Sunday, November 18, 2012






பதிவு எழுதும் ஒவ்வொரு பதிவாளரும் மறக்க கூடாத நாள்  எது?

அந்த நாள் எந்த நாள் என்பதை இறுதியில் சொல்லி இருக்கிறேன்

பதிவாளர்களுக்கு தம் பதிவுகளுக்கு ஹிட்ஸ் நம்பர் அதிகரித்தால்  அதை சொல்லி சந்தோஷப்படுவார்கள்  ஆனால் இது அதிகரித்தால் வெளியே சொல்லமாட்டார்கள்


பெண்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் சேலை நகைகளின் எண்ணிக்கை அதிகரித்தால்  அதை சொல்லி சந்தோஷப்படுவார்கள்  ஆனால் இது அதிகரித்தால் வெளியே சொல்லமாட்டார்கள்

அது என்ன என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றுமில்லைங்க வயசுதாங்க.....


ஆமாம் அதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு கேட்கிறிங்களா?

அது ஒண்ணுமில்லைங்க நான் மறந்த போன விஷயத்தை(பிறந்தநாளை) சில பதிவாளர்கள் ஞாபகம் வைத்து வாழ்த்தி இருந்தார்கள் .அவர்களுக்கு நன்றி சொல்லவும் அதை வைத்து ஒரு மொக்கை பதிவு தேற்றிவிடத்தான் இந்த முயற்சி


என்னைப் பொறுத்த வரை பிறந்தநாள் என்பது கேர்ள் ஃப்ரண்டு போல அது வரும் போகும் ஆனா அதை பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணணும் அவ்வளவுதாங்க


எனது பிறந்தநாள் பதிவிற்கு வந்த நீங்கள் சிரித்து மகிழ்ந்து சிந்திக்க இந்த நகைச்சுவை...

என்னை வாழ்த்த ஒரு பெரியவர் இந்தியாவில் இருந்து போன் பண்ணினாருங்க..அப்ப அவர்கிட்ட பேசும் போது சொன்னனேன் இந்த வயசுலேயே எனக்கு முட்டி மற்றும் உடம்பு எல்லாம் வலிக்குது இப்போவே வயசான பீலிங்க் மாதிரி இருக்குதே வயசான நீங்க இப்போ எப்படி பீலிங்க் பண்ணிறீங்க என்று கேட்டேன் அதற்கூ அவர் சொன்னார் நான் இப்போ சிறு குழந்தை போலத்தான் இருக்கிறேன் என்று சொன்னார்.. அதை கேட்டு ஆச்சிரியப்பட்ட நான் அதை கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா என்ரு கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். என் தலையில் இப்போது கொஞ்சம் கூட முடியில்லை, வாயில் ஒரு பல் கூட இல்லை... எனக்கு உணவை கையில் எடுத்து சாப்பிட முடியாதால் எனக்கு ஊட்டிதான் விடுகிறார்கள் அதுமட்டுமல்ல இப்போது என் பேண்ட் கூட நனைந்துவிட்டது போல இருக்கிறது என்று சொல்லி சிரித்தார்

பதிவு எழுதும் ஒவ்வொரு பதிவாளரும் மறக்க கூடாத நாள்  எது?
பிறந்த நாள்தாங்க

இப்போ உங்களுக்கு தெரிஞ்ச்சு இருக்குமே அதுதாங்க நவம்பர் 18. இந்த மொக்கை பதிவாளர் பூமியில் அவதரித்தநாள். பதிவுலகத்தை காப்பாற்ற பிறந்த அவதாரப் புருஷன் இந்த மதுரைத்தமிழன்

ஹீ,,,ஹீ, அப்ப வரட்டாங்க.... அடுத்த பதிவுக்கு விஷயம் தேற்றனும்... நீங்கள் சொல்லும் கருத்துகளில் இருந்துதான் பதிவு தேற்றனும். அதனால வந்தவங்க உங்க பொண்ணா கருத்தை இங்கே விட்டு போங்க


(பிரகாஷ் குமார், சங்கர் சசிகலா, வரலாற்று சுவடு,பிரபு கிருஷ்ணா, அகிலா மேடம், ரத்தினவேல் ஐயா, மைக்கேல் ராஜ், மற்றும் சிலருக்கு எனது மனம்மார்ந்த நன்றிகள் )
 
 

 




அன்புடன்

 உங்கள் அபிமானத்திற்குரிய பதிவாளர்
மதுரைத்தமிழன்
18 Nov 2012

16 comments:

  1. Facebookல காலையிலேயே பார்த்தேன்.. பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பலாம் என்றுவிட்டு, ஒருவேளை பிறந்தநாள் என்று சும்மா போட்ட திகதியாயிருக்குமோன்னு நினைச்சுட்டு விட்டுட்டேன்.

    எனிவே,, ஹேப்பி பர்த்டே தல!!! :-)

    ReplyDelete
  2. அட பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. //உங்க பொண்ணா//

    எம் பொண்ணையெல்லாம் கட்டிக்கொடுத்துட்டேனே!!!!

    ReplyDelete

  4. . பதிவுலகத்தை காப்பாற்ற பிறந்த அவதாரப் புருஷன் இந்த மதுரைத்தமிழனுக்கு
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... ! என்ன பெரும் பார்ட்டியா !!! கலக்குங்க

    ReplyDelete
  6. பிறந்த நாள் அதுவுமா வீட்ல அடி வாங்காம தப்பிச்சதுக்கு சந்தோஷம்.

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  8. அட. பிறந்தண்ணிக்கே பதிவு போடுறீஙக.ம்ம், மதுரக்கார தம்பீயாக்கும் வாழ்க! வளர்க!

    ReplyDelete
  9. பிறந்தன்னிக்கே பதிவு போட்ட மதுரை வாழ்க!வளர்க!

    ReplyDelete
  10. வணக்கம் நண்பரே மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் பல பல !

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே,

    தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  13. பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே,

    தாமதத்திற்கு மன்னிக்கவும். hi......hi............hi...........

    ReplyDelete
  14. PIRANTHA NAAL VAZTHUKAAL THOLA.......

    VAZKA VALAMUDAN

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.