொள்வதாக இருந்தால் ..... சொல்லுங்கள் . நாளையே வருகிறேன் .( மற்ற வேலையெல்லம் அப்படியே கிடக்கட்டும் ...)

      Delete
  4. நம்ம பதிவர்கள் கொடுத்துக் கொள்கிற விருதைப் பற்றி ஒண்ணுமே சொல்லக் காணாமே?இலவச விருது எனக்கும் கிடைத்தது ,நான்தான் அதைப் போட்டுக் கொள்ளவதில்லை !பண முடிப்புடன் யார் விருது தருகிறார்களோ அதை வேண்டுமானாலும் விருது என்று சொல்லலாம் ,மற்றதெல்லாம் டுபாக்கூர் தான் :)

    ReplyDelete
    Replies
    1. பதிவர்கள் தரும் விருது நம் தோளில் தட்டிக் கொடுப்பதை போன்றது அதை இந்த பணம் கொடுத்து வாங்கும் விருதுகளோடு ஒப்பிட வேண்டாம்

      Delete
  5. விருதுகளுக்கும் பெறுமதி இல்லை
    பட்டங்களுக்கும் பெறுமதி இல்லை
    வலைவழியே!

    ReplyDelete
  6. வே(வெய்யி)லூரில் எம் வலை சொந்தங்களின் செலவில் உஷா அவர்களுக்கு விருது+விருந்து வழங்கப்பட உள்ளத

    ReplyDelete
  7. விழாவுக்கு வர அனுமதி இலவசம், ஆனா மக்கா வெளிய போனம்னா? ரூ 2000/ 1ரே நோட்டு குடுத்தாகனும்

    ReplyDelete
  8. எழுதியவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஆஹா!உஷா அன்பரசுவின் பதிவைப் படித்து ரொம்ப நாளாயிற்று.காசுக்கு விருது நானும் கேள்விப் பட்டிருக்கிறேன், அஞ்சு பேர பிடிச்சா ஒரு விருது ஃப்ரீ ன்னு ஆஃப்பர் குடுக்கலாம்.

    ReplyDelete
  10. ஐயையோ! போச்சே போச்சே! விருது போச்சே! லேட்டா வந்ததுனால....

    ஹஹஹ செம பதிவு உஷா அன்பரசு சகோ/உஷா! பல நாட்களாயிற்று அவரின் பதிவுகள் பார்த்து. நிறைய ஆஃபர் எல்லாம் போட்டுருக்காபுல தெரியுது....எங்களையும் அந்த லிஸ்ட்ல போட்டுக்கங்கப்பா...ஹிஹிஹி ..அப்படியாவது பழைய செல்லா நோட்டெல்லாம் மாத்திக்கிடலாமோ!!!!

    துளசி, கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.