Friday, March 6, 2015



avargal unmaigal world number 1 readers choice tamil blog
கற்பழிப்புகளும் கதறல்களும் தொடரும்.......


'இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில் வெளிவந்த ஆவணப்படம்  உலக மக்களிடையே பல வித சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை இந்திய அரசாங்கம் தடைவிதித்தால் அது மேலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்த படம் வெளியிடுவதால்  நடந்த பலன் என்ன வென்று பார்த்தால் அந்த ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டு  அதனால் இறந்து  சாம்பலாகிப்  போன அந்த பெண் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் மீடியாவால் கற்பழிக்கப்படுகிறாள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


கற்பழிப்பை பேசும் இந்த ஊடகங்கள் மீடியாக்கள் எதனால் எப்படி எங்கு இந்த தவறுகள் நடப்பதற்கு விதை உண்டப்படுகிறது அதை எப்படி வளரவிடாமல் அழிப்பது என்பது பற்றி எங்கும் கூறவில்லை மேலும் இந்த மீடியாக்கள் பெண்கள் எப்படி மதிக்கப்பட வேண்டும் அவர்களின் உணர்வுகளை புரிந்து எப்படி அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் சொல்லவில்லை.

கற்பழிப்பு கொலை கொள்ளை நடக்காத நாடுகளே இல்லை அப்படி ஒரு நாடு இருந்தால் அங்கு சட்டம் போலிஸ் ஜெயில் போன்றவைகள் இல்லாமல்தான் இருக்கவேண்டும் அப்படி ஒரு நாடு உலகில் எங்கும் இல்லை அப்படி இருக்கையில் இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புக்கள் மட்டும் ஏன் இந்த அளவு பேசப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கையில் இங்கு நடத்தப்படும் அதுவும் சமீபகாலமாக நடத்த்துபடும் கற்பழிப்புகள் தனியாளாக இல்லாமல் ஒரு குழுவால் நடத்தப்பட்டு அந்த பெண்ணின் மனத்தை மட்டுமல்ல உடலையும் சிதைக்கிறார்கள்.


பிபிசி இந்த ஆவணப்படத்தை எடுத்து இந்தியாவை மிகவும் கேவலப்படுத்துவதாக நம்மவரில் பலர் கொந்தளிக்கின்றனர் .இது என்னவோ மேலைநாட்டு அரசாங்கம் ஏதோ இவர்களை கேவலப்படுத்துவதற்காகவே இந்த மாதிரிபடங்களை எடுப்பதாகவும் நினைக்கிறார்கள் உண்மையில் சொல்ல போனால் மேலை நாட்டு அரசாங்கத்திற்கு இதைப்பற்றி கவலை இல்லை ஆனால் இந்த மாதிரி விஷயங்களை எடுத்து கவலை கொள்வதாக காட்டி பொறுப்பாக செயல்படுவதாக் சொல்லி இந்த மீடியாக்கள் லாபம் சம்பாதிப்பதைமட்டும் குறிக் கோளாக கொண்டு செயல்படுகின்றன அதுதான் உண்மை. எப்படி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கற்பழிப்பகள் ஏதும் நடக்காததுமாதிரியும் டில்லியில் மட்டும்தான் இப்படிபட்ட கற்பழிப்புக்கள் நடக்கிறது என்று நம் இந்திய மீடியாக்கள் இந்த விஷயத்தை பேசுகிறதோ அதே மாதிரிதான் மேலைநாட்டு மீடியாக்களும் தங்கள் நாட்டில் இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்காதது மாதிரியும் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது என்று பேசிவருகின்றனர் அதனால்தான் கேட்கிறேன் மேலை நாட்டு மீடியா எடுத்த இந்த ஆவணபடத்திற்கு எதிர்ப்பு செய்யும் இந்த ஆண்கள் அதே வேலையை செய்யும் இந்திய மீடியாவை மட்டும் குறை சொல்லவதில்லையே அது ஏன்?

இந்த ஆவணப்படத்தை பார்த்த பலர் சொல்லுவது குற்றவாளி எந்த் ஒரு சலனமும் இல்லாமல் தான் செய்தது தவறு இல்லை என்று நினைத்து பேட்டி கொடுக்கிறானே பாவி என்று சொல்கிறார்கள் அதே கேள்வியை இந்த நாட்டு தலைவர்களை பார்த்து கேட்க எந்த மானமுள்ள குடிமகனுக்கோ தைரியம் இருக்கிறதா என்ன? எத்தனை எத்தனை தலைவர்கள் குற்றங்கள் புரிந்துவிட்டு (கொலை கொள்ளை(ஊழல்) போன்றவைகளில் ஈடுபட்டு தேர்தல் வரும் போது எந்த வித ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சிரித்தவாறே ஒட்டு கேட்டு வருகிறார்கள். அப்படிபட்டவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்ட நாம் இவனை மட்டும் குறை சொல்வது ஏன். தவறுகளை தலைவர்களே விதைக்கும் போது அந்த தலைவர்களாலும் மீடியாக்காளாலும் சினிமாக்களாலும் பள்ளிகளாலும் பாதிக்கப்பட்டு வரும் இவர்களை போன்ற உள்ளவர்களை மட்டும் குறை சொல்லவது என்ன நியாயம்.

இவன் செயதது மிகப் பெரிய தவறுதான் அதை நான் நியாப்படுத்தவில்லை ஆனால் இவனைப் போல உள்ளவர்களை உருவாக்கிய இந்த சமுதாயத்தை என்ன சொல்லி நியாப்படுத்த நீங்கள் முயல்கிறீர்கள் என்பதை சொல்லுங்களேன்

தலைவர்கள், அரசியல்வாதிகள், சாமியார்கள் சொல்லிய அதே கருத்தைதான் இந்த குற்றவாளியும் கூறியுள்ளான். இதன் மூலம்  நமக்கு தெரிவது  பெண்கள் பற்றிய  அவர்களின் பார்வையும் அதனுள் ஒளிந்து கிடக்கும் பண்பாடு, கலாச்சாரம் பற்றிய  இந்திய ஆண்களின் மனநிலை என்னவென்று பட்டவர்த்தமாக வெளி வருகின்றது. இன்னும் எவ்வளவு நாள் பெண் மென்மையானவள் அவள் ஒரு பூ , புடலங்கான்னு இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லி அலையப் போகிறீர்கள் அவளும் ஒரு ஆணைப் போல ரத்தமும் சதையும் உள்ள சக மனித இனம்தான் என்று எப்போ தெளிய வைக்க போகிறீர்கள்.


என்னை பொறுத்தவரை கட்டிய மனைவியாக இருந்தாலும் அவளுக்கு விருப்பம் இல்லாத நேரத்தில், உடல் மனம் ஒத்துழைக்காகத நேரத்தில் வற்புறுத்தி தான் கணவன் என்ற அதிகாரத்தில் உறவு கொள்ளுவதும் ஒரு வித கற்பழிப்புதான்.அப்படி செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.


கற்பழிப்புக்கள் குறைய நாம் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் பெண் பற்றிய மதிப்பீட்டை குடும்ப அமைப்புகளில் இருந்தே துவங்க வேண்டும் மேலும் பள்ளிக் கல்விகளில்  நீதி போதனையை ஒரு பாடமாக நடத்த வேண்டும். அங்கும் ஆண் பெண் என்று பாகுபாடுகாட்டாமல் வளர்க்க வேண்டும் . அதுமட்டுமல்லாமல் எண்டர்டெயிண்ட்மெண்ட் டிவி என்று சொல்லிக் கொண்டு உங்கள் வீட்டின் உள் வந்து உட்கார்ந்து கலாச்சாரத்தை பண்பாட்டை கெடுக்கும் டிவிகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்கவேண்டும். ஒரு வீட்டில் ஒரு தந்தை தாயை எப்படி நடத்துகிறார் என்பதும் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் .தலைவர்கள் தவறு செய்யும் போது அவர் எவ்வளவுதான் நமக்கு ரோல்மாடலாக இருந்தாலும் அவர் தண்டிக்க நாம் போராட வேண்டும். சமுக பிரச்சனைகள் என்று வரும் போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் தெருவில் இறங்கி குடும்பத்தோட போராட வேண்டும் அப்படி செய்யாமல் டிவியில் வரும் சீரியல்கள் பார்த்து பொங்கி கொண்டிருக்க கூடாது..


இப்படி எல்லாம் செய்யாமல் நாம் இருந்து கொண்டிருந்தால் கற்பழிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


ஆனால் கற்பழிப்புகள் தொடராமல் இருக்கஇப்படி ஸ்டேடஸ் செய்திகள் போடுவதைவிட   நாம் ஏதும் உருப்படியாக  செய்யப் போவதில்லை .

அதனால் அடுத்த கற்பழிப்பு சேதி வரும்  வரை இந்த கற்பழிப்பு செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு வழக்கம் போல இந்த வருசம் விஜய் டிவியில் யாருக்கு அவார்ட் தருவார்கள் சிம்பு யாரை காதலிக்க போகிறார் நயன் தாரா அடுத்தாக யாரை காதல் செய்யப் போகிறார் அதிமுக பாஜக கூட்டணி வருமா? அப்படி நடந்தால் விஜயகாந்த் கழட்டிவிடப்படுவாரா? ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க போவது சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியா அல்லது ஜெஸிக்காவா என்று நம் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும் வரை இது போன்ற விவாவதத்தில் ஈடுபடுவோம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி 1:

மக்களே இப்படி தப்பு செய்தவர்களை கடுமையான சட்டம் இயற்றாமல் இந்த மாதிரி ஆவணப்படத்தை தடை செய்ய ஏன் இந்திய அரசாங்கம் இவ்வளவு மெனக்கெடுகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?


நிச்சயம் பாராளுமன்றத்தில்  மக்களுக்கு  எதிரான மேலை நாட்டிற்கு ஏதுவான ஏதாவது திட்டங்கள் நிறைவேற்றி இருப்பார்கள் அந்த செய்திகள் மறைக்கப்பட வேண்டி மக்கள் பார்வையை நாடாளுமன்றத்தை விட்டு திசை திருப்ப இப்படி ஒரு நாடகத்தை நமது இந்திய அரசாங்கம் மேலை நாட்டினரின் உதவி கொண்டு நடத்தி இருக்க வாய்ப்புண்டு. இந்த நாடகத்தில் எதிர் கட்சிகளுக்கு கூட பங்கு இருக்காலாம்..

மக்கள் பார்வையை நாடாளுமன்றத்தை விட்டு திசை திருப்ப இப்போதைக்கு வேற எதுவும் இல்லை..

டிஸ்கி 2 :
மேலை நாடுகளில் கற்பழிப்பு கேஸுக்கள்  இந்தியாவைவிட மிக அதிகமாக இருப்பதை அறியாலாம் ஆனால் மேலை நாடுகளில் இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகள் போல மிக சிறிய அளவுதான் நடக்கிறது.மீதமுள்ள கற்பழிப்ப்பு கேஸுகளை பார்த்தால் கணவன் மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்து கொள்ளும் போது குடும்பத்தில் ஒற்றுமை இல்லாததால் அல்லது கணவன் மனைவிக்குள் கோபம் இருக்கும் போது அந்த பெண்கள் தங்கள் கணவணோ காதலனோ தன்னை கற்பழித்துவிட்டான் என்று வழக்கு பதிவதுதான் மிக அதிகமாக இருக்கிறது.

சிறு பெண்களிடம் தவறான முறையில் நடப்பதையும் செக்ஸ்வல் அப்யூஸ் என்று கருதி அவர்களையும் கற்ப்ழிப்பு வழக்கில் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்படுகின்றன. அப்படி தவறு செய்யும்  ஆண்களுக்கு எலக்ட்ரானிக் டிவைஸ் பொருத்தி கண்கானிக்கிறார்கள் அதுமட்டுமல்ல இது போல உள்ள பல ஆண்களை பள்ளிக்கூடம் மாற்றும் சிறுவர்கள் கூடும் இடத்திற்கு அருகாமையில் போகவும் தடைவிதிக்கிறார்கள்.

7 comments:

  1. தங்கள் பதிவு நிகழ்வை தெளிவாக ஆய்வு செய்துள்ளது இதை வெறும் பதிவாக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் சொல்லப்பட்டுள்ள பல்வேறு நிலைகளையும் .தீர்வுகளையும் அரசும் மக்களும் கவனித்து
    ஆவன செய்ய வேண்டும் செய்வார்களா!!?

    ReplyDelete
  2. ஆழமாக நிதானமாக இப்பொருண்மை குறித்து விவாதித்துள்ளீர்கள். சமூகப் பொறுப்புணர்வுடன் செயலாற்றி இந்நிகழ்வுகள் தொடராவண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொருவரிடன் கடமையாகும்.

    ReplyDelete
  3. தங்களின் கருத்து முற்றிலும் உண்மையே அந்த பெண் போன்ற பலரும் இப்படி முன் வந்து இதுபோன்ற காரியங்களை தெரியப்படுத்தினால் இப்படி மீடியாக்கள் மற்றும் பேசப்படும் ஒவ்வொரு நிலையிலும் அசிங்கப்படுத்தப்படுகிறாள். ஒவ்வொரு குடிமகனுக்கும் மகளுக்கும் ஆண் பெண் உறவுமுறை குறித்த விழிப்புணர்வு வேண்டும். வன்முறை அகல வேண்டும். மனித நேயம் மறிக்காமல் காக்க ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு தமிழா! ஆணும், பெண்ணும் வளர்க்கப்படும் முறை இந்த சமுதாயத்தில் மாற வேண்டும். பெண்ணை மதிக்க வேண்டும் ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது போல் பூ, மென்மை என்றெல்லாம் போற்றி ஒரு தைரியமற்ற, மனமும் தளரும் நிலையில் தான் வளர்க்கப்படுகின்றாள். வயதிற்கு வந்தால் ஓடக் கூடாது, ஆண்களுடன் பேசக் கூடாது, இத்தனை மணிக்குள் வீட்டிற்கு வர வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் நடக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளுடன் தான் வளர்க்கப்படுகின்றாள். (வீட்டிலேயேதான் தொடங்குகின்றது இது. ஒரு மகன் வளர்க்கப்படுவதற்கும், மகள் வளர்க்கப்படுவதற்கும் பல வித்தியாசங்கள். இதை எதிர்த்து வளர்ந்தவள் நான் என் சிறு வயதிலிருந்தே. - கீதா)

    பெண்கள் எந்த ஒரு நேரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய மன தைரியமும், உடல் வலுவும் உள்ளவர்களாகவும், தற்காப்புக் கலைகளைக் கற்றும் வளர்க்கப்பட வேண்டும். பேதமை இல்லாமல். வீடும், சமுதாயமும் தான் காரணம்.

    ஆண்களை வலுவுள்ளவர்களாகவும், அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் வளர்க்கப்படுகின்றார்கள். இருவரும் சமமாக வளர்க்கப்பட்டு, நடத்தப்பட்டால் இவையெல்லாம் மாற வழி உண்டு..மிக் மிக நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

    உங்கள் கேள்விகள் நியாயமானதே!

    ReplyDelete
  5. hello! கருத்தே போடல. அதுக்குள்ள "உங்கள் கருத்து வெளியிடபட்டதுன்னு காட்டுது!!! @#@#@@

    ReplyDelete
  6. தமிழன் சகா!!!
    கைய கொடுங்க !!! உங்க எழுத்தோட தீவிரம் எவ்ளோன்னு இந்த பதிவு காட்டுது!! ஜோதிஜி அண்ணா சொன்னது போல உங்க potential ல காட்டுது பதிவு! எந்த கோணத்தையும், கருத்தையும் விடாம செமத்தியா எழுதிருக்கீங்க!!! இதுபோலும் அட்டகாசமான உங்கள் பதிவுகள் மேலும் ஆவலோடு வரவேற்கப்படுகின்றன:))

    ReplyDelete
  7. மேலை நாடுகளில் பாலியல் வல்லுறவுகள் அதிகமானவை கணவனால் நடத்தப்படுவது என்று எந்த அடிப்படையில் எழுதினீர்கள்? அது தவறான தகவல். அமெரிக்க ரேப் புள்ளியியல் விபரம் ஆன் லைனில் கிடைக்கிறது அதை பார்த்துவிட்டு எழுதியிருக்கலாம். அமெரிக்காவில் மொத்த ரேப்பினால் பாதிக்கபட்ட பெண்களில் 44% பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்க வாய்ப்பே இல்லையே.

    இந்திய ரேப் கேசுகள் அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இந்தியாவில் 20 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். ஆனால் அமெரிக்காவில் 2 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண்ணை கெடுத்து விடுகிறார்கள். இது அனைத்தும் புருசர்களால் - என்பது உடான்ஸாகவே இருக்க முடியும். ஆண் பார்ட்னர்களால் (புருசன், பாய் பிரண்ட்) நடத்தப்படும் வல்லுறவு குறித்து அமெரிக்க புள்ளியியல் விபரம் ஏதும் தெளிவாக இல்லை, பல்வேறு விபரங்களை வைத்து பார்க்கும் போது ஆனால் 10-30% மட்டுமே இருக்கும் என தெரிகிறது. அமெரிக்க பல்கலைகழக ஹாஸ்டல்களில் நடக்கும் கற்பழிப்புகள் கணக்கில் அடங்காதவை. பல பல்கலைகழகங்கள் அதை மூடி மறைக்கவே பார்க்கின்றன. இந்த மாதிரி இரு நாடுகளிலும் புகார் செய்யப்படாத வழக்குகள் ஏராளம்.

    இன்னொரு விடயம் தில்லியில் நடக்கும் கற்பழிப்புகள் குறித்து ஹிந்து பத்திரிக்கை ஒரு ஸ்டடி நடத்தியது. அதில் 40% கற்பழிப்பு வழக்குகள் பெண்களில் அப்பாக்களால் பதிவு செய்யப்பட்டவை - அதாவது காதலிக்கும் பெண் காதலனுடன் சம்மதித்து உறவு கொண்ட பின்பு அல்லது ஓடிப்போனதால அப்பாகள் காதலன்கள் மீது கொடுத்தவை. மேலும் 25% கல்யாணம் பண்ணுவதாக சொல்லிவிட்டு ஏமாத்திட்டான் என பெண்கள் கொடுத்தவை. ஆக 35% மட்டுமே உண்மையான வழக்குகள்.

    ஆகவே இந்தியாவில் மட்டும் ரேப் கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என்பது மிகைப்படுத்தல் என்பதுதான் நிசம். பாலியல் வல்லுறவு உலகலாவிய பிரச்சனை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.