நன்கொடை மிரட்டல்கள்
இணையத்தில் இப்போது
எழுத வருகிறார்களா அல்லது நன்கொடை வசூலிக்க வருகிறார்களா என்று புரியவில்லை. முன்பு
கோயிலில் விழா எடுக்கிறோம் அதற்கு கூழ் ஊத்துகிறோம் அல்லது அந்த பகுதிகளில் பண்டிகைகளுக்கான
விழா எடுக்கிறோம் என்று சொல்லி ஒரு நோட்டையும் தூக்கி வீடு வீடாக நன் கொடை வசூலிக்க
வந்துவிடுவார்கள். இப்போது அதே மாதிரியான செயல்கள் இணையத்திலும் ஆரம்பித்து இருக்கிறார்கள்..
இணையத்தில் தமிழை
வளர்க்கிறோம் சமுகத்தை காப்பாற்றுகிறோம் ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறோம் முதியோர்களுக்கு
உதவுகிறோம் என சொல்லி இந்த குருப் அந்த குருப் என தினமும் ஒன்று ஆரம்பித்து அதில் நம்மையும்
இணைத்துவிடுகிறார்கள் அதன் பின் நமது எழுத்துகளுக்கு
கருத்துகளை சொல்கிறார்கள் அதன் பின் நாங்கள்
விழா எடுக்கிறோம் அதற்கு உங்களிடம் இருந்து அன்பளிப்பை எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள்
தளங்களில் பதிவிடுகிறார்கள். அப்படி பதிவிடுவதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் அதோடு
நின்றுவிடாமல் நமக்கு இமெயில் அனுப்பி அல்லது இன்பாக்ஸில் தகவல் அளித்து தொந்தரவு செய்கிறார்கள்,
இவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் இதுதான் உங்கள் தளங்களில் அறிவிப்பை வெளியிடுங்கள்
அதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்ததை அனுப்புவார்கள் அல்லது பேசாமல் இருப்பார்கள்
அதைவிட்டு விட்டு
தனித்தனியே தொந்தரவு செய்வது சரி அல்ல. இதை நான் எதற்குமெனக்கெட்டு ஒரு பதிவாக போட்டு
சொல்லுகிறேன் என்றால் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் காரணம். ஒருத்தர் எனது
இன்பாக்ஸில் தமிழகத்தில் நாங்கள் ஒரு விழா ஏற்பாடு பண்ணி இருக்கிறோம் அதற்காக நாங்கள்
உங்களிடம் இருந்து அன்பளிப்பை எதிர்பார்கிறோம் என்று தகவல் அனுப்பினார் நான் அதற்கு
என்னால் இயலாது என்று சொல்லிவிட்டேன் உடனே அவர் இனிமேல் நான் உங்கள் தளத்திற்கு வரமாட்டேன்
உங்கள் எழுத்துக்களை படிக்கமாட்டேன் மற்றவர்களிடமும் சொல்லி உங்கள் தளத்திற்கு வரவிடாமல்
செய்வேன் என்றார்.
அதற்கு நான்
பதிலளித்தது இதுதான் தம்பி நான் இங்கு எழுதுவது தமிழை வளர்க்கவோ அல்லது சமுதாயத்தை திருத்தவோ
அல்லது எழுதி புகழடையவோ அல்லது எனது எழுத்துக்கள் வார இதழ்கள் தினசரி இதழ்களில் வந்து
நான் புகழடையவோ எழுதவில்லை நான் எனது பொழுது
போக்கிற்காக மட்டும்தான் எழுதுகிறேன் அதனால் யார் வருகிறார்கள் படிக்கிறார்கள் போகிறார்கள்
என நான் கவலைப்படுவதில்லை. முடிந்தால் என்னிடம் இருந்து பணத்தை எதிர்பார்ப்பதைவிட நீங்கள் பணத்தை
வசூல் செய்து எனக்கு அனுப்பி வையுங்கள் என்றேன் அதன் பின் அவரிடம் இருந்து பேச்சு மூச்சை
காணவில்லை
மேலை நாட்டில்
வசிப்பதால் நாங்கள் இங்கு பணத்தை வேண்டும் அளவிற்கு ப்ரிண்ட் செய்வதில்லை. இங்கு உழைத்தால்தான்
பணம் வரும் யாரும் இங்கு எங்களுக்கு இலவசமாக பணத்தை அள்ளிக் கொடுப்பதில்லை அதுமட்டுமல்லாமல்
உங்களைப் போல யாரையும் ஏமாற்றி சம்பாதிப்பது இங்கு எளிதல்ல. அதனால் யாருக்கு கொடுக்க
வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே
தெரியும். அதனால் இப்படி கேட்டு எனக்கு இமெயிலோ அல்லது இன்பாக்ஸில் தகவலோ அனுப்ப வேண்டாம்.
டிஸ்கி : எனது
தளத்தில் 1000 பதிவுகளுக்கும் மேல் வந்துள்ளது. அதனால் இதை கொண்டாடும் விதமாக நான்
ஒரு விழா எடுக்கவிரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் தொலை தூர நாடுகளில் வசிப்பதால் உங்களால்
இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்பதால் நான் என் மனைவியையும் குழந்தையையும் மட்டும் அழைத்து இருக்கிறேன். அதனால்
உங்களால் முடிந்த பணத்தை அனுப்பி உதவிகளை செய்யுங்கள். பணம் அனுப்பி வைப்பவர்களுக்கு
ஒரு அழகிய சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்
டாட்
அன்புடன்
மதுரைத்தமிழன்

அதானே...! யார்கிட்டே...?
ReplyDeleteஞாயிற்றுக் கிழமைகளில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக பல காரணங்கள் சொல்லி நன்கொடைகள் கேட்டு வருகிறார்கள் யார் உண்மை சொல்கிறார்கள் என்று தெரிவதில்லை சில சமயங்களில் நாம் திருப்பி அனுப்புபவர் உண்மையானவராகவும் சாமார்த்தியமாக பல ஆதாரங்களைக் காட்டி பணம் வாங்கிக் கொண்டு செல்பவர் ஏமாற்றுபவராகவும் இருப்பது உண்டு
ReplyDeleteவணக்கம் மதுரையே,
ReplyDeleteபணம் தானே அனுப்பியது கிடைத்ததா?
நல்ல பதிவு,
வாழ்த்துக்கள்,
நன்றி.
// இங்கும் உழைத்தால்தான் பணம் வரும்// சத்தியமான வார்த்தை! பணம் பறிக்கும் ஆசாமிகள் நமது தளத்திற்கு வராமல் இருப்பதே நல்லதுதான்!
ReplyDeleteஇந்தத் தொந்தரவு நிறைய இருக்கு...
ReplyDeleteடிஸ்கிதான் கலக்கல் போங்க...
நீங்க மூன்று பேர் மட்டும் participate பண்ணுவது ஒரு விழா அதுக்கு நாங்க காசு தரணும்.
ReplyDeleteஅப்புறம் உங்களைப் பார்த்து inspire ஆகி இன்னொருத்தர் நாங்க ரெண்டு பேர் விழா கொண்டாடறோம் அப்படீம்பாங்க .
வேறே ஒருத்தர் கழுதை தேஞ்சு கட்டெறும்பான மாதிரி நான் ஒருத்தரே விழா கொண்டாடறேன் காசு கொண்டா அப்படீம்பாங்க .
ம்ஹூம் .........சரியில்லை