அரசியல் காக்டெய்ல்
: பொருளார் ஸ்டாலின் கட்சி நிதிக்கு முதலில் கொடுத்தப் பணம் கட்சி பணமா அல்லது சொந்தப்
பணமா?
சீட் பண்ட் கம்பெனியில்
பணம் போடும் தமிழனும் திமுக கட்சிக்கு நிதி அளிக்கும் தொண்டனும் ஒன்றுதான் அதுதாங்க
இரண்டு பேரும் ஏமாளிங்க..
சமுதாயத்திற்கு
நல்லது செய்ய நிதி திரட்டுபவர்கள் மத்தியில் தனது நலத்திற்காக சமுதாயத்திடம் இருந்து
கட்சி நிதி திரட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஸ்டாலின் :மெட்ரோ
ரயில் பணி திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவில் திறக்காவிடில், சென்னையில் நான்கு மாவட்ட
தி.மு.க., இளைஞர்களை திரட்டி, பெரும் போராட்டம் நடத்தப்படும். அது சிறை நிரப்பும் போராட்டமாக
அமையும்.
கட்சிக்கு தாலியை
விற்று நிதி கொடுத்துவிட்டு அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டபடுபவர்களுக்கு மாநில அரசு
செலவில் சாப்பாடு போட செய்யவே ஸ்டாலின் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளார் போல இருக்கு
ஸ்டாலின் : தமிழக
சட்டசபையில், அ.தி.மு.க.,வினர், எதிர்க்கட்சிகளை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசி
வருகின்றனர்.
ஒரு வேளை எதிர்கட்சினர்
செய்தது என்ன என்று சொல்லி இருப்பார்கள் அது கேவலமாக தோன்றுகிறது போல இவர்களுக்கு
.இதுக்குதான் நல்லது செய்யனும் என்கிறது
ஸ்டாலின் : தமிழக
பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதி, இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சீக்கிரம் அறிவிக்கப்பட
வேண்டும் அப்போதுதான் ஸ்டாலினால் கூட்டத்தில் இருந்து எந்தெந்த நாள் வெளிநடப்பு செய்ய
வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட முடியும்
சட்டசபை தேர்தலுக்கு
நிதியளிக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம், கட்சியினருக்கு
கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், முதல் நபராக தேர்தல்
நிதி வழங்க, நிதி வசூல் வேகமாக துவங்கியது.
1. கட்சியின் பொருளார்
கட்சியின் பணத்தையே எடுத்து முதலில் கொடுத்துவிட்டாரா அல்லது சொந்தப் பணத்ஹில் இருந்து
கொடுத்தாரா?
2. ரோட்டோராம வீரிய
மருந்து விற்பனை செய்பவரிடம் வாடிக்கையாளர் போல இருக்கும் விறபனைக்காரரின் கூட்டாளிதான்
முதலில் அந்த மருந்தை வாங்குவார் அதை போலத்தான் இதுவுமா?
பா.ஜ., கட்சியின்
தேசிய செயற்குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நீக்கப்பட்டு உள்ளனர்
ஒரு வேளை அவர்
கொடுத்த கல்வி சான்றிதழ் போலி என்று பாஜக தலைமை கண்டு பிடித்துவிட்டதோ என்னவோ
மொரீஷியஸ் கடல்
எல்லைக்குள், இந்தியப் பெருங்கடலை பாதுகாக்கும் பணியை செய்ய இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட
கடல் ரோந்து மற்றும் தாக்குதல் கப்பல், 'பர்ராகுடா' மொரீஷியஸ் நாட்டிடம் வழங்கப்பட்டது.
1,300 டன் எடை கொண்ட அந்த கப்பலில், ஏராளமான அதிநவீன வசதிகளும், போர் கருவிகளும் உள்ளன.
தமிழக மீனவர்களை
காக்க இந்திய ராணுவத்திற்கு இந்த மாதிரி கப்பலை அளிக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதும்
இல்லையா அல்லது பணம் இல்லையா?
தே.மு.தி.க.,
தலைவர் விஜய காந்த் அறிக்கை: தே.மு.தி.க., மீது, சமூக வலைதளங்களில் செய்யப்படும் அவதுாறு
விமர்சனங்கள் குறித்து, காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற
பாரபட்ச நடவடிக்கைகளால், காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையும்
போய்விடும்.
அதனால் காவல் துறை
செய்ய வேண்டியது என்னவென்றால் அவர்களை கண்டுபிடித்து சிறந்த சமுக சேவகர்கள் என்ற அவார்ட்
வழங்க வேண்டும் அப்பதான் பொதுமக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும்
1,000 அரசு தொடக்க
பள்ளிகள் மூடும் அபாயம்
ஆசிரியர்கள் வேலை
குறித்து கவலைபட தேவையில்லை அவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்படும்
கோடை காலத்தில்
தண்ணிர் பிரச்சனை வரும் போது குழாய் அடியில் மக்கள் எப்படி குழாயடி சண்டை போட வேண்டும்
என்று மக்களுக்கு செய் முறை விளக்கம் தரும் கோவை கவுன்சிலர்கள்
டிவி நிலையம்
முன் முஸ்ஸிம் பட்டாசு வெடித்தால் அவன் தீவிரவாதி ஆனால் அதே நேரத்தில் மற்ற மதத்தினர்
குண்டு போட்டால் அவன் பட்டாசு வெடிக்கும் மதவாதி
நீங்க நல்லா
இருக்கோனும் நம் நாடு முன்னேற.....
அன்புடன்
மதுரைத்தமிழன்
அரசியல்,காமெடி,
நகைச்சுவை
அரசியல் காக்டெய்ல் என்று தலைப்பிலேயே கூறிவிட்டீர்கள். அது அப்படித்தான்.
ReplyDeleteஉங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி
Delete