Sunday, March 1, 2015



avargal unmaigal
 இந்திய பட்ஜெட் பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு மதுரைத்தமிழனின் பதில்

பொதுமக்கள் :ஐயா பட்ஜெட் என்றால் என்ன?
மதுரைத்தமிழன் : அராசாங்கம்  வரிகள் விதிப்பதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல வகைகளில் பணத்த பெற்று அதை பொதுமக்களின் நலத்திற்கும் வளர்ச்ச்சிக்கும் செலவிட்டு அவர்களை வளர்ச்சி அடையச் செய்து அதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்காக போடப் படும் திட்டம்தான் பட்ஜெட் ஆகும்.இது கொள்கை அளவில் மட்டும்தான் செயல்படுகிறது ஆனால் நிஜ வாழ்க்கையில் நடப்பதென்னவோ பொதுமக்களிடம் இருந்து பல வகைகளில் வரி மூலம் பணத்தை அரசாங்கம் பெற்று அதை தங்களுக்கு வேண்டிய சாதகமான முறையில் போடப்படும் திட்டம்தான் பட்ஜெட்


பொதுமக்கள் :மத்திய அரசாங்க போட்ட பட்ஜெட் பற்றி?
மதுரைத்தமிழன் :ஆகா அது மிக சிறந்த பட்ஜெட் இந்த பட்ஜெட் மூலம் இராமரை போல வாழலாம் அதாவது எல்லோரும் அமோசான் காட்டிற்கு சென்று வாழ வழி செய்யப்பட்டு இருக்கிறது


பொதுமக்கள் :இந்த பட்ஜெட் பொதுமக்களின் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட்டா?
மதுரைத்தமிழன் :மோடியின் நண்பர்களும், தொழில் அதிபர்களும், அரசியல்தலைவர்கள் மட்டும்தான் பொதுமக்கள் என்றால் ஆமாம் இது இந்திய மக்களின் வளர்ச்சிக்கு போட்ட திட்டம்தான் இது


பொதுமக்கள் :மோடி அரசு  போட்ட பட்ஜெட் பணக்கார்களை மேலும் பணக்காரகளாகவும், ஏழைகள் மேலும் ஏழைககளாகவும் ஆகிறார்கள் என்கிறார்கள் ஆனால் யாரும் மிடில் கிளாஸைப் பற்றிப்  பேசுவதில்லையே?
மதுரைத்தமிழன் : மோடி அரசு போட்ட பட்ஜெட் மூலம் Rich get Richer, the Poor gets Poorer, and the Middle Class gets the Middle Finger இதனால்தான் யாரும் மிடில் க்ளாஸ் பற்றி யாரும் ஏதுவும் பேசுவதில்லை.


பொதுமக்கள் :இந்த பட்ஜெட் மூலம் பொதுமக்களுக்கு ஏதாவது மிகவும் சீப்பாக கிடைக்குமா?
மதுரைத்தமிழன் :ஓ, மோடியின் அறிவுரைகள் மட்டும் மிக மிக சீப்பாக பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செய்து இருக்கின்றனர்.

பொதுமக்கள் :பொதுவாக ஆண்கள் அரசாங்கம் போடும் பட்ஜெட்பற்றி அதிகம் கவலைப்பட்டு விமர்சிக்கிறார்கள் ஆனால் பெண்கள் அதுபற்றி அதிகம் விமர்சிப்பதில்லையே அது ஏன்?
மதுரைத்தமிழன் :பெண்களுக்கு பட்ஜெட் பற்றி கவலை இல்லை காரணம் அவர்களுக்கு அப்பா, சகோதரன், காதலன்,கணவன்,மகன் இருப்பதால்..இவர்கள் இருப்பதால் பெண்கள் போடும் வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் இந்த ஆண்களைதான் விமர்சிப்பார்களே தவிர நாட்டின் தலைவர்களை விமர்சிக்க மாட்டார்கள்

பொதுமக்கள் :பட்ஜெட் பற்றி பொதுமக்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவதென்ன?
மதுரைத்தமிழன் :மக்களே(ஆண்களே)  மோடி போடும் பட்ஜெட் பற்றி பேசுவதால் எதுவும் மாறிவிடாது அதனால் நீங்க உங்க வீட்டு பட்ஜெட்பற்றி உங்க மனைவிக்கிட்ட கலந்து ஆலோசிங்க இல்லேன்னா உங்க வீட்டு அம்மாவிடம் இருந்து அர்ச்சனைமட்டுமல்ல பூரிக்கட்டை அடிகளும் கிடைக்கும்.



அன்புடன்
மதுரைத்தமிழன்


7 comments:

  1. பட்ஜெட் பற்றிய பாதிப்பினைப் படிக்கும்போது உணரமுடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. யாரையும் மிக அதிக அளவு நம்பிவிடக்கூடாதுங்க் மோடியை மிக மிக அதிக அளவு மக்கள் நம்பிட்டாங்க அதன் விளைவுகளை அவங்க அனுபவிச்சுதானே ஆகனும்

      Delete
  2. ஹ்ம்ம்ம்:((( என்னத்த சொல்ல.

    ReplyDelete
    Replies

    1. நீங்க என்ன சொல்லவறீங்க என்று புரியுது....ஆத்திரம் வரும் போது பதிவுகள் இப்படி போவதுண்டு மன்னிச்சுங்க சகோ

      Delete
  3. நண்பர்களே இந்த பதிவிற்கான படம் கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கிறது அதற்காக மன்னிச்சு கொள்ளுங்கள் ஆனால் மோடி அப்படிதானே தன்னை நம்பியவர்களுக்கு செய்து உள்ளார் அதுதானே உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நடுத்தர வர்கத்தை மட்டும் கணக்கில் கொண்டு இந்த படத்தை போட்டிருக்கிறீர்கள். பணக்கார வர்க்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், எந்த படத்தை போட்டிருப்பீர்கள்?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.