பீகார் மாநில
மாணவர்களை மட்டும் குறிவைத்த ஊடகங்களின் நோக்கம் என்ன?
பீகார் மாநில
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் காப்பி
அடிக்க ஜன்னல் மீது ஏறி ‘பிட்’ காகிதம் கொடுத்த பெற்றோர் என்று ஊடகங்கள் போட்டோ மற்றும்
வீடியோ எடுத்து ஊடகங்களில் பரப்பி அந்த மாநிலத்தை மட்டும் உலக அளவில் இழிவு படுத்த
யாரோ சிலரால் அமுல்படுத்தபட்ட திட்டமாகவே இந்த நிகழ்வு இருக்கின்றது.
எந்த மாநிலத்தில்
அல்லது நாடுகளில்தான் மாணவர்கள் பிட் அடிக்காமல் எழுதுகிறார்கள் எல்லா நாடுகளிலும்
இது இன்று வரை இது நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் பிகார் மாநிலத்தில்
மட்டும் அதுவும் ஏழை பிள்ளைகள் படிக்கும் பள்ளிக் கூடத்தில் மட்டும் இப்படி நடக்கிறது
என்று வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார்கள்.
இன்று தமிழகத்திலே
நூற்றுக்கு நூறு ரிசல்ட் காண்பிக்கும் தனியார் பள்ளிக் கூடங்களில் பரிட்சை சமயங்களில்
என்ன நடக்கிறது என்பது பலரும் அறிந்த உண்மைதான் .
இப்படி ரிசல்ட்
காண்பிக்கும் பள்ளிக் கூடங்களில் பணத்தை அள்ளிக் கொட்டி படிக்க வைக்க பெற்றோர்களிடையே
அடிதடி. அந்த பள்ளிக் கூடங்களோ 100 சதவிகித ரிசல்டை காண்பிக்க கல்வி அதிகாரிகளிடமும்
பரக்கும் படைகளிடமும் பணத்தை அள்ளிக் கொட்டியும், பள்ளியின் வாசலை அடைத்து வைத்து
உள்ளே நடத்தும் ஜகதாளங்கள்தான் எத்தனை எத்தனை. அத்தனை ஜகதாளங்களும் இப்படிதான் போட்டோக்களாகவும்
வீடியோக்களாகவும் இப்படிதான் வெளியே வருகின்றனவா என்ன?,
அப்படி இருக்கையில்
இந்த பீகார் பள்ளியை மட்டும் குறிவைப்பது ஏன், இந்த பள்ளிக் கூட நிகழ்ச்சி உள்ளுரில்
மட்டும் அல்ல மேலை நாட்டு செய்தி சேனல்களிலும்
பல தடவை ஒலிபரப்ப பட்டன. பல சமுகதளங்களில் இதைப் பற்றி பலரும் எழுதி வந்தனர்
அதை படித்த பலர் அதிலும் வெளிநாட்டில் வசிக்கும் பலர் கேவலமான செயல் இங்கு தலை நிமிர்ந்து பேச முடியவில்லை என்று சொல்கிறார்கள். இப்படி சொல்லும்
பலர் எவ்வளவு யோக்கியமானவர்கள் என்று அவர்களுக்கே தெரியும்
படிக்காதவர்கள்
இப்படி தேர்வு எழுதுகிறார்கள். கொஞ்சம் அதிகம்
வசதி படித்த படித்தவர்கள் டெக்னாலிஜியை உபயோகித்து ஏமாற்றுகிறார்கள். ஏன்
நமது தலைவர்களும் தங்களுக்கான தேர்தல் பரிட்சையில் இலவசங்களை அள்ளிக் கொடுத்தும்
, கள்ள ஒட்டுக்களை போட்டும்தான் பாஸ் ஆகிறார்கள் உதாரணத்திற்கு முந்தையை காங்கிரஸ்
ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர் எப்படி தமிழகத்தில் வெற்றி பெற்றார் என்பது உலகம்
முழுவதும் அறிந்த விசயம்தானே. அப்ப அதற்கு எல்லாம் கேவலம் என்று சொல்லாதவர்கள்
வருந்தாதவர்கள் இப்போது மட்டும் குதிப்பது ஏன்?
சில வருடங்களுக்கு
முன்பு டாக்டர்களுக்கான AIIMS test ல் டெக்னாலாஜியை உபயோகித்து எப்படி சீட் பண்ணினார்கள்
அப்போது மட்டும் ஊடகங்கள் இந்த அளவு அதிகம் பேசவில்லையே அது ஏன்?
எப்படி அவர்கள் டெக்னாலஜியை உபயோகித்து காப்பி அடித்தார்கள் என்பதை இங்கே
Cheats use bluetooth, cell cameras to crack AIIMS test
க்ளிக் செய்து ஆங்கிலத்தில் இருப்பதை படித்து கொள்ளுங்கள். டாகடர்கள் அப்படி என்றால்
வக்கில்கள் அதைவிட மோசம் இன்னும் ஒரு நிகழ்வு 3,000 Indian Law Students Riot Over New Ban On Cheating
|
||
Judges Caught Cheating in Law Exam
in India
இதை விட கேவலம் உலகில் வேறு ஏதும் இருக்க
முடியாது
|
||
இப்படி மாணவர்கள்
குற்ற உணர்ச்சிகள் இல்லாமல் காப்பி அடித்து எழுதுகிறார்கள் இப்படி இவர்களுக்கு குற்ற
உணர்ச்சி இல்லாத காரணம் அதனால் வரும் மார்க்குகள் கிரேடுகளால் கிடைக்கும் மகிழ்ச்சி
அவர்களின் குற்ற உணர்ச்சிகளை மறக்கடித்து விடுகின்றன. இப்படி படித்து பாஸாகி வருபவர்கள்
வேலை பெறுவதிலும் குறுக்கு வழியை கடைபிடித்து நல்ல பொறுப்பான வேலையில் அமரும் போதுதான்
பிரச்சனைகள் வருகின்றன. அதனால் பல தவறுகள் ஏர்படுகின்றன. உதாரணமாக காப்பி அடித்து
பாஸாகும் டாக்டர் நோயாளிக்கு அவசர சிகிச்சையின் போது எப்படி செயல்பட வேண்டும் என்று
தெரியாமல் முழிக்கும் போது அங்கு உயிர் பறிக்கப்படுகிறது. அது போல நீதிபதி காப்பி
அடித்து பதவிக்கு வரும் போது பிரச்சனைகளை பகுத்தாராயும் தனமை இல்லாததால் தவறான தீர்ப்பு
அளிக்கப்பட்டு நிராதிபதி குற்றவாளியாகவும் குற்றவாளி நிராதிபதியாகவும் ஆக்கபடும்
சம்பவம் நடை பெறுகிறது அது போல காப்பி அடித்து பாஸாகும் சிவில் எஞ்சினியர் கட்டும்
விமான நிலைய கூரைகள் இடிந்து விழும் சம்பவமும் நடை பெறுகிறது/
|
||
Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சரியாச் சொன்னிங்க அண்ணேன்......பணம் பிட்டு வரை பாயும்
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை.....(அட! நீங்க சட்டத் தில்லுமுல்லு பத்திச் சொன்னதும்......)
ReplyDeleteஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படவேண்டும்....அதுவும் கல்வித் துறையில் ...அதான் படிச்சு முடிச்சு வேலைக்கு வந்தப்புறம் நீங்கள் சொல்றா மாதிரிதானே நடக்குது...சென்னை ஏர்போர்ட்ல சமீபத்துல கூரை விழுந்ததும், இப்ப கண்ணாடிக் கதவு உடைஞ்சதும் கூட இப்படித்தானோ...மானம் போகுது...
நெத்தியடி பதிவு.
ReplyDeleteவேறு ஒரு கோணத்தில் சிந்தத்து எழுதப்பட்ட பதிவு . பல உண்மைகளை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.
ReplyDeleteமதிப்பெண்களுக்கு தரும்முக்கியத்துவம்தான் இவற்றிற்கு காரணம். இன்றுகூட தமிழ்நாட்டிலும் வினாத்தாளை போட்டோ எடுத்தனுப்பிய விவகாரம் முன் பக்க செய்தியாய் கண்ணில் பட்டது.
ரிசல்ட் கொடுக்கவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் மூலம் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவது இது போன்ற செயல்களை ஊக்குவிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பெற்றோர் ஆசிரியர்,அரசு அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்
அருமையான பதிவு.
ReplyDelete