Monday, December 22, 2014





மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?

செய்தி : பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் வைகோ.
கேள்வி : மதுரைத்தமிழா பெரியாரின் வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றும் வைகோ கோவிலுக்கு சென்று பற்றி கருத்து ஏதும் சொல்ல முடியுமா?

மதுரைத்தமிழன் : எனக்கு  கருத்து சொல்ல தோன்றும் போது  கோவில்கள் கூடாது என்று சொல்லவில்லை அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்ற பாரசக்தியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வைகோ கோயிலுக்கு சென்றது அங்கு கொடியவர்கள் கூடாரம் அடித்து தங்கி இருப்பார்களா என்பதை பார்க்கதான். ஆனால் அதை மறைத்து இந்த  ஊடகங்கள் அவர் என்னவோ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததாக செய்திகளை திரித்து வெளியிட்டு வருகிறது.


கேள்வி :மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?

மதுரைத்தமிழன்: 6 மாதகாலம் மோடியுடன் கூட்டணி வைத்த வைகோ கோயிலுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார் என்றால் அவர் மாறிவிட்டதாகத்தனே அர்த்தம். நல்லவேளை கூட்டணி முறிந்தது இல்லையெனில் ஈழப் பிரச்சனைகளை மறந்து அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டனும் என்று காவு உடை அணிந்து நடைப்பயணம் மேற் கொண்டிருப்பார்.

செய்தி: தி.மு.க.,வில் இருந்து விலகிய நடிகர் நெப்போலியின், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் இன்று பா.ஜ.வில் சேர்ந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தி.மு.க.,வின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. தி.மு.க.,வில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் நான் பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்,' என்றார்.

கேள்வி : பாஜாகவில் சேர்ந்த நெப்போலியனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் மதுரைத்தமிழா?

மதுரைத்தமிழன் : 'தி.மு.க.,வின் செயல்பாடுகள் பிடிக்காமல் நொந்து போயிருக்கும் கலைஞரை திமுகவை விட்டு பாஜாகவில் வந்து சேருங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அழைப்பு விடுவித்தாலும் விடுவிக்கலாம்


கேள்வி : முதலில் மம்மி ஆட்சி; தற்போது டம்மி ஆட்சி; அடுத்து நம்ம ஆட்சி நடக்க போகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் தலைவர்: சொல்லி இருப்பது பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

மதுரைத்தமிழன் :  மம்மி ஆட்சிக்கு பின் டம்மி ஆட்சி நடந்தாலும் நடக்குமே தவிர தமிழகத்தில் மோ(ச)டி ஆட்சிக்கு வழியே இல்லை

கேள்வி : பா.ஜ.க.ஆட்சி வந்தால்  பூரண மதுவிலக்கு தமிழிசை சவுந்தரராஜன் என்று சொல்லுகிறாரே?
மதுரைத்தமிழன் : அவர்களே மத்தியில் மத்தியில் நடப்பது பா.ஜ.க.ஆட்சி இல்லை RSS ஆட்சி என்று சொல்லுகிறாரோ என்னவோ. இதுதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவதோ


கேள்வி : தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த அமித் ஷா வருகை தந்தாராமே அவரால் கட்சியை பலப்படுத்த முடியுமா?
மதுரைத்தமிழன் : பல லாரி சிமிண்ட் மூட்டையை வாங்கி வந்திருந்தால் அவரால் நிச்சயம் பாஜாகவை பலப்படுத்த முடியும்




அன்புடன்
மதுரைத்தமிழன்
22 Dec 2014

12 comments:

  1. பா.ஜ.க கம்மென்ட் அத்தனையும் சூப்பர் சகா!!
    அட! கொடுமையே வைகோ வா அது:(((((
    ஒவ்வொன்னும் நச்...நச்...

    ReplyDelete
    Replies
    1. அரசியல் புரிஞ்சவங்களுக்கு & புடிச்சவங்களுக்கு இது நச் நச்

      Delete
  2. Replies
    1. ரசித்து பாராட்டியதற்கு நன்றி

      Delete
  3. அருமை தமிழன்..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து பாராட்டியதற்கு நன்றி

      Delete
  4. முதல் வாக்கு ...

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரா இருந்த நீங்க எப்ப சாமியாரா மாறி வாக்கு கொடுக்க ஆரம்பீச்சீங்க சாரே

      Delete
  5. அரசியல்ல இதெல்லாம சகஜம்பா....

    ReplyDelete
    Replies
    1. என் வளைத்தளத்திலும் இந்த மாதிரி நக்கல்களும் சகஜமுங்க

      Delete
  6. அரசியல் நையாண்டி அருமை. கலைஞரைப் பார்த்து அந்த மஞ்சள் துண்டின் மர்மம் என்ன என்று கேட்டது ஒரு காலம். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய தோப்புக் கரணங்கள், குட்டிக் கரணங்களைக் காணலாம்.
    த.ம.3

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.