Tuesday, February 16, 2016




avargal unmaigal
மதுரைத்தமிழனின் உளறல்கள் 4

ஒரு ஆண் அமைதியாக இருக்கிறான் என்றால் அவன் ஏதோ சிந்திக்கிறான் என்று அர்த்தம் அதே வேளையில் ஒரு பெண் அமைதியாக இருக்கிறாள் என்றால் அவள் மிக கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தம்


நான்கு ஆண் நண்பர்கள் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் இன்சல்ட் பண்ணி காலைவாரி பேசிக் கொள்வார்கள் ஆனால் அதில் ஒரு துளி உண்மை இருக்காது அதே போல பெண் தோழிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புகழ்ந்து பேசிக் மகிழ்ந்து கொள்வார்கள் ஆனால் அதிலும் உண்மை என்பது துளி அளவும் இருக்காது.
 
பெண்கள் கல்யாணத்து அன்று அழுது  கல்யாணத்திற்கு பின்  ஆண்களை அழ விடுவார்கள்,

பெண்கள் பிரிவது ஈகோவினாலும், கூடுவது காசீப்பினாலும்(gossip) ஆனால் ஆண்கள் பிரிவது
பெண்களினால் ஆனால் ஒன்று கூடுவது டாஸ்மாக் சரக்கினால்தான்


ஆண்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்லும் பெண்கள் தங்கள் கணவர்மட்டும் மிக அறிவாளி என்று மற்ற பெண்களிடம் மட்டும் பெருமை அடித்து கொள்வார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. கடைசி பட வரிகள் ..... . உங்களை மாதிரிதான் எனக்கும் அந்த பத்து சதவித இட ஒதுக்கீடு தான் நல்லா பிடிக்கும் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?தானா நிமிர்ந்ததான் உண்டு .இது அடிக்கடி எனது மனைவி சொல்லுவது .எல்லாம் சரி பூரிக்கட்டையால் இவ்வளவு வாங்கியும் இன்னும் திருந்தவில்லையா இது உங்கள் மனைவி கேட்பது .....ஹா ..ஹா .....

    ReplyDelete
    Replies
    1. பத்து சதவிகிதம் எனக்கு பிடிக்கும் என நான் சொல்லவே இல்லையே....எதிலும் விதிவிலக்கு உண்டு அல்லவா 90 சதவிகித ஆண்களுக்கு 10 சதவிகிதம் மறைக்கப்பட்ட பகுதிகள் பிடிக்கும் ஆனால் 10 சதவிகித ஆண்களுக்கு மறைக்கப்படாத பகுதிகள் பிடிக்கும். அந்த 10 சதவிகித ஆண்களில் நானும் ஒருவன்.... அப்பாடி இப்படி எதவாவது சொல்லி பூரிக்கட்டையில் இருந்து தப்பிச்சாச்சு ஹீஹீ

      Delete
  2. நல்ல தத்துவங்கள்...அதிலும் கடைசி தத்துவம்...ரொம்ப சரி

    ReplyDelete
    Replies
    1. உண்மையை மறைக்காக்கமல் ஒத்துக் கொள்ள சிலருக்குதான் முடியும் அதில் நீங்களும் ஒருவர். நன்றி

      Delete
  3. சிலநேரம் சில பதிவுகளின் தலைப்புகளைச் சரியாகத்தான் வைக்கிறீர்கள். இது அப்படியான சரியான தலைப்புத்தான். (இதனால்தான் உங்களின் சீரியஸான எழுத்துகள் கூட, காமெடியாகவே பார்க்கப்படுகிறதோ... துக்ளக் சோ மாதிரி?)

    ReplyDelete
    Replies

    1. நான் எப்போதும் சீரியஸாக எழுதுவதே இல்லை காமெடியாக எழுத்தான் முயற்சிக்கிறேன் அதில் மிக சிறியளவுதான் வெற்றி பெற்று இருக்கிறேன். படிப்பவர்கள் சில சமயங்களில் நான் காமெடியாக சொல்லுவதை சீரிய்ஸாக எடுத்து கொள்கிறார்கள் அது படிப்பவர்களின் மனநிலையை பொருத்தும் அறிவு நிலையை பொருத்தும் மாறுபாடுகிறது.

      Delete
  4. அனுபவம் பேசுகின்றதோ சார்?

    ஆணின் மௌனமும் பெண்ணின் மௌனமும் மாறி இருப்பது போல் எனக்கு தோன்றுகின்றது. பெண் கோபமாயிருந்தால் மௌனமாயிருப்பாள் என்பது கேள்விக்குறிதான்! எதிரில் இருப்பவரை திட்டு தீர்க்காமல்மௌனமாயிருந்தால் அதன் பெயர் கோபமா?



    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.