Monday, May 12, 2014





தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்க உச்சநீதி மன்றம் துணை போகின்றதா?

ஜல்லிகட்டுக்காக உச்சநீதிமன்றத்தோடு ஒரு மல்லுக்கட்டு




தமிழர்களின் வீர விளையாட்​டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்து இருப்பது தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிப்பது போல இருக்கிறது என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர் . இந்த விளையாட்டுக்களை தடைசெய்வது அந்தந்த சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல் என்பதால் தமிழகம். அதிர்ந்து​போய் இருக்கிறது

தமிழகத்தில் நெடுங்​காலமாக நடை​பெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு, கடந்த சில வருடங்களாகவே புளு கிராஸ் அமைப்பின் மூலமாகச் பிரச்சனைகள் வந்தது. இதை தடைசெய்யக் கோரி அந்த அமைப்பினர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் சில கட்டுப்பாடு​களுடன் இதை நடத்திக்கொள்ள இடைக்கால அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஆனால் இறுதித் தீர்ப்பு புளு கிராஸினருக்கு ஆதரவாக வந்துவிட்டது அதாவது ஜல்லிக்கட்டுக்கு தடைவித்தித்து தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்பின் மூலமாகத் தமிழர்களின் பண்பாட்டு வேர் அறுக்கப்பட்டு இருப்பதாகவே தமிழ் அறிஞர்கள் & தலைவர்கள் கருதுகிறார்கள்

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீரர்கள் கையில் ஈட்டியுடன் பாய்ந்து வரும் மாட்டின் முதுகில் ஈட்டியால் குத்திச் சாய்ப்பார்கள். இங்கே அது மாதிரியான எந்தச் சம்பவமும் நடப்பது இல்லை. இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் கைகளில் ஆயுதங்கள் ஏதும் இல்லை கைகள்தான் அவர்களின் ஆயுதம். மாடுகளுக்காவது கொம்பு இருக்கிறது... மாட்டின் திமிலை பிடித்துக்கொண்டு 30 அடி தூரம் சென்றாலே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்படுகிறான். இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மாடுகளை எந்த விதத்திலும் துன்புறுத்துவது கிடையாது.யாரும், யாருடைய வற்புறுத்தலின் பேரில் இந்தப் பந்தயத்தில் பங்கேற்பதில்லை.பிறகு ஏன் தடை?

மாடுகளை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்துவதற்காகத் துன்புறுத்துவதாக சொல்லப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கருதி இதற்கு தடைவிதித்தால் அவர்கள் கிழ்கண்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும். மாடுகளை தெய்வமாககருதி வழிபடும் நம் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூற்றுக் கணக்கில் அடிமாடுகள் செல்கின்றனவே, அதை தடை செய்யுமா?

இல்லை இல்லை நாங்கள் விலங்குகள் வதைக்காக இந்த தீர்ப்பை சொல்லவில்லை. மக்கள் படும் காயமுறுகிறார்கள் & இறந்து போகிறார்கள் அதற்காகத்தான் இந்த தீர்ப்பை வழங்கினோம் என்று சொன்னால் இந்த கேள்விக்கும் பதில் சொல்லட்டும்..

மக்கள் மேல் அக்கறை இருந்தால் தமிழகத்தில் உள்ள மதுக்கடையில் உள்ள மதுவை குடித்துவிட்டு தினம் தனம் மக்கள் சாகிறார்களே அதை தடை செய்ய இந்த உச்சநீதி மன்றம் செயல் எடுக்ககுமா அல்லது தடை செய்யுமா என்ன?

உச்ச நீதிமன்றமே!!! அடிமாட்டை காப்பாற்றாத அல்லது மது சாவினால் ஏற்படும் இழப்பை தடுக்கமுடியாத நீங்கள் ஜல்லிக்கட்டை தடை செய்வது தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்க செய்யும் முயற்சிதான் என்று இந்த மதுரைத்தமிழன் தீர்ப்பு வழங்குகிறான்..

உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை செய்யுமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

ஜல்லிகட்டுக்காக உச்சநீதிமன்றத்தோடு ஒரு மல்லுக்கட்டு





8 comments:

  1. மாடு முட்டி ஒருத்தர் வலியிலே அவஸ்தைப் படுவதைப் பார்ப்பதில்
    அவ்வளவு சந்தோஷமா?
    ம் ..... ம்.....
    பூரிக்கட்டை யால் அடித்தால் வரும் வலி மோசமா ?மாடு முட்டி வரும் வலி மோசமா ?. நீயா நானாவுக்கான நல்ல டாபிக்
    என்னைச் சின்ன வயசில் ஒரு தடவை மாடு முட்டியது.அதிலிருந்தே எனக்கு மாடுன்னா பயம்.

    ReplyDelete
  2. சேவக்கட்டு-ஞாபகமிருக்கிறதா!அதர்க்கு தடை விதித்தபோது கூறப்பட்டகாரணம்,சூதாட்டம்+மிருகவதை..குதிரைப்பந்தயத்தில் என்ன நடக்கிறது?கால் ஒடிந்தால்.அங்கேயே சுட்டுகொல்கிறார்கள்.இந்த கிராஸ்கள் என்ன செய்கிறர்கள்? கேட்டுப்பார்க்கட்டுமே.டங்குவார் அந்துவிடும்.மாடு வளர்ப்பவனும் மாடுபிடிப்பவனும் எழைப்பட்ட சனங்கப்பா கிராஸ்கள் கூத்தடிகிறாங்க.காலம் இப்படியேவா போகும்.வினைவிதைத்தவன் தினையா அறுப்பான்.

    ReplyDelete

  3. வணக்கம்!

    சல்லிக் கட்டு விளையாட்டைத்
    தள்ளித் தடைகள் போடுவதோ?
    துள்ளிப் பாயும் காளைகளைத்
    துணிந்து அடக்கும் திருநாள்காண்!
    சொல்லி எழுதும் பொழுதினிலே
    சுரக்கும் வீரம்! இதையெண்ணி
    மல்லும் கட்டும் என்தமிழா!
    மக்கள் மாக்கள் ஆனாரே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. நானும் தங்கள் கட்சி தான்.
    பார்ப்போம் உங்கள் பதிவை படித்த பிறகாவது, உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்கிறதா என்று.

    ReplyDelete
  5. நானும் இந்த தடையை எதிர்க்கிறேன்! பாதுகாப்போடு விளையாட்டு தொடரலாம் என்பது என் கருத்து!

    ReplyDelete
  6. கூழை கும்பிடு போட்டு பழகியவர்களுக்கு
    வீர விளையாட்டைப் பற்றி என்ன தெரியும்...?

    ஏற்கனவே மறத்தமிழர்களை மரத்தமிழர்களாக்கி விட்டார்கள்....
    இனி மாடு பிடிக்காமல் காக்கா பிடித்து வாழ வேண்டியது தான்.

    ReplyDelete
  7. காக்கா பிடி விளையாட்டு விளையாட சொல்லுறாங்களோ ?

    ReplyDelete
  8. விரைவில் ஒரு நல்ல முடிவு வரட்டும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.