Thursday, March 19, 2015



இதை தவிர கடவுளிடம் எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் கேட்கலாம்!

அரசியல் தலைவர்களை மட்டும் எவ்வளவு நாள் கலாய்த்து கொண்டிருப்பது அதனால் ஒரு மாறுதலுக்காக கடவுளையும் கலாய்ப்பமோ என்று நினைத்ததின் விளைவே இந்த பதிவு..



இளைஞர்கள் கடவுளிடம் கேட்க கூடாதது எது தெரியுமா?
கடவுளே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கனும் என்று மட்டும் கேட்க கூடாது ஏனா அதை மட்டும் கடவுளால் செய்து தரவே முடியாது


கடவுள் என் கனவில் வந்து மதுரைத்தமிழா உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேளு நான் உனக்கு செய்து தருகிறேன் என்றார்
அதற்கு நான் சொன்னேன் எனக்கு வேண்டியதை உம்மால் செய்தே தரமுடியாது என்று சவால் விட்டேன்
அதற்கு அவர் நான் கடவுள் என்னால் எதுவும் செய்ய முடியும் மதுரைத்தமிழா என்றார்.
நான் உடனே என் பேஸ்புக்  ஸ்டேடஸுக்க்கு அதிக லைக்ஸ் விழ வைக்கணும் ஆனா ஒரு கண்டிசன் அதற்காக என்னை பெண்ணாக மாற்றக் கூடாது என்றேன்.
அதை கேட்ட அவர் ஸாரி நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டார்


பக்தன் :கடவுளே எனக்கு  டென்ஷனை தராதே பிரச்சனைகளை எனக்கு தினம்தினம் தராதே. என்னை பைத்தியமாக ஆக்கி விடாதே, நான் நிம்மதியாக வாழ ஆசிர்வதிப்பா?
கடவுள் : பக்தா சும்மா இப்படி வழவழா கொழ கொழான்னு பேசிகிட்டு இருக்காதே ஷார்ட்ட் டிவிட்ட்டரில் போடும் தகவல் போல ஷார்ட்டா எனக்கு டைவோர்ஸ் வேணும் என்று கேளு... நான் அதற்கு ஏற்பாடு பண்ணுறேன்
பக்தன் :ஙே.....
( அந்த பக்தன் மதுரைத்தமிழன் அல்ல என்று உறுதியாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்)

வசதியுள்ளவன் இறைவனிடம் கேட்பது
பசிக்கும் வரம் கொடு என்று
ஏழைகள் இறைவனிடம் கேட்பது
பசிக்கா வரம் கொடு என்று

பணக்காரவிட்டு குழந்தைகள்
அம்மா எனக்கு பசிக்கவில்லை பசிக்கவில்லை என்று கதறுவதும்
ஏழைவிட்டு குழந்தைகள்
அம்மா எனக்கு  பசிக்கிறது பசிக்கிறது என்று கதறுவதும்
இறைவனின் விளையாட்டுகளில் ஒன்றுதான்

எனக்கு எல்லாம் பிரச்சனைகள் வந்தால் நான் கவலைப்பட்டு கொண்டிருக்க மாட்டேன் அந்த பிரச்சனையை கடவுளிடம் தூக்கி ஏறிந்து அதை தீர்ப்பது உன் வேலை என்று சொல்லிவிட்டு நான் பாட்டுல பதிவு எழுத வந்துடுவேன் பாவம் கடவுள்தான் அதை தீர்க்க கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்.



அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. மதுரைத் தமிழன் என்றால் கடவுள் கூட கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. பாவம் கடவுள்...அவர் குறையை கேட்க ஒரு நாதியில்லை.....

    ReplyDelete
  3. பக்தனின் கடைசிக்கேள்விக்கு இறைவனின் பதில் சூப்பர்.. ரசிக்க வைத்தது...
    அருமை.

    ReplyDelete
  4. கடவுள் : என்ன தமிழா! உனக்கு நான் எதுக்கு மூளையக் கொடுத்தேன்?! கலாய்க்கும், நையாண்டி, அலப்பறை பண்ணும் அறிவையும் எதுக்குக் கொடுத்தேன்?! பூலோகத்தை நீயே மேச்சுக் கட்டுவேன்னுதானே! இப்ப இப்படி உன் பிரச்சனய நான் தான் தீக்கணும்னு சொன்னா நான் எங்க போவேன்.....நீ பாட்டுக்கு பதிவு எழுதறேன்னு போனா எப்படி?!! நான் மட்டும் பதிவு எழுத வேணாவா....சரி, என் மூளைய நீயே எடுத்துக்க...இந்தா...அப்பதான் தெரியும் என் கஷ்டம்.....என் பேருல ஒரு எஃப்பி அக்கவுன்டோ/ ப்ளாகோ/ட்விட்டரோ ஏதோ ஒண்ணு ஓபன் பண்ணிக்க வந்து குவியர பிரச்சனைங்கள எல்லாம் நீயே தீர்த்துவை....நான் எஸ்கேப்....ஹாலிடே...ஹைபர்னேஷன்....

    கீதா

    ReplyDelete
  5. நல்ல கடவுள்.. நல்ல பக்தன்..

    ReplyDelete
  6. கடவுள்: அதென்ன கீழ ஒரு லிங்க் கொடுத்துருக்க....அதப் போய்ப் பாத்தா ...அடக் கடவுளே ! ஸாரி நான் தான் கடவுள்...இல்ல..மறந்துட்டேன் அந்தப் பதிவ பாத்தவுடனே....அந்தப் ப்ரேயர் என்னை வந்து சேரல...ஸ்பாமுக்குப் போயிருக்கும்..ஏன்னா.....ஹும் நானும் உன் சைட்தானே இதுவுமா உனக்குப் புரியல!! எனக்கு வரக் கூட்டத்தை விட என் வைஃப்க்கு வரக் கூட்டம்தான் அதிகம் ...அதுவும் பெண்கள் கூட்டம்....இது தெரியாதா உனக்கு...

    கீதா

    (தமிழா...நீ என்று அதில் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். அது கடவுள் எழுதியதால்...ஹஹஹ்)

    ReplyDelete
  7. மதுரைத்தமிழன் வடிவேலுக்கு அண்ணனோ?

    --
    Jayakumar

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.