தீர்ப்புக்கள்
திருத்தபட்டு கொண்டிருக்கின்றன.. முடிவு மிக விரைவில்
ஜெயலலிதாவின்
மீதான சொத்து குவிப்பு மறு விசாரணை பெங்களுரில் நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்து
முடிந்துள்ளது. தீர்ப்புக்கான தேதியை அறிவிக்காமல் விசாரணை முடிந்துள்ளது. மிக விரைவில்
தீர்ப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பு இப்படியும் இருக்கலாம்
என்று கணித்து வெளியிடப்படுகிறது.
முந்தைய விசாரணையில்
நீதிபதி வாதத்தின் அடிப்படையில் வழக்கை விசாரித்து ஜெயலலிததா குற்றவாளி என்று தீர்ப்பு
அளித்து இருக்கிறார். ஆனால் எனது மறுவிசாரணையில் ஜெட்லி
ஜெயலலிதா சந்திபிற்கு பின் ஜெயலலிதா மத்திய அரசின் நில கையகப்படுத்தும் சட்டத்திற்கு
ஆதரவாக வாக்கு அளித்தை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா அவர்களின் மீது சாட்டபட்டதற்கு
எந்த வித போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்.
போனால் போகுதென்று மிக சிறிய அபதாரத்தை விதிக்கிறேன்.
அன்புடன்,
மதுரைத்தமிழன்
அந்த சிறிய அபராதம் நீதி மன்றத்துக்கும் - நீதி பாதிக்கும் தானே ....மாண்புமிகு அம்மா அவர்களின் நேரத்தை 20 வருடமாக விரயம் செய்ததற்காக இந்த அபராதம் கொடுத்தே ஆகா வேண்டும். அது சரி .. நம்ம சுனா .. சானா என்ன சொல்ல போறாரு?
ReplyDeleteசுனா சானா அய்யோ பாவம் போனாப் போகுது இந்த தடவை விட்டுங்க என்று நீதிபதிகிட்ட சொன்னேன் அதுனாலதான் அவங்க ஜெயாவை விடுதலை பண்ணாங்க என்று சொல்லிகிட்டு திரிவார்
Deleteஹஹஹ...இந்தச் சிரிப்பு நாட்டு நடப்பைப் பார்த்து ஏளனச் சிரிப்பு....என்னவோ போங்க...
ReplyDeleteசிரிக்கவா செய்யுறீங்க உங்களை அடுத்த குறும்படத்தில் அரசியல் தலைவராக போட்டுவிடுபோகிறார்கள் ஜாக்கிரதை
Deleteமிக சிறிய அபராதமாக 1 ருபாய் விதிக்கிறேன். இதை இன்னும் 18 வருடங்களுக்குள் கட்டி முடிக்க கடுமையாக எச்சரிக்கிறேன்.- இப்படி இருந்தால் இன்னும் சிறப்பு
ReplyDeleteவாவ் மிக அருமையான தீர்ப்பு நான் ஒரு பதிவில் சொன்னதை மிக அழகாக ஒரே வரியில் சொல்லீட்டீங்க சபாஷ்
Deleteதிருத்தி எழுதிய தீர்ப்புகள்...காத்திருப்போம்.... நீதியின் நியதியைப் பார்ப்போம்.
ReplyDeleteத.ம. 2.
காத்திருக்கும் வரை இப்படி கலாய்த்து எழுதி மகிழ்வோம்
DeleteModiji is honest politician. He will not influence judiciary. Don't jump the gun
ReplyDeleteஇந்த காலத்தில் எந்த அரசியல் வாதியும் ஹானஸ்டாக இருப்பது கிடையாது. அதற்கு மோடியும் விதிவிலக்கு கிடையாது
DeleteWhat is your proof? Looks like you simply hate him
DeleteWhat is the proof that Modi is not honest?
ReplyDelete