Wednesday, March 14, 2012




மக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய கண்ணிரை வரவழைக்கும் பதிவு)

இது வரை நான் பார்த்த வீடியோ படக்காட்சியில் மிக பெஸ்டான க்ளிப் இது. இதை பார்க்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணில் இருந்து கண்ணிர் வழிந்தோடியது. இந்த  உலகில் வசிக்கும் ஓவ்வொரு மனிதனையும் இன்ஸ்பயர் (inspire) செய்யும் வீடியோ க்ளிப் இது. வாழ்க்கையில் எப்படிபட்ட தோல்விகளும் வலிகளும் வந்தாலும் நாம் வீழ்ந்துவிடாமல் இறுதிவரை போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணரவேண்டும்.

எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள முயற்சி செய்து அதில் இருந்து வெளிவர நீ முயற்சி செய்தால் நீ நினைத்தை அடைய முடியும் என்பதையும் அது மட்டுமல்லாமல் நமது பெற்றோர்களும் சகோதர சகோதரிகளும் மற்றும் நண்பர்களும் கடைசி வரை வந்து நாம் வெற்றி அடைய செய்ய உதவி செய்வார்கள் என்பதை இந்த வீடியோ எனக்கு கற்பித்தது . நான் பார்த்து ரசித்து அழுது பாடம் கற்று கொண்ட இந்த வீடியோவை உங்களுக்கு பகிர வேண்டும் என்று நினைத்தன் விளைவே இந்த பதிவு.



பார்த்து ரசித்து உங்கள் குழந்தைகளுக்கும் இதை காண்பிக்க வேண்டுகிறேன். காரணம் இந்த காலத்தில் பாடத்தை தவிர ஸ்கூலில் இதை போன்ற செய்திகளை கற்று கொடுக்க மாட்டார்கள்.








9 comments:

  1. cool runnings என்று ஒரு ஆங்கில படம் உண்டு... அந்த படத்தையும் காண பரிந்துரைக்கிறேன்

    ReplyDelete
  2. சூர்ய ஜீவா நீங்கள் சொன்னபடி முடிந்தால் இந்த வார இறுதிக்குள் அந்த படத்தை பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமை மிக அருமை

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு. பிள்ளைகளை கட்டாயம் பார்க்க சொல்கிறேன்.

    ReplyDelete
  5. அருமையானதொரு காட்சிப்பதிவு.
    பாராட்டுக்கள்; பதிவுக்கு நன்றிகள்.
    ===============================

    தங்களின் வேண்டுகோள்படி
    “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற தலைப்பில் என் பள்ளி அனுபவங்களை வரிசையாக 7 நாட்களில் 7 பகுதிகளாக எழுதி முடித்துவிட்டேன்.

    ஏழாவது பகுதி [நிறைவுப்பகுதி] இன்று இப்போது வெளியிட்டுள்ளேன். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/03/7.html

    நீங்கள் அதில் பல பகுதிகளுக்கு வருகை தரவே இல்லை ;(

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் vgk

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  7. நெகிழ வைக்கும் காட்சி. நமக்குப் பின்புலமாக ஒரே ஒரு அன்பு உள்ளமாவது இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும். வாழ்வதின் அர்த்தமும் உண்மையான் அன்பை அடைவதுதான். இது வெற்றி தோல்வி என்ற வரையறைக்குள் வராது. அருமையான பகிர்விற்கு நன்றி. வாழ்த்துக்கள் மதுரை தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.