உங்கள் ஆதரவோடு
2 மில்லியன் ஹிட்ஸ்க்கும் மேலாக பெற்ற வலைத்தளம்
எனது வலைத்தளத்திற்கு
2 மில்லியன் ஹிட்ஸ்க்கும் மேல் கொடுத்து என் தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல
இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வளர்ச்சி உங்களின்
ஆதரவு இல்லாமல் எனக்கு கிடைத்திருக்காது. நண்பர்களே மற்றும் சைலண்ட் ரீடர்களே நான்
எனது 1 மில்லியன் ஹிட் பதிவில்
http://avargal-unmaigal.blogspot.com/2013/11/1-one-million-hits-tamil-blogspot.html சொன்னதை தான் இங்கே மீண்டும் நினைவு கூறுகிறேன்
நான் 2 மில்லியன்
ஹிட்டை பெற்றுவிட்டேன் என்று சொல்லி எனக்கு தெரியப்படுத்தி வாழ்த்தியவர் முரளிதரன். எல்லா நண்பர்களும் சைலண்ட் ரீடர்களும் வருகிறார்கள் படிக்கிறார்கள்
ஆதரவு தருகிறார்கள் என்ற போதிலும் இந்த முரளிதரன் அவர்கள் எனது எண்ணத்தையும்
வலைத்தளங்களில் வரும் என் பதிவுகளையும் முழுமையாக புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு தருபவர்.
எனது ஆரம்ப காலத்தில்
என் பதிவுகளை படித்து வந்த இவர் ஒரு நாள் என்மெயிலுக்கு ஒரு செய்தியை அனுப்பி என்னை
சந்தோஷப்பட வைத்தவர் அந்த மெயில் சார் நீங்கள் உங்கள் தளத்தில் கிராபிக்ஸ் செய்து இட்ட
தகவல்கள் சென்னையில் உள்ள பள்ளியின் உட்சுவரில் பிரிண்ட் செய்து போட்டு இருக்கிறார்கள்
என்ற தகவலை கொடுத்தார்
இவர் மட்டுமல்ல
இவரைப் போல உள்ள பலரும் எனக்கு ஆதரவு தந்து என்னை சந்தோஷப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதில் சில உங்கள் பார்வைக்கு
மதுரையை சார்ந்த
பேராசிரியர் சாகம்பரி அவர் தளத்தில் என்னை
பற்றி சொல்லியது இதுதான்
காரச்சாரமான
விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள்
உண்மைகள் மதுரைத் தமிழன் அவர்களுக்கு, என்று
சொல்லி ஒரு விருது கொடுத்தார்
அடுத்தாக மனஅலைகள் வலைத்தளத்தை நடத்திவரும் பழனி. கந்தசாமி
என்பவர் வலைச்சரத்தில் என் தளத்தைப் பற்றி சொன்ன வரிகள்
இந்த தளத்தை நடத்துபவர் தன்னை அநாமதேயமாக வைத்துள்ளார்.
காரணம் இவர் பல உண்மைகளைச் சொல்கிறார். இது ஒரு சமூக விழிப்புணர்வுத் தளம். இந்தத்
தளத்தை பலரும் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது இதன் தமிழ்மணம் ரேங்கில் இருந்து தெரிகிறது.
சமகால சமுதாயப்
பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு மிகுந்த மன வலிமை வேண்டும். அத்தகைய மன வலிமை இவருக்கு
இருப்பது கண்டு பாராட்டுகிறேன்.
கில்லர்ஜி என்பவர் அவர்கள் உண்மைகள் பற்றி வலைச்சரத்தில் இப்படி சொல்லி இருக்கிறார்
சைக்கிள் கேப்
கிடைச்சா, சைக்கோவைவும் ஓட்டு இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. நடைவண்டி ஓட்டுனவங்களை பார்த்து
இருப்பீங்க, சைக்கிள் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, பைக் ஓட்டுறவங்களை பார்த்து
இருப்பீங்க, ஆட்டோ ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, கார் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க,
லாரி ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, பஸ் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ரயில்
ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ஃபிளைட் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, கப்பல்
ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ஏன் ? ராக்கெட் ஓட்டுறவங்களை கூட பார்த்து இருப்பீங்க,
ஆனா ? அரசியல்வாதிகளை ஓட்டுறவரை பார்த்து இருக்கீங்களா ? அது இவர்தான் ஜாலியான ஆசாமி
எந்த இடத்தில எது கிடைச்சாலும் ஓட்டிருவாரு அதுக்கு சக்கரம் தேவையில்லை, ஸ்டேரிங் தேவையில்லை
ஒரு
புள்ளி கிடைச்சாலும் அதுல ஒரு பல்லி வரைஞ்சு சகுனம் பார்த்து சங்கு ஊதிடுவாரு.. அப்படியொரு
பதிவாளர் அமெரிக்காவுல இருந்துகிட்டு ஒபாமாவுக்கே ஆலோசனை கொடுப்பாரு போல...
பாண்டியன் அவர்கள் அவர்கள் உண்மைகள் பற்றி சொன்னது :
அதிரடியான அரசியல்
பதிவுகள், அடிதடினா பூரிக்கட்டை, கருத்துரை இடுவதில் தனி ஸ்டைல் இப்படி அனைத்திலும்
தனித்து இயங்கும் அவர்கள் உண்மைகள் வலைப்பக்க மதுரைத்தமிழன் சொல்லாற்றல் அனைவரையும்
சிந்திக்கவும் பல நேரம் சிரிக்கவும் வைக்கும்
எந்தவொரு எதிர்பார்ப்பும்
இன்றி இப்படி பலரும் இந்த தளத்தினை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை சொல்லப்
போனால் இவர்களில் யாரும் என்னைப் பார்த்தது இல்லை என் கூடப் பேசியதும் இல்லை ஆனாலும்
இவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் பதிவுகளை படித்து தங்கள் ஆதரவுகளை தந்து
கொண்டிருக்கிறார்கள் அப்படிபட்ட இவர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் எனது சைலண்ட் ரீடர்களுக்கும்
எனது மனம் மார்ந்த நன்றியினை சொல்லிக் கொள்கிறேன்
2010 Jun ல் ஆரம்பித்த
இந்த தளம் நவம்பர் 2013 வரை 1 மில்லியன் ஹிட்டையும் டிசம்பர் 2013 ல் இருந்து பிப்ரவரி 2015 வரை மேலும் 1 மில்லியன் ஹிட்டை பெற்று
வளர்ந்து கொண்டிருக்கிறது, இப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நான் எண்ணிப்பார்த்தது
கூட கிடையாது, இந்த தளம் நான் ஆரம்பிக்கப்படட்டதன் நோக்கம் எனது பொழுது போக்கிற்காகதான்
ஆனால் அது மற்றவர்களைன் பொழுது போக்கிற்க்காகவும் உதவுகிறது என்பதில் எனக்கு மிக சந்தோஷமே
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்கள் வேகத்தைப் பார்த்தால் ஒரு கோடி என்பது ரொம்ப பக்கத்தில் தான் போல. கலக்குங்க.
ReplyDeleteநம்ம தலைவர்கள் காமெடி பண்ணுகிறவரை நீங்கள் சொல்வதும் நடக்கும்...
DeleteCongrats...
ReplyDeleteவாழ்த்துக்கள் மதுரை தமிழா !
ReplyDeleteநன்றி விமல்
Deleteஎவ்ளோ நாள் கழிச்சு உங்க போட்டோவை பார்க்கிறேன்!!!! ரொம்ப சந்தோசம் சகா:)) ரெண்டு மில்லியன் எல்லாம் நம்ம தலைக்கு சப்ப மேட்டர் ல!! சீக்கிரம் கோடியை தொட வாழ்த்துகள் சகா!!
ReplyDeleteநான் கோடியை தொட உங்களின் ஒத்துழைப்பு தேவை அதாவது உங்கள் மாணவ்ரகள் அனைவரும் கண்டிப்பாக இந்த தளத்தை தொடரஸ் செய்து தினசரி இங்கு வந்து ஹிட் கொட்டுக்க சொல்லுங்கள் இல்லைன்னா கோடியை தொட முடியாது
Deletevaathukkal
ReplyDeleteநன்றி செந்தில்
Deleteவாழ்த்துகள் நண்பரே. ஆனால், உங்கள் தளம் நீங்கள் சொல்லிக் கொள்வது போல வெறும் பொழுது போக்கிற்கானது என்று நான் நினைக்கவிலலை. மற்றவர் நினைத்தாலும் வெளியில் சொல்லத் தயங்கும் உண்மைகளை, உடைத்துச் சொல்லும் துணிவும், அதை நகைச்சுவையும் அழகான வடிவமைப்புடனும் சொல்வதே சரியான காரணம். எழுத்துகள் சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றத்தைக் கண்ணால் காண முடியாது, மின்சாரத்தைப் பார்க்க முடியுமா என்ன? ஆனால் அதன் வீச்சு எத்தனை வலியைானது? அது போலத்தான் உங்கள் கருத்துகளும். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கோடிகளைத் தாண்டி வளர்க.
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி முத்துநிலவன்...இப்படி நீங்கள் பாராட்டுவதால் நான் இன்னும் அதிரடியாக ஏதாவது எழுதி இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவர்களில் ஒருவராகி போய்விடப் போகிறேன் அதன் பின் உங்களை எல்லாம் வந்து பாரக்க முடியாது போலிருக்கிறது (மைண்ட் வாய்ஸ் டேய் மதுரைத்தமிழா முழிச்சுக்கோ இந்த பாராட்டுகெல்லாம் மயங்கிவிடாதே....அப்புறம் உனக்கு வேட்டுதான்)
Deleteமீண்டும் வாழ்த்துக்கள் பாஸ் ,பல்சுவை அதிரடி தொடரட்டும்.
ReplyDeleteமிகவும் நன்றி முரளி...
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteவலையுலக சித்தரின் வாழ்த்துக்கள் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகவும் நன்றி தன்பாலன்
Deleteபல துறைகளில் உங்களது ஈடுபாடு, அனைத்தையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம், நட்பினை அரவணைத்துச் செல்லும் உங்களது மனப்போக்கு, அனைத்திற்கும் மேலான சமூக சிந்தனையுடனான எழுத்தார்வம் உங்களை இந்நிலைக்கு உயர்த்தியுள்ளமை அறிந்து மகிழ்கின்றோம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களை போல எழுத்தார்வும் உள்ளவர்களின் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் உற்சாகம் கொடுக்கின்றன . வாழ்த்திய உங்கள் உள்ளத்திற்கு மன்மார்ந்த நன்றிகள்
Deleteதமிழ்நாட்டிலே வாழ்கின்ற பலரைக் காட்டிலும் தமிழக அரசியலைத் தெளிவாக உணர்ந்து கிண்டலும் கேலியாகவும் நையாண்டி செய்யும் தங்கள் விமர்சனங்களை ஒன்று விடாமல் படிப்பவன் நான் என்தை
ReplyDeleteபெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன் முதுமையின் காரணமாக மறுமொழி இட இயலவில்லை! தாங்கள் நாளும் வளர நல் வாழ்த்துகள்!
நீங்கள் கூட என் பதிவுகளை படிக்கின்றீர்கள் என்றால் அதைவிட எனக்கு சந்தோஷம் வேற என்ன இருக்க முடியும்.. உங்களின் இந்த கருத்தே மிகப் பெரிய அவார்டாக எனக்கு இருக்கிறது நன்றி ஐயா. உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்
Deleteவீட்டில் பூரிக்கட்டைக்கு பயந்தாலும் வலையில் நீங்க தைரியசாலி என்பதை நாங்கள் அறிவோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவீட்டில் எலி வெளியில் புலி என்று நக்கல் பண்ணுறீங்களா ஹும்ம்ம்ம்ம்
Deleteவாழ்த்துக்கள் சர்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி அன்பரசன்
Deleteவாழ்த்துக்கள் தமிழா ! இந்த பின்னூட்டத்தை நான் ஏற்கனவே போட்டேன், என்னோ தெரியவில்லை இங்கே வரவில்லை.
ReplyDeleteதாம் அடைந்த இந்த இலக்கு நம் அனைவரையும் ஊக்கபடுத்தும் என்பதில் ஐயமே இல்லை. இவ்வளவு பேர் தமிழ் பதிவுகள் படிக்கின்றனர் என்று தெரிந்து கொள்வதில் தான் என்ன உற்சாகம். தாம் மென் மேலும் பல கோடியை அடையுமாறு .. இங்கே தெருகோடியில் இருந்து சொல்லிகொள்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
ஹாலிவுட்டில் மறைந்துகிடந்த வைரமே உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல....
Deleteநகைச்சுவை இழையில் கருத்துக்களைக் கோர்ப்பது ஒரு வரம் .
ReplyDeleteஉங்களுக்கு அது வாய்த்திருக்கிறது!
இன்னும் பலரையும் அது சென்றடைய வாழ்த்துகிறேன்.
நன்றி அய்யா!
த ம கூடுதல் 1
எமது வாழ்த்துகளையும் சேர்த்துக்கொ(ல்)ளவும் தமிழா...
ReplyDeleteகில்லர்ஜி
தமிழ் மணம் நவரத்தினம்
நண்பரே எனது பெயரில் கொடுத்த இணைப்பு திறக்கவில்லை ஆனால் மேலே கொடுத்த ஐயா பழனி கந்தசாமி அவர்களின் பதிவில் எனது வலைச்சர பதிவு வருகிறது முடிந்தால் தவறை சரி செய்யவும் - கில்லர்ஜி
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடருங்கள்,
தொடர்கிறேன்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.
ReplyDeleteமேலும் பல ஹிட்ஸ் பெற வாழ்த்துகள்.