Wednesday, March 11, 2015



avargal unmaigal
இந்த தலைவர் லூசு இல்லை ஆனா லூசாட்டம்தான் பேசுவார்

விஜயகாந்த் சரக்கு அடித்தால்தான் உளறுவார் என்று கிண்டல் பண்ணாதவர்கள் இல்லை ஆனால் இந்த பாஜக தலைவரோ சரக்கு அடிக்காமலே உளறுவார். இவரது பேச்சை கேட்டால் உண்மையிலே இவர் லூசா அல்லது லூசாட்டம் இப்படிதான் பேசுவாரா என்பதே பலருக்கும் புரியாத புதிர்.

அவர் வேறு யாருமல்ல மதிப்பிற்குரிய பாஜக தேசிய செயலார் எஸ்.ராஜா அவர்கள்தான். அவர்  பேசியதை சொல்லியதை இங்கே நான் பதிகிறேன் அதை பார்த்துவிட்ட்டு நீங்கள் ஒரு முடிவிற்கு வாருங்கள்.


பா.ஜ.,- - தி.மு.க., கூட்டணி இல்லை:சொல்கிறார் எச்.ராஜா
''தி.மு.க., ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி. “ஊழல் கட்சியான தி.மு.க.,வுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை,” என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சொல்லுறதை தெளிவாக சொல்லவேண்டும் ராசா சார் அதாவது ஊழலில் ஈடுபட்ட கட்சிகள் அது அதிமுகாவாக இருந்தாலும் சரி திமுகாவாக இருந்தாலும் நாங்கள் சேரமாட்டோம் என்று சொல்ல வேண்டாமா ராசா


மக்களே இந்த வீடியோ க்ளிப்பை பார்த்து விட்டு உங்களுக்கு சிரிப்பு வரலைன்னா.. நிச்சயம் நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டியதுதா, தயவு செய்து இரவு நேரங்களில் யாரும் இதை கண்டிப்பாக தனியாக பார்க்க வேண்டாம்,



கண்ணியமான முறையில் பேசுவது எப்படி என்பதை பாஜக தலைவர்களிடம் இருந்துதான் நாம் கற்க வேண்டும். கண்ணியாமான முறையில் பேசுவது என்பதை மரியாதை மிகு திரு ராசா அவர்கள் இங்கு பேசிக் காண்பிக்கிறார்,



புதிய தலைமுறை விவாதங்களில் இனி பங்கேற்பதில்லை- தமிழக பாஜக முடிவு

மேலே உள்ள வீடியோவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை தமிழிசை அறிவிப்பு

டிஸ்கி : இந்த வருஷம் விஜய் டிவியின் சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான அவார்டை ராசாவிற்கு கொடுக்காம சந்தானம் அல்லது சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தால் தமிழகம் கொந்தளித்து போயிடும் என்பதை விஜய்டிவி நிறுவனதரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.


அன்புடன்
மதுரைதமிழன்
11 Mar 2015

6 comments:

  1. ஓ... இவர் தான் அவரா... எங்கேயோ எப்போதோ இந்த ஆசாமி பேசுவதை கேட்டு... என்ன இவர் இவ்வளவு கீழ்தரமா பேசுறாரேன்னு யோசித்தேன் ... நீங்க சரியா சொன்னீங்க..எது என்னமோ ...நாடு உருப்பட்ட மாதிரி தான்... இன்னொரு விஷயம் .. இன்னாது விஜயகாந்த் தண்ணியடிச்சா உளருவாரா? சொல்லவே இல்லை !

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்த் வீட்டு அம்மாவிற்கு குழாயில் தண்ணி அடிச்சு கொடுக்கும் போது புலம்புவாருங்க அதைதாம் நான் உளருவாறு என்று சொன்னேன் ஹீஹீ

      Delete
  2. அவர் அப்படி பேசினதால் தானே உங்களுக்கு ஒரு அழகான பதிவு கிடைத்தது!!ஆனாலும் அவர் அப்படியெல்லாம் பேசிருக்ககூடாது....


    மலர்

    ReplyDelete
    Replies
    1. தமிழக பாஜகவில் என்னை பொறுத்தவரை பொன்.இராதகிருஷ்ணன் மட்டும் மதிப்பிற்குரியவாராக என் கண்ணிற்கு தெரிகிறார் அதற்கு அடுத்து வானதி மற்றவர்கள் எல்லாம் பாஜக பேரை கெடுக்கவே இருக்கிறார்கள்

      Delete
  3. https://www.youtube.com/watch?v=Qj5oJxPUX08

    இவன் ஒரு லூசு கூமுட்டை.

    இவன் பேட்டி இன்னும் நாலு பார்த்தால் மோடி எனக்கும் பிடிக்காத அரசியல்வாதியாகிவிடுவார்

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி உள்ளவர்கள்தான் மோடி காதில் விழுமாறு சொல்ல வேண்டும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.