Saturday, February 28, 2015



கலைஞருக்கு ஞாபகசக்தி குறைவா? ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை கிடைக்குமா அலசி ஆராய்வது அப்பாடக்கர்

அண்ணே ஜெயலலிதா அவர்களுக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைக்குமா அண்ணே

அடேய் மாங்கா மோடி ஜெட்லியை வைத்து எப்போதோ  நல்ல தீர்ப்பு வழங்கிவிட்டார் இப்போது நடப்பதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகமேதான்டா...

செய்தி : 'ஆக., 25ம் தேதிக்குள், என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., தலைமையிடம் விஜய காந்த் திடீர் கோரிக்கை


அண்ணே இந்த செய்தியை படிச்சீங்களா அண்ணே இதை பற்றி என்ன நினைக்கிறீங்க அண்ணே

அடேய் மாங்கா  இந்த கிரண்பேடிக்கு என்ன நடந்துச்சுண்ணு என்பதை அதுக்குள்ள இந்த விஜயகாந்த அண்ணன் மறந்துட்டார் போல. பாஜாவிற்கோ வழிய ஒரு கொழுத்த ஆடு பிரியாணிக்காக வருவதை விட்டுவிடுமா என்ன?

அண்ணே :மத மோதல்களை அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறதே

அடே மாங்கா இப்படி மோடி சொல்வதன் அர்த்தம் என்னடா இன்னும் நீங்க சும்மா இருக்கீங்க ஆரம்பிக்க வேண்டியதானே என்பதுதான் . சீக்கிரம் பாரேன் மத மோதல்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும் இன்னும் சில மாதங்களில்

அண்ணே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டவர்கள், ஏன் போடாதவர்களுக்கு கூட, நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். என்று செய்தி வந்து இருக்கிறதே.

அடேய் மாங்கா இந்த காலத்தில் காமெடி டிரெண்டுதான் நல்லா போகுதுன்னு தெரிஞ்சதாலே விஜயகாந்திற்கு போட்டியாக இந்த அண்ணனும் களத்துல இறங்கிட்டார் போல இருக்கு

அண்ணே நிலம் கையகப்படுத்தும் மசோதா: எதிர்கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் மோடி  என்று செய்தி வந்து இருக்கிறதே. இதற்கு எதிர்கட்சிகள் எப்படி அண்ணே ஆதரிக்கும்

அடேய் மாங்கா இதற்கு எதிர்கட்சிகள் ஆதரித்தால் எதிர்கட்சி தலைவர்களின் நிலங்களை  கையகப்படுத்த மாட்டேன் என்று வாக்குறுதிகள் அளித்து அல்லது கையகப்படுத்தும் நிலங்களுக்கு தகுந்தவாறு கமிஷன் தருவதாக சொல்லி ஆதரவு திரட்டிவிடுவார் இந்த மனுஷன்

அண்ணே விஜயகாந்தை "குடிமகன்" என விமர்சிப்பதா? கருணாநிதி கண்டனம் செய்திருக்கிறாரே?

அடேய் மாங்கா விஜயகாந்துடன் கூட்டணி சேருவதற்காக கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட்டார் போல.. ஒரு காலத்தில் ஞாபக சக்திக்கு கலைஞரை உதாரணமாகஸ் சொல்லுவார்கள் ஆனால் கடந்த தேர்தலில் வடிவேலுவை வைத்து விஜயகாந்தை குடிகாரன என்று கேளி செய்து மகிழ்ந்தவர் அல்லவா இந்த கலைஞர். சரி விஜயகாந்திற்காவது இது ஞாபகம் இருக்குமா என்று நினைத்தால் இல்லையென்றுதான் சொல்ல தோன்றும் காரணம் ஏன் என்று நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டுமென்பதில்லையே



அண்ணே பெண்களுக்கு ஆண்கள் உதவுவதில்லையாமே அது உண்மையானே?

அடேய் மாங்கா பெண்களுக்கு எப்போதெல்லாம் உதவி தேவையோ அப்போதெல்லாம் இந்த ஆண்கள் உதவத்தானே செய்கிறார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்
28 Feb 2015

6 comments:

  1. நச் கமெண்ட்ஸ்! ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  2. அரசியல் பதிவுகளில் கொஞ்சம் உங்கள் நடை சமீபமாக மாறி இருப்பதாக தோன்றுகிறது சகா. என்றாலும் எல்லா செய்திக்கும் நீங்கள் காட்டும் மறுபக்கம் எப்போதும் போல் சுவாரஸ்யம்:))

    ReplyDelete
    Replies
    1. வயசு ஆகிருச்சுல்ல அதனால நடை கொஞ்சம் மாறுகிறது போல

      Delete
  3. கண் துடைப்பு நாடகமா ? நீதி விவகாரத்தில் அரசு எப்படி தலையிட முடியும்.
    அப்படி என்ன செய்து விட்டார் பி ஜே பி க்கு, வாய்ப்பு கிடைக்கும் போது குத்துவது தவிர..
    மீண்டும் அது எப்போது வேண்டும் நடக்கும்.
    அவ்வளவு நம்பும் பத்தாம் பசலிகளா மோடியும், ஜேட்லீயும்.

    ReplyDelete
    Replies
    1. ஜெட்லி வந்து பேசியது எதிர்கால 2016 பேரமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் இதன் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்படும் இப்போது கோர்ர்ட்டில் காட்டும் கண்டிப்பு ஒரு நாடகமே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.