Add caption |
ஜெயலலிதாவின் நலனை(தூக்கத்தை) கெடுத்த தமிழக பட்ஜெட்
சமீபத்தில் தமிழகத்தின்
பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், இந்த பட்ஜெட்
ஜெயலலிதாவின் ஆலோசனையின் படி தயாரிக்கப்பட்டது என சட்டசபையில் தெரிவித்து உள்ளார்.
நான் இந்த செய்தியை படிக்கும் போது தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இதை தெரிந்துதான்
செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா? பன்னீர் செல்வத்தின் உரை மிகவும் தப்பாகபடுகிறதே என்று நினைத்தேன்.
நான் நினைத்தற்கு
ஏற்றவாறு எங்கடா ஒட்டை இருக்கும் அதில் நூலை நுழைக்கலாம் என்று நினைக்கும் கலைஞருக்கு
கிடைத்தது இந்த பட்ஜெட் செய்தி. உடனே அதை கண்டித்து பன்னீர்செல்வம்
சட்டசபையில் ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்து விட்டார். இப்படி அவர் சொன்னதன் மூலம் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டார். பட்ஜெட் அறிக்கை
தயார் செய்யும் போது அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு, அந்த அறிக்கையை காண்பிக்கக்
கூடாது; ஆனால் அரசுக்கு சம்பந்தம் இல்லாத ஜெயலலிதாவின் ஆலோசனையை
கேட்டுத்தான் பட்ஜெட்டை தயார் செய்தோம் என்றால் சட்டபடி அது குற்றம் தான் என்று கலைஞர்
திரியை கொளுத்தி போட்டார்.
இவர் திரியை
கொளுத்தி போட்டார் என்றால் அந்த திரியிலிருந்து சுப்பரமணி சாமி பெரிய நெருப்பையே பற்ற
வைத்துவிட்டார். ஏற்கனவே ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அதிகம் ஆர்வம் காட்டி வந்த
அவருக்கு இந்த சம்பவம் மிகவும் பயனுள்ளதாக ஆகிவிட்டது, இதன் மூலம் மேலும் ஜெயலலிதாவின்
வழக்கு மிகவும் சிக்காலகிவிடும் போல இருக்கிறது
இவரது வாதித்தின்படி
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு
தாக்கல் செய்து ஜாமின் பெற்று வீட்டில் இருக்கிறார். ஜாமின் மனு தாக்கல் செய்து நாரிமன்
வாதாடிய போது நீதிபதிகளிடம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்குமாறும், அந்த நிபந்தனைகளை
ஜெயலலிதா பின்பற்றுவார் என்றும் சொல்லித்தான் ஜாமின் பெற்றார்.
ஜாமின் கிடைத்தால்
தான் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்றும், தமிழக அரசு நடவடிக்கைகளில் தலையிட
மாட்டேன் என்றும் உறுதி அளித்து இருந்தார். ஆனால், தற்போது அதை அவர் மீறி விட்டதாக
தெரிகிறது. சமீபத்தில் தமிழகத்தின் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட் ஜெயலலிதாவின்
ஆலோசனையின் படி தயாரிக்கப்பட்டது என சட்டசபையிலேயே தெரிவித்து உள்ளார்.
இந்த விஷயத்தில்,
ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்துக்குக் கொடுத்த உறுதி மொழியை மீறிவிட்டார். அரசு நடவடிக்கைகளில்
தலையிட்டதை, அவர் கட்சி சார்பில் முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையிலேயே
ஒப்புதல் வாக்குமூலமாக அளித்து விட்டார்.
இப்படி முதல்வர்
பன்னீர் செல்வம் சொன்னதன் மூலம் அவரும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டார். பட்ஜெட்
அறிக்கை தயார் செய்யும் போது அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு, அந்த அறிக்கையை
காண்பிக்கக் கூடாது இங்கே ஜெயலலிதா அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்; அவரின் ஆலோசனையை
கேட்டுத்தான் பட்ஜெட்டை தயார் செய்தோம் என்றால், தார்மீக அடிப்படையில், அது குற்றம்
தான். அதனால் இதுகுறித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்
என்று சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பன்னீர் செல்வம்
மட்டுமல்ல மன்மோகன் சிங்கும் இப்படிதான் சோனியாவின் வழிகாட்டால்படிதான் செயல்பட்டாலும்
எந்த நேரத்திலும் எங்கும் சோனியாவின் வழிகாட்டுதல்படிதான்
தான் செயல்பட்டதாக சொல்லவே இல்லை. ஆனால் பன்னீர் செல்வம் ஆதீத ஆர்வக் கோளாறினால் தான்
என்ன செய்கிறோம் என்று யோசிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
எது எப்படியோ
இந்த பட்ஜெட் தமிழக மக்களை பாதிக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஜெயலலிதாவின் வழக்கை பாதிக்கும்
என்றுதான் தெரிகிறது..
என்ன நடக்கப்
போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
அன்புடன்
மதுரைதமிழன்
பன்னீர் செய்தது பக்தியா? அல்லது புத்தியா? அல்லது நன்றியா?
ReplyDelete--
Jayakumar
"16 வயதினிலே" படத்தில் கவுண்டமணி ஒரு டயலாக் சொல்வார் "பத்தவச்சுட்டியே பரட்ட"
ReplyDelete